search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் புதிய வீடியோ டீசர் வெளியீடூ
    X

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் புதிய வீடியோ டீசர் வெளியீடூ

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிளின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. #jawamotorcycles



    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது புதிய வாகனங்களுக்கென டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. புதிய 15 நொடி வீடியோவில் மோட்டார்சைக்கிள் தெளிவாக தெரியவில்லை, எனினும் ஜாவா மோட்டார்சைக்கிள் என்ஜின் சத்தத்தை வெளிப்படுத்துகிறது.

    சில மாதங்களுக்கு முன் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களின் என்ஜின் அம்சங்களை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து கொண்டிருந்தது. அதன்படி புதிய மோட்டார்சைக்கிளில் 293சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 28 என்.எம். டார்கியூ செய்லதிறனும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

    முந்தைய 2-ஸ்டிரோக் என்ஜின்களை போன்ற சத்தம் எழுப்பும் வகையில் புதிய என்ஜினை ஜாவா பொறியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர். மஹிந்திரா மோஜோவில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜினின் மாடிஃபைடு வெர்ஷன் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் வெளியாகி இருக்கும் ஜாவா மோட்டார்சைக்கிள் டீசரில் என்ஜினின் பிரத்யேக சத்தம் தெளிவாக கேட்கிறது. எனினும், இந்த என்ஜின் 4-ஸ்டிரோக் யூனிட் கொண்டிருக்கிறது. 



    புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு காணரமாக மஹிந்திரா இருசக்கர வாகன விற்பனையகங்கள் மற்றும் பிரத்யேக ஜாவா மையங்களில் பலர் தங்களது சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்கின்றனர். இதே காணரம் கொண்டு புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் வெளியானதும் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் ராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு போட்டியாக அமையும். இந்தியாவில் கிளாசிக் க்ரூசர் மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னணி நிறுவனமாக அறியப்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவன்திற்கு ஜாவா மாடல்கள் பலத்த போட்டியை ஏற்படுத்தும் என எதி்பார்க்கப்படுகிறது.

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் மாடல் விலை ரூ.1.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் குறைந்தபட்சம் நான்கு புதிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் புதிய வீடியோ டீசரை கீழே காணலாம்..,


    Next Story
    ×