என் மலர்
நீங்கள் தேடியது "புல்லட்"
- இந்த மாடலில் 648 சிசி டுவின் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
- இந்த யூனிட் 46.4 ஹெச்.பி. பவர், 52.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புல்லட் 650' பைக்கை இத்தாலியில் நடைபெற்று வரும் 2025 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
வரும் மாதங்களில் புல்லட் 650 பைக் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்பார்க்கப்படுகிறது.
இந்த மாடலில் 648 சிசி டுவின் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த யூனிட் 46.4 ஹெச்.பி. பவர், 52.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
இந்த பைக்கின் விலை சுமார் ரூ.3.4 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 1985-ம் ஆண்டு வெளியான ‘உதய கீதம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
- சில காரணங்களால் 1997-ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், தனது சகோதரர் எல்வினுடன் 'புல்லட்' படத்தில் நடித்து வருகிறார். அமானுஷ்ய கதைக்களத்தில் தயாராகும் இப்படத்தில் டிஸ்கோ சாந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
1985-ம் ஆண்டு வெளியான 'உதய கீதம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான டிஸ்கோ சாந்தி, 80 மற்றும் 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக, கவர்ச்சி கன்னியாக திகழ்ந்தார். இவரது நடனத்துக்கு ரசிகர்கள் ஏராளம். சில காரணங்களால் 1997-ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
28 ஆண்டுகளுக்கு பிறகு, அவர் மீண்டும் நடிக்க வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தில் அவர் ஒரு சூனியக்காரியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. வைஷாலி ராஜ், சுனில், அரவிந்த் ஆகாஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் புல்லட் படத்தில் டீசரை எஸ்.ஜே,சூர்யா, பிருத்விராஜ், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் வெளியிட்டனர்.
- இப்படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார்.
- படத்தின் இசையை சாம் சி எஸ் மேற்கொண்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனிடையே திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் அடுத்ததாக புல்லட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் அருள்நிதி நடிப்பில் வெளியான டைரி திரைப்படத்தை இயக்கியவராவார். படத்தின் இசையை சாம் சி எஸ் மேற்கொண்டுள்ளார்.
இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வைஷாலி ராஜ் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரை நடிகர் விஷால் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். டீசர் காட்சியில் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் அசம்பாவித சம்பவங்களுக்கு ஏற்கனவே வேறொரு நபருடைய வாழ்வில் தொடர்பு இருக்கிறது என காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் மற்றும் எல்வின் கதாப்பாத்திரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கும் என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
- இப்படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார்.
- படத்தின் இசையை சாம் சி எஸ் மேற்கொண்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனிடையே திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் அடுத்ததாக புல்லட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் அருள்நிதி நடிப்பில் வெளியான டைரி திரைப்படத்தை இயக்கியவராவார். படத்தின் இசையை சாம் சி எஸ் மேற்கொண்டுள்ளார்.
இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வைஷாலி ராஜ் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு நாளை மாலை வெளியிட இருப்பதை படக்குழு போஸ்டர் வெளியீட்டு அறிவித்துள்ளது . டீசரை நடிகர் விஷால் வெளியிட இருக்கிறார்.
- இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘புல்லட்’.
- இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார்.
'டைரி' பட இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புல்லட்'.இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இப்படத்தை பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிக்கிறார்.

விறுவிறுப்பான ஆக்ஷன், த்ரில்லர் ஆக உருவாக உள்ள இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகையான வைஷாலி ராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கே பி ஒய் வினோத், விஜே தணிகை, சென்றாயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்திற்கு 'டிமான்டி காலனி', 'டைரி' உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாளுகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

புல்லட் போஸ்டர்
இந்நிலையில், 'புல்லட்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
நடிகர் சுனில், ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Very happy to have @suneeltollywood sir onboard for #bullet❤️ Looking forward to work with him❤️?@elviinvinu_off @5starcreationss @SamCSmusic @IamVaishaliRaj pic.twitter.com/BUlms5zm9E
— Innasi Pandiyan (@innasi_dir) August 13, 2023
- போக்குவரத்து நெரிசலால், வழிவிட இயலவில்லை என ஆட்டோ ஓட்டுநர் விளக்கம்.
- தாக்குதல் நடத்திய இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு.
டெல்லியில் வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநரை சாலையில் வைத்து இளம்பெண் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புல்லட்டில் சென்ற இளம்பெண்ணிற்கு ஓட்டுநர் வழிவிடவில்லை என்ற ஆத்திரத்தில் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண் திடீரென ஓட்டுநரைத் தாக்க ஆரம்பித்தார். இளம்பெண் தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.
வீடியோ வைரலானதை அடுத்து, தாக்குதல் நடத்திய இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசலால், வழிவிட இயலவில்லை என இந்த சம்பவத்திற்கு அடுத்து ஆட்டோ ஓட்டுநர் விளக்கம் அளித்தார்.
- இந்த புல்லட் பைக்கின் விலை ரூ 1.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்த பைக்கில் 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 பைக்கின் பெட்டாலியன் பிளாக் எடிசன் தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
பழைய புல்லட் பைக்கின் ரெட்ரோ லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புல்லட் பைக்கின் விலை ரூ 1.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.2 எச்பி பவரையும் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் முன்பக்க பிரேக்கிற்கு 300 மிமீ டிஸ்க்கும் பின்பக்க பிரேக்கிற்கு 153மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளது.
- திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
- இப்படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனிடையே திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் நடித்து வரும் புல்லட் திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் அருள்நிதி நடிப்பில் வெளியான டைரி திரைப்படத்தை இயக்கியவராவார்.
இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வைஷாலி ராஜ் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. படத்தைப் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராகவா லாரன்ஸ் அடுத்ததாக புல்லட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- படத்தின் இசையை சாம் சி எஸ் மேற்கொண்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனிடையே திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் அடுத்ததாக புல்லட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் அருள்நிதி நடிப்பில் வெளியான டைரி திரைப்படத்தை இயக்கியவராவார். படத்தின் இசையை சாம் சி எஸ் மேற்கொண்டுள்ளார்.
இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வைஷாலி ராஜ் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது .இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.