என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார்சைக்கிள்"

    • இந்த மாடலில் 648 சிசி டுவின் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
    • இந்த யூனிட் 46.4 ஹெச்.பி. பவர், 52.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புல்லட் 650' பைக்கை இத்தாலியில் நடைபெற்று வரும் 2025 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

    வரும் மாதங்களில் புல்லட் 650 பைக் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்பார்க்கப்படுகிறது.

    இந்த மாடலில் 648 சிசி டுவின் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த யூனிட் 46.4 ஹெச்.பி. பவர், 52.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    இந்த பைக்கின் விலை சுமார் ரூ.3.4 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மேவ்ரிக் 440 மாடலை கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்தது.
    • ரூ.2 லட்சத்தில் இருந்து இந்த பைக்கின் விலை தொடங்கியது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிளான மேவ்ரிக் 440 மாடலை கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது.

    ஹீரோ மேவ்ரிக் 440 பேஸ் மாடல் விலைரூ. 1 லட்சத்து 99 ஆயிரத்திற்கும் மிட் வேரியன்ட் விலை ரூ. 2 லட்சத்து 24 ஆயிரத்திற்கும் டாப் என்ட் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 39 ஆயிரத்து 500 க்கும்விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில், இந்தியாவில் Mavrick 440 பைக்கின் விற்பனையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நிறுத்தியுள்ளது.

    ரூ.2 லட்சத்தில் தொடங்கிய இந்த பைக், வாடிக்கையாளர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பதால் இந்த நடவடிக்கையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எடுத்துள்ளது. 

    • ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிளில் 349சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
    • 2025 ஹண்டர் 350க்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

    ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய அப்டேட்களுடன் HUNTER 350 2025 மாடல் பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

    இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ. 1,49,900-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Rio White, Tokyo Black. London Red என 3 புதிய நிறங்களில் இந்த பைக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இந்த புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிளில் 349சிசி, ஏர்/ஆயில்-கூல்டு, ஜே-சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 20.2 பி.ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் தான் கிளாசிக் 350 மற்றும் மீடியோர் 350 போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    2025 ஹண்டர் 350க்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் டெலிவரி தொடங்கும் என ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    • இந்த புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகளவு மேம்படுத்தப்பட்டுள்ளது.
    • புதிய மாடலிலும் 649சிசி, பேரலெல் ட்வின், லிக்விட்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கவாசகி இந்தியா நிறுவனம் மேம்பட்ட நின்ஜா 650 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 2025 கவாசகி நின்ஜா 650 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 7 லட்சத்து 27 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகளவு மேம்படுத்தப்பட்டு உள்ளதால், முந்தைய மாடலை விட இதன் விலை ரூ. 11,000 அதிகரித்துள்ளது.

    2025 நிஞ்ஜா 650 பைக் பச்சை நிறத்தில் வெள்ளை, மஞ்சள் மற்றும் கருப்பு நிற கோடுகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    புதிய மாடலிலும் 649சிசி, பேரலெல் ட்வின் லிக்விட்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 67 ஹெச்பி பவர், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் பைக் 803 சிசி ஏர்/ஆயில் கூல்டு எல்-ட்வின் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
    • இந்த பைக்கின் எஞ்சின் 8,250 rpm இல் 73 hp ஆற்றலை வெளிப்படுத்தும்.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது

    இந்த பைக்கின் விலை ரூ. 9.97 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டுகாட்டி அறிமுகப்படுத்திய பைக்குகளில் இது மிகவும் விலை குறைவான பைக் என்று சொல்லப்படுகிறது.

    ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் பைக்கின் விலை இதற்கு முன்பு வெளியான ஸ்க்ராம்ப்ளர் ஐகான் மாடலை விட ரூ.94,000 குறைவாகும்.

    டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ஐகான் டார்க் பைக் 803 சிசி ஏர்/ஆயில் கூல்டு எல்-ட்வின் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.

    இந்த எஞ்சின் 8,250 rpm இல் 73 hp ஆற்றலையும், 7,000 rpm இல் சுழலும் போது 65 Nm டார்க் விசையையும் உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக டுகாட்டி நிறுவனம் தனது டெசெர்ட் எக்ஸ் டிஸ்கவரி பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த பைக் ரூ.21.78 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • ராயல் என்பீல்டு நிறுவனம் சில மாதங்களுக்கு முன் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
    • புதிய ஹண்டர் 350 ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிள் ஆகும்.

    ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. ஹண்டர் 350 மாடல் குறைந்த விலையில் எண்ட்ரி லெவல் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளாக நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஹண்டர் 350 மாடல் விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி செப்டம்பர் மாதத்தில் மட்டும் ராயல் என்பீல்டு நிறுவனம் 17 ஆயிரத்து 118 ஹண்டர் 350 யூனிட்களை விற்பனை செய்ததாக அறிவித்து இருக்கிறது. இது ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையானதை விட குறைவு ஆகும். ஆகஸ்ட் மாதத்தில் 18 ஆயிரத்து 197 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

    செப்டம்பரில் ஹோண்டா சிபி350 மாடல் மொத்தத்தில் 3 ஆயிரத்து 980 யூனிட்களே விற்பனையாகி இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் 3 ஆயிரத்து 714 யூனிட்கள் விற்பனையானது. விற்பனையில் இவ்வளவு வித்தியாசம் ஏற்பட ஹண்டர் 350 மற்றும் சிபி350 விலை காரணமாக இருக்கலாம். இந்தியாவில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது.

    ஹோண்டா சிபி350 விலை ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை மட்டுமின்றி விற்பனை விற்பனை மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் உள்ளிட்டவையும் ராயல் என்பீல்டு விற்பனை அதிகரிக்க காரணமாக இருக்கும். ஹோண்டா தனது சிபி350 மோட்டார்சைக்கிளை பிங்விங் விற்பனை மையங்களிலேயே விற்பனை செய்து வருகிறது. 

    • கேடிஎம் நிறுவனத்தின் புதிய 2023 RC 8C மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இது லிமிடெட் எடிஷன் டிராக் சூப்பர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ஆகும்.

    கேடிஎம் நிறுவனம் 2023 RC 8C லிமிடெட் எடிஷன் டிராக்-ஒன்லி சூப்பர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ஆகும். சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருக்கும் லிமிடெட் எடிஷன் மாடல் காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்களை பெற்று இருக்கிறது. 2023 கேடிஎம் RC 8C மாடல் முற்றிலும் புதிய நிறம், ஏரோ பேக்கேஜில் மாற்றம், மேம்பட்ட எலெக்ட்ரிக் அம்சங்கள், உயர் ரக உபகரணங்களை கொண்டிருக்கிறது.

    செயல்திறனை பொருத்தவரை 2023 கேடிஎம் RC 8C மாடல் 133 ஹெச்பி பவர், 98 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய மாட்கள், குறைந்த எடை கொண்ட டைட்டானியம் வால்வுகள், காண்ராட், இரு பிஸ்டன் ரிங், அதிக கம்ப்ரெஷன் ரேட், பெரிய திராட்டில் பாடி, போல்ஸ்டர் செய்யப்பட்ட பியூவல் பம்ப் / பிரெஷர் காரணமாக இந்த மாடலின் திறன் 6.9 ஹெச்பி வரை அதிகரித்து இருக்கிறது.

    மேலும் இந்த மோட்டார்சைக்கிளின் கிளட்ச் பிரீலோடு அதிகரிக்கப்பட்டு, டாப் பேலன்சர் நீக்கப்பட்டு, கிரான்க்-கேஸ் பேலன்சர் அட்ஜஸ்ட் செய்யப்பட்டு இருப்பதாக கேடிஎம் தெரிவித்து உள்ளது. மேலும் இதன் தெர்மல் ஸ்டேபிலிட்டியை உறுதிப்படுத்த PANK ஆயில் கூலர் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது. 2023 கேடிஎம் RC 8C மாடலின் ஒட்டுமொத்த எடை 142 கிலோ ஆகும். இதில் உள்ள முற்றிலும் புது டைட்டானியம் அக்ரபோவிக் எக்சாஸ்ட் சிஸ்டம் எடை குறைய உதவுகிறது.

    புதிய லிமிடெட் எடிஷன் RC 8C மாடலின் டிராக்‌ஷன் கண்ட்ரோல், மேப்பிங் மற்றும் என்ஜின் பிரேக்கிங் உள்ளிட்டவைகளை ரைடர்கள் கஸ்டமைஸ் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டீரிங் ஹெட், திராட்டில் ரெஸ்பான்ஸ், பிரெம்போ ஸ்டைல்மா கேலிப்பர், RCS 19 கோர்சா கோர்சா மாஸ்டர் சிலிண்டர் உள்ளிட்டவைகளில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இதன் காக்பிட் பகுதியில் மேம்பட்ட டேஷ்போர்டு, ஜிபிஎஸ் டேட்டா லாகர், கேடிஎம் RC16 சார்ந்து உருவாக்கப்பட்ட ஹேண்டில்பார் ஸ்விட்ச்கள் உள்ளன. 2023 கேடிஎம் RC 8C மாடல் மொத்தத்தில் 200 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட உள்ளன. இவை ஒவ்வொன்றின் ட்ரிபில் கிளாம்பில் பிரத்யேக சீரியல் நம்பர் இடம்பெற்று இருக்கும்.

    • ராயல் என்பீல்டு நிறுவனம் புதிதாக 650சிசி மோட்டார்சைக்கிளை நீண்ட காலமாக சோதனை செய்து வருகிறது.
    • இந்த மோட்டார்சைக்கிள் முதலில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி அதன்பின் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளை அடுத்த மாதம் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. 2022 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் இந்தியாவில் ரைடர் மேனியா 2022 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக சோதனை செய்யப்பட்டு வரும் குரூயிசர் மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இண்டர்செப்டார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், 650சிசி பிரிவில் புது மாடலை அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

    சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து நவம்பர் 18 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் 2022 ரைடர் மேனியா நிகழ்வில் சூப்பர் மீடியோர் 650 மாடல் அறிமுகம் செய்யப்படலாம். கிளாசிக் 500 மற்றும் புல்லட் 500 பயன்படுத்துவோர் இந்த மாடலுக்காக காத்திருக்கின்றனர்.

    அதிக செயல்திறன் மற்றும் இருக்கை அமைப்பு காரணமாக இண்டர்செப்டார் 650 இந்த வாடிக்கையாளர்களுக்கு கச்சிதமான மாடலாக அமையவில்லை. இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் சூப்பர் மீடியோர் 650 பதில் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் ஃபூட் பெக்-கள் முன்புறமாக அமைக்கப்பட்டு உள்ளது.

    புதிய சூப்பர் மீடியோர் 650 விலை இண்டர்செப்டார் மாடலை விட ரூ. 20 ஆயிரம் வரை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 விலை ரூ. 3 லட்சத்து 05 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    Photo Courtesy: Bikewale

    • டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் லிமிடெட் எடிஷன் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தது.
    • புதிய லிமிடெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் விற்பனை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே நடைபெற இருக்கிறது.

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் லிமிடெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. மொத்தத்தில் எட்டு லிமிடெட் எடிஷன் மோட்டார்சைக்கிள்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இவை அனைத்திலும் க்ரோம் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது.

    க்ரோம் எடிஷன்கள் ராக்கெட் மற்றும் போன்வில் ரக மாடல்களில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லிமிடெட் எடிஷன் மாடல்கள் ஒரு வருடத்திற்கு மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். எனினும், லிமிடெட் எடிஷன் மாடல்கள் மொத்தத்தில் எத்தனை யூனிட்கள் உற்பத்தி செய்யப்படும் என்பது குறித்து டிரையம்ப் நிறுவனம் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    புதிய லிமிடெட் எடிஷன் க்ரோம் மாடல்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு சந்தையிலும் விற்பனை செய்யப்பட உள்ளன. க்ரோம் எடிஷன் மோட்டார்சைக்கிள்களை உருவாக்க புது வொர்க்‌ஷாப் அமைக்கப்பட்டு இருப்பதாக டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. லிமிடெட் எடிஷன் மாடலில் கூடுதல் அக்சஸரிக்கள் மற்றும் பைக்கை சுற்றி க்ரோம் பினிஷ் செய்யப்படுகிறது.

    க்ரோம் பினிஷ் செய்யப்பட்ட லிமிடெட் எடிஷன் சீரிசில் விலை உயர்ந்த ராக்கெட் 3 ஜிடி மாடலில் பியூவல் டேன்க் க்ரோம் பினிஷ் மற்றும் ரெட் அக்செண்ட் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் ஜெட்-பிளாக் ஹெட்லைட், ஃபிளை ஸ்கிரீன், முன்புற மட்கார்ட், ரேடியேட்டர் கௌல்கள், சைடு பேனல்கள், ரியர் பாடிவொர்க் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ. 21 லட்சத்து 40 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ராக்கெட் 3 மாடலிலும் க்ரோம் பியூவல் டேன்க், பிளாக் அக்செண்ட் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் பிளாக் ஃபிளை ஸ்கிரீன், ஹெட்லைட் கௌல்கள், முன்புற மட்கார்ட், ரேடியேட்டர் கௌல்கள், சைடு பேனல்கள் மற்றும் ரியர் பாடிவொர்க் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ. 20 லட்சத்து 80 ஆயிரம் ஆகும்.

    போன்வில் டி120 க்ரோம் எடிஷனில் க்ரோம் டேன்க், புளூ அக்செண்ட்கள், பிளாக் மட்கார்ட், சைடு பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ. 11 லட்சத்து 89 ஆயிரம் ஆகும். இதன் பாபர் மாடலிலும் க்ரோம் பியூவல் டேன்க், பிளாக் அக்செண்ட்கள், 3டி டிரையம்ப் பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 12 லட்சத்து 85 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    பேன்வில் ஸ்பீடுமாஸ்டர் க்ரோம் எடிஷன் விலை ரூ. 12 லட்சத்து 85 ஆயிரம் ஆகும். இதில் க்ரோம் பியூவல் டேன்க் மற்றும் ரெட் சரவுண்ட்கள் செய்யப்பட்டுள்ளது. போன்வில் டி100 மாடலில் புளூ பியூவல் டேன்க், க்ரோம் மெட்டல் ஸ்ட்ரிப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் க்ரோம் பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளன.

    ஸ்பீடு ட்வின் 900 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 900 மாடல்களின் விலை முறையே ரூ. 8 லட்சத்து 84 ஆயிரம், ரூ. 9 லட்சத்து 94 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனேவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் விரைவில் துவங்குகிறது.

    • கேடிஎம் நிறுவனம் தனது 1290 சூப்பர் டியூக் மாடலை அப்டேட் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இது கேடிஎம் நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் நேக்கட் ஸ்டிரீட் மோட்டார்சைக்கிள் மாடல் ஆகும்.

    கேடிஎம் நிறுவனம் 2023 கேடிஎம் 1290 சூப்பர் டியூக் மோட்டார்சைக்கிளை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது கேடிஎம் நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் நேக்கட் ஸ்டிரீட் பைக் ஆகும். இந்த ஆண்டு மே மாதம் முதல் 1290 சூப்பர் டியூக் மாடல் டெஸ்டிங் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், 2023 கேடிஎம் 1290 சூப்பர் டியூக் மாடலின் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முந்தைய ஸ்பை படங்களை போன்றே, தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களிலும் புது பைக்கின் டிசைன் தெளிவாக தெரிகிறது. வழக்கமான ஹெட்லேம்ப் மற்றும் கிளாஸ் ஸ்கிரீனுக்கு பதில் இந்த மோட்டார்சைக்கிளில் ஆங்குலர் காண்டர் செய்யப்பட்ட முன்புற கௌல், எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டு உள்ளது.

    இதன் பியூவல் டேன்க் பகுதியில் கூர்மையான மற்றும் மஸ்குலர் எக்ஸ்டென்ஷன்கள் உள்ளன. இந்த பைக்கின் பின்புறமும் அதிகளவு மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த மாற்றங்கள் மட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியில் அதிக அம்சங்களை புதிய 1290 சூப்பர் டியூக் பெறும் என கூறப்படுகிறது. புதிய சூப்பர் டியூக் மாடலின் என்ஜின் கேசிங்கில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    டெஸ்டிங் செய்யப்படும் யூனிட்களில் எக்சாஸ்ட் ஹெடரில் சென்சார்கள் பொருத்தப்பட்டு இருந்தன. இதன் காரணமாக 1308சிசி, LC8, வி ட்வின் என்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். 2023 கேடிஎம் சூப்பர் டியூக் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    Photo Courtesy: carspymedia

    • 2023 டுகாட்டி டயவெல் V4 மோட்டார்சைக்கிளில் கிராண்டூரிஸ்மோ 1158சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய டயவெல் V4 மாடலின் ஒட்டு மொத்த எடை 223 கிலோ ஆகும்.

    டுகாட்டி நிறுவனம் புதிய டயவெல் V4 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டயவெல் V4 மாடலில் ஏர் இண்டேக், எல்இடி லைட்டிங், குவாட்ருபில் மெஷின் கன் டெயில் பைப் எக்சாஸ்ட், V4 கிராண்டூரிஸ்மோ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள 1158சிசி V4 என்ஜின் 166 ஹெச்பி பவர், 126 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 2023 டுகாட்டி டயவெல் V4 மாடல் எடை குறைவாகவும், அதிக கச்சிதமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பராமரிப்பை பொருத்தவரை "பிக்" சர்வீஸ் செய்வதற்கான இடைவெளி 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் உள்ள டி-ஆக்டிவேஷன் சிஸ்டம் என்ஜினில் உள்ள சிலிண்டர்களை பயன்பாட்டுக்கு ஏற்ப பயன்படுத்துகிறது.

    சஸ்பென்ஷனை பொருத்தவரை டுகாட்டி டயவெல் V4 மாடலில் இன்வர்ட் செய்யப்பட்ட 50mm போர்க்குகள், கன்டிலிவர் ரியர் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு சஸ்பென்ஷனையும் அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. பிரேக்கிங் சிஸ்டத்தை பொருத்தவரை பிரெம்போ ஸ்டைல்மா கேலிப்பர்கள், முன்புறம் 330mm ட்வின் டிஸ்க் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய 2023 டுகாட்டி டயவெல் V4 மாடலில்- ஸ்போர்ட், டூரிங் மற்றும் அர்பன் என மூன்று விதமான டிரைவிங் மோட்கள் உள்ளன. இத்துடன் டுகாட்டி டிராக்‌ஷன், ஏபிஎஸ் கார்னெரிங் மற்றும் டுகாட்டி வீலி கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஹயபுசா மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    • புது லிமிடெட் எடிஷன் ஹயபுசா மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

    சுசுகி நிறுவனம் ஹயபுசா லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லிமிடெட் எடிஷன் மாடல் "Bol d'Or " என அழைக்கப்படுகிறது. ஹயபுசா லிமிடெட் எடிஷன் மாடலில் காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் அப்டேட்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாடலில் ஹயபுசாவின் பாரம்பரிய அம்சங்களுடன் புதிய பெயிண்ட் மற்றும் விசேஷ ஸ்டிக்கரிங் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஹயபுசா ஸ்டாண்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது புதிய மாடலில் பெரிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஃபிளாட் சேடில், ரியர் சீட் கௌல், முன்புற பிரேக் மற்றும் கிளட்ச் லீவர் அப்கிரேடு, சிறிய டெயில் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலிலும் 1340 சிசி லிக்விட் கூல்டு இன்-லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அக்ரபோவிக் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் என்ஜின் கிரான்க்-கேஸ் தற்போது கார்பன் பைபர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய சுசுகி ஹயபுசா "Bol d'Or" எடிஷன் மொத்தத்தில் 100 யூனிட்களே விற்பனை செய்யப்பட உள்ளன. இது பிரான்ஸ் நாட்டு சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    சுசுகி ஹயபுசா Bol d'Or லிமிடெட் எடிஷன் விலை 27 ஆயிரத்து 499 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 22 லட்சத்து 60 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது விற்பனை செய்யப்படும் சுசுகி ஹயபுசா ஸ்டாண்டர்டு மாடலை லிமிடெட் எடிஷன் விலை அதிகம் ஆகும். இந்தியாவில் சுசுகி ஹயபுசா மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 41 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ×