ராகவா லாரன்ஸின் புல்லட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ராகவா லாரன்ஸ் அடுத்ததாக புல்லட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.படத்தின் இசையை சாம் சி எஸ் மேற்கொண்டுள்ளார்.
ராகவா லாரன்ஸின் புல்லட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Published on

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனிடையே திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் அடுத்ததாக புல்லட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் அருள்நிதி நடிப்பில் வெளியான டைரி திரைப்படத்தை இயக்கியவராவார். படத்தின் இசையை சாம் சி எஸ் மேற்கொண்டுள்ளார்.

இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வைஷாலி ராஜ் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது .இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com