search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jawa Motorcycles"

    • ஜாவா நிறுவனத்தின் புதிய 42 பாபர் மாடல் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
    • புதிய ஜாவா 42 பாபர் மாடல் மூன்று வித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஜாவா 42 பாபர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 2 லட்சத்து 06 ஆயிரத்து 500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பாபர் மாடல் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை அதன் நிறத்திற்கு ஏற்ப மாறுபடும்.

    விலை விவரங்கள்:

    மிஸ்டிக் காப்பர் ரூ. 2 லட்சத்து 06 ஆயிரத்து 500

    மூன்ஸ்டோன் வைட் ரூ. 2 லட்சத்து 07 ஆயிரத்து 500

    ஜாஸ்பர் ரெட் (டூயல் டோன்) ரூ. 2 லட்சத்து 09 ஆயிரத்து 187

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய ஜாவா 42 பாபர் மாடலில் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப், கிளாக் கன்சோல், புதிய ஹேண்டில்பார், பார்-எண்ட் மிரர்கள், புதிய வடிவம் கொண்ட பியூவல் டேன்க், டேன்க் பேட்கள், ரி-டிசைன் செய்யப்பட்ட சீட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சாப்டு ஃபெண்டர்கள், லோ-சிங்கில் சீட் மற்றும் அகலமான டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த மோட்டார்சைக்கிளில் 334சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 30.2 ஹெச்பி பவர், 32.74 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் ஃபுல் எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ரிவைஸ்டு ஸ்விட்ச் கியர், டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹார்டுவேர் அம்சங்களை பொருத்தவரை புதிய ஜாவா 42 பாபர் மாடலில் டிஸ்க் பிரேக்குகள், டெலிஸ்கோபிக் முன்புற போர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் யூனிட் மற்றும் வயர் ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது இரு மோட்டார்சைக்கிள்களின் விநியோக விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #JawaMotorcycles



    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இரு மோட்டார்சைக்கிள்களுக்கும் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், முன்பதிவுகள் செப்டம்பர் 2019 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனர் அனுபம் தரேஜா தனது ட்விட்டரில், ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள் மார்ச் மாதத்தின் நான்காவது வாரத்தில் இருந்து விநியோகம் செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார். இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார். 



    அறிமுகம் செய்யப்படும் போது ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. பின் இரண்டு ஜாவா மோட்டார்சைக்கிள்களும் செப்டம்பர் 2019 வரை முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும், எத்தனை மோட்டார்சைக்கிள்கள் முன்பதிவு செய்யப்பட்டன என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    தற்சமயம் வரை ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் நாடு முழுக்க சுமார் 100 விற்பனையகங்களை திறந்திருக்கிறது. விநியோகம் துவங்கியதும் வாடிக்கையாளர்கள் மோட்டார்சைக்கிளுக்கான முழு தொகையை செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம். 

    இந்தியாவில் ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்கள் விலை முறையே ரூ.1.69 லட்சம் மற்றும் ரூ.1.55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இரு மாடல்களிலும் 293சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது.
    ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவன வாகனங்களின் விநியோகம் விரைவில் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. #jawamotorcycles #jawafortytwo



    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்களின் விநியோகத்தை அடுத்த மாத வாக்கில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் ரீஎன்ட்ரி இந்தியாவில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. 

    புதிய ஜாவா பைக்கள் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை அனைத்து யூனிட்களும் விற்றுத் தீர்ந்ததாக அந்நி்றுவனம் முன்னதாக அறிவித்தது. புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களின் முன்பதிவு டிசம்பர் 25 ஆம் தேதியுடன் நிறைவுற்ற நிலையில், இதன் அடுத்தக்கட்ட முன்பதிவு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். 

    ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் 100 விற்பனையகங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே மும்பை, பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 60 ஜாவா விற்பனையகங்கள் டிசம்பர் 2018க்குள் திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.



    ஜாவா 42 மற்றும் ஜாவா என இரு மோட்டார்சைக்கிள் மாடல்களை முறையே ரூ.1.55 லட்சம் மற்றும் ரூ.1.64 லட்சம் விலையில் அறிமுகம் செய்தது. இரண்டு மோட்டார்சைக்கிள்களுடன் ஜாவா நிறுவனம் ஜாவா பெராக் என்ற மோட்டார்சைக்கிளை ரூ.1.89 லட்சம் விலையில் அறிமுகம் செய்தது.

    புதிய ஜாவா 42 மாடலில் 293சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. புது என்ஜின் பி.எஸ். VI ரக எமிஷன் கொண்டிருக்கிறது. ஜாவா பெராக் மாடலில் 334சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் வெளியான தகவல்களின் படி 2019 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களில் பின்புறம் டிஸ்க் பிரேக் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. புதிய டூயல்-சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம் கொண்ட ஜாவா மோட்டார்சைக்கிள்கள் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வசதி கொண்ட மாடல்களின் விலை சாதாரண மாடல்களை விட ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். சமீபத்தில்  ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் இரண்டு விற்பனையகங்கள் பூனேவின் பேனர் மற்றும் சின்ச்வாட் நகரங்களில் துவங்கப்பட்டது.
    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஜாவா பைக்குகளுக்கான காத்திருப்புக் காலம் ஒன்பது மாதங்களாக அதிகரித்துள்ளது. #jawamotorcycles



    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது புதிய ஜாவா பைக்களின் காத்திருப்புக் காலம் ஒன்பது மாதங்களாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் புதிய ஜாவா பைக்கள் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை அனைத்து யூனிட்களும் விற்றுத் தீர்ந்ததாக அறிவித்துள்ளது.

    புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களின் முன்பதிவு இன்றுடன் (டிசம்பர் 25 ஆம் தேதி) நிறைவுபெறுகிறது. புதிய மோட்டார்சைக்கிள்களின் விநியோகம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் துவங்குகிறது. இதன் அடுத்தக்கட்ட முன்பதிவு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். 

    ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் 100 விற்பனையகங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே மும்பை, பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 60 ஜாவா விற்பனையகங்கள் டிசம்பர் 2018க்குள் திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.



    சமீபத்தில் வெளியான தகவல்களின் படி 2019 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களில் பின்புறம் டிஸ்க் பிரேக் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. புதிய டூயல்-சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம் கொண்ட ஜாவா மோட்டார்சைக்கிள்கள் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வசதி கொண்ட மாடல்களின் விலை சாதாரண மாடல்களை விட ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். சமீபத்தில்  ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் இரண்டு விற்பனையகங்கள் பூனேவின் பேனர் மற்றும் சின்ச்வாட் நகரங்களில் துவங்கப்பட்டது. 

    ஜாவா 42 மற்றும் ஜாவா என இரு மோட்டார்சைக்கிள் மாடல்களை முறையே ரூ.1.55 லட்சம் மற்றும் ரூ.1.64 லட்சம் விலையில் அறிமுகம் செய்தது. இரண்டு மோட்டார்சைக்கிள்களுடன் ஜாவா நிறுவனம் ஜாவா பெராக் என்ற மோட்டார்சைக்கிளை ரூ.1.89 லட்சம் விலையில் அறிமுகம் செய்தது.

    புதிய ஜாவா 42 மாடலில் 293சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. புது என்ஜின் பி.எஸ். VI ரக எமிஷன் கொண்டிருக்கிறது. ஜாவா பெராக் மாடலில் 334சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதி கொண்ட மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. #jawamotorcycles



    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் விரைவில் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வசதி கொண்ட மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி 2019 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களில் பின்புறம் டிஸ்க் பிரேக் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வசதி கொண்ட மாடல்களின் விலை சாதாரண மாடல்களை விட ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். சமீபத்தில்  ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் இரண்டு விற்பனையகங்கள் பூனேவின் பேனர் மற்றும் சின்ச்வாட் நகரங்களில் துவங்கப்பட்டது. 



    இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிற்குள் நாடு முழுக்க 105 விற்பனையகங்களை திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஜாவா 42 மற்றும் ஜாவா என இரு மோட்டார்சைக்கிள் மாடல்களை முறையே ரூ.1.55 லட்சம் மற்றும் ரூ.1.64 லட்சம் விலையில் அறிமுகம் செய்தது. 

    இந்தியாவில் ஏ.பி.எஸ். வசதி கொண்ட மோட்டார்சைக்கிள்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகிறது. அந்த வகையில் புதிய டூயல்-சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம். இரண்டு மோட்டார்சைக்கிள்களுடன் ஜாவா நிறுவனம் ஜாவா பெராக் என்ற மோட்டார்சைக்கிளை ரூ.1.89 லட்சம் விலையில் அறிமுகம் செய்தது.

    புதிய ஜாவா 42 மாடலில் 293சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. புது என்ஜின் பி.எஸ். VI ரக எமிஷன் கொண்டிருக்கிறது. ஜாவா பெராக் மாடலில் 334சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் முதல் விற்பனையகங்கள் பூனேவில் திறக்கப்பட்டது. #JawaIsBack

     

    ஜாவா பிரான்டு மோட்டார்சைக்கிள்கள் கடந்த மாதம் இந்திய சந்தையில் ரீ-என்ட்ரி கொடுத்தது. மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களை முதற்கட்டமாக அறிமுகம் செய்த்ருக்கும் ஜாவா அவற்றுக்கான முன்பதிவுகளை ஆன்லைனில் நடத்தி வருகிறது.

    புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களின் விநியோகம் அடுத்த ஆண்டு துவங்க இருக்கும் நிலையில், ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் இரண்டு விற்பனையகம் பூனேவின் பேனர் மற்றும் சின்ச்வாட் நகரங்களில் துவங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிற்குள் நாடு முழுக்க 105 விற்பனையகங்களை திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    இந்தியாவில் புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்யும் போதே ஜாவா நிறுவனம் இந்தியாவில் 105 விற்பனையகங்கள் மற்றும் 3எஸ் மையங்களை விற்பனை, சர்வீஸ் மற்றும் ஸ்பேர் உள்ளிட்டவற்றுக்கென திறக்க இருப்பதாக தெரிவித்தது.



    விற்பனையகங்கள் இயங்க துவங்கி இருக்கும் நிலையில், பூனேவில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களை நேரடியாக முன்பதிவு செய்யலாம். 

    புதிய ஜாவா மோட்டார்டைக்கிள்களின் விநியோகம் ஜனவரி மாதத்தில் துவங்கும் என்றும், ஆன்லைனில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் ஜாவா விற்பனையாளர்களிடம் முன்பதிவு செய்வோர் தங்களது வாகனத்தை பெற சிலகாலம் காத்திருக்க வேண்டும்.

    இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் ஜாவா (ரூ.1.64 லட்சம்), ஜாவா ஃபார்டி டூ (ரூ.1.55 லட்சம்) மற்றும் பெராக் (ரூ.1.89 லட்சம்) என மூன்று மாடல்களை அறிமுகம் செய்த நிலையில், பெராக் மாடல் மட்டும் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிளின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. #jawamotorcycles



    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது புதிய வாகனங்களுக்கென டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. புதிய 15 நொடி வீடியோவில் மோட்டார்சைக்கிள் தெளிவாக தெரியவில்லை, எனினும் ஜாவா மோட்டார்சைக்கிள் என்ஜின் சத்தத்தை வெளிப்படுத்துகிறது.

    சில மாதங்களுக்கு முன் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களின் என்ஜின் அம்சங்களை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து கொண்டிருந்தது. அதன்படி புதிய மோட்டார்சைக்கிளில் 293சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 28 என்.எம். டார்கியூ செய்லதிறனும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

    முந்தைய 2-ஸ்டிரோக் என்ஜின்களை போன்ற சத்தம் எழுப்பும் வகையில் புதிய என்ஜினை ஜாவா பொறியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர். மஹிந்திரா மோஜோவில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜினின் மாடிஃபைடு வெர்ஷன் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் வெளியாகி இருக்கும் ஜாவா மோட்டார்சைக்கிள் டீசரில் என்ஜினின் பிரத்யேக சத்தம் தெளிவாக கேட்கிறது. எனினும், இந்த என்ஜின் 4-ஸ்டிரோக் யூனிட் கொண்டிருக்கிறது. 



    புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு காணரமாக மஹிந்திரா இருசக்கர வாகன விற்பனையகங்கள் மற்றும் பிரத்யேக ஜாவா மையங்களில் பலர் தங்களது சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்கின்றனர். இதே காணரம் கொண்டு புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் வெளியானதும் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் ராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு போட்டியாக அமையும். இந்தியாவில் கிளாசிக் க்ரூசர் மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னணி நிறுவனமாக அறியப்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவன்திற்கு ஜாவா மாடல்கள் பலத்த போட்டியை ஏற்படுத்தும் என எதி்பார்க்கப்படுகிறது.

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் மாடல் விலை ரூ.1.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் குறைந்தபட்சம் நான்கு புதிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் புதிய வீடியோ டீசரை கீழே காணலாம்..,


    இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் முன்பதிவு துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #jawamotorcycles



    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் இந்திய முன்பதிவு விவரங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் சில விற்பனையாளர்கள் ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவு துவங்கி இருப்பதாகவும், புதிய மாடல்களுக்கு ரூ.1,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் நவம்பர் 15ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. சில மாடல்கள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. சில ஸ்பை படங்களில் மோட்டார்சைக்கிளின் சில விவரங்கள் தெரியவந்தது. 

    புகைப்படங்களின் படி புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களின் வடிவமைப்பு முந்தைய 70 மற்றும் 80களில் விற்பனையான ஜாவா பைக்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கிளாசிக் க்ரூசர் மோட்டார்சைக்கிள் பிரிவில் ராயல் என்ஃபீல்டு முன்னணி நிறுவனமாக இருக்கிறது.



    இந்தியாவில் பஜாஜ் அவென்ஜர், சுசுகி இன்ட்ரூடர் மற்றும் யு.எம். ரெனிகேட் போன்ற சில சிறிய ரக க்ரூசர் மாடல்கள் விற்பனையாகி வரும் நிலையில், ராயல் என்ஃபீல்டு மோட்டாகர்சைக்கிள்கள் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த இடைவெளியை குறைத்து மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் என்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் சில மாடல்களின் விலை ரூ.1.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் குறைந்தபட்சம் நான்கு புதிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் மாடல்களில் 293 சிசி லிக்விட் கூல்டு சிங்கிள்-சிலண்டர் என்ஜின் கொண்டிருக்கும் என்றும் இது பார்க்க டூ-ஸ்டிரோக் மோட்டார் போன்றே காட்சியளிக்கிறது. மேலும் இந்த என்ஜினில் ஏர்-கூலிங் ஃபேன்கள், டபுள் எக்சாஸ்ட் பைப்கள் கொண்டிருக்கிறது.
    ×