search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் முன்பதிவு விவரம்
    X

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் முன்பதிவு விவரம்

    இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் முன்பதிவு துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #jawamotorcycles



    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் இந்திய முன்பதிவு விவரங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் சில விற்பனையாளர்கள் ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவு துவங்கி இருப்பதாகவும், புதிய மாடல்களுக்கு ரூ.1,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் நவம்பர் 15ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. சில மாடல்கள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. சில ஸ்பை படங்களில் மோட்டார்சைக்கிளின் சில விவரங்கள் தெரியவந்தது. 

    புகைப்படங்களின் படி புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களின் வடிவமைப்பு முந்தைய 70 மற்றும் 80களில் விற்பனையான ஜாவா பைக்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கிளாசிக் க்ரூசர் மோட்டார்சைக்கிள் பிரிவில் ராயல் என்ஃபீல்டு முன்னணி நிறுவனமாக இருக்கிறது.



    இந்தியாவில் பஜாஜ் அவென்ஜர், சுசுகி இன்ட்ரூடர் மற்றும் யு.எம். ரெனிகேட் போன்ற சில சிறிய ரக க்ரூசர் மாடல்கள் விற்பனையாகி வரும் நிலையில், ராயல் என்ஃபீல்டு மோட்டாகர்சைக்கிள்கள் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த இடைவெளியை குறைத்து மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் என்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் சில மாடல்களின் விலை ரூ.1.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் குறைந்தபட்சம் நான்கு புதிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் மாடல்களில் 293 சிசி லிக்விட் கூல்டு சிங்கிள்-சிலண்டர் என்ஜின் கொண்டிருக்கும் என்றும் இது பார்க்க டூ-ஸ்டிரோக் மோட்டார் போன்றே காட்சியளிக்கிறது. மேலும் இந்த என்ஜினில் ஏர்-கூலிங் ஃபேன்கள், டபுள் எக்சாஸ்ட் பைப்கள் கொண்டிருக்கிறது.
    Next Story
    ×