என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகவா லாரன்ஸ்"

    • அவரது குரலைக் கேட்டது உண்மையிலேயே எனது நாளையே மாற்றியது!
    • அவரது அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

    தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இதுமட்டுமில்லாமல் ஏழை மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுபவர் இவர். இதனால் சினிமாவையும் தாண்டி பல லட்சம் பேர் அவரது ரசிகர்களாக உள்ளனர்.

    இந்த நிலையில், இன்று தனது 49-வது பிறந்தநாளை லாகவா ரான்ஸ் கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ராகவா லாரன்ஸூக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரஜினிக்கு நன்றி தெரிவித்து ராகவா லாரன்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தலைவரின் அன்புக்கு நன்றி!"

    இன்று தலைவர் எனது பிறந்தநாளை மிகவும் சிறப்பானதாக்கினார் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதிகாலையில் எனக்கு இனிமையான வாழ்த்துகளை அனுப்பினார். அவரது குரலைக் கேட்டது உண்மையிலேயே எனது நாளையே மாற்றியது! அவரது அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்று கூறியுள்ளார். 

    ரஜினியுடனான சந்திப்பு குறித்து ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

    இதுதொடர்பாக, ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறுகையில்," சில மாதங்களுக்கு பிறகு, இன்று தலைவருடன் தரமான நேரத்தைச் செலவிட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அவருடன் பகிர்ந்து கொள்ளக் கிடைக்கும் ஒவ்வொரு தருணத்தையும் நான் உண்மையிலேயே போற்றுகிறேன்" என்றார்.

    • முதிய தம்பதி குறித்து அறிந்து அவர்களுக்கு உதவ ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.
    • அவர்களுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுக்க தயாராக இருக்கிறேன்.

    நடிகர், இயக்குனர், நடன கலைஞர் என பன்முக திறமை கொண்டு ராகவா லாரன்ஸ் அவரது உதவி செய்யும் குணத்திற்காக அறியப்படுகிறார்.

    இந்நிலையில் சென்னையில் ரெயில்களில் இனிப்பு விற்கும் முதிய தம்பதி குறித்து அறிந்து அவர்களுக்கு உதவ ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சென்னையில் 80 வயது முதியவரும் அவர் மனைவியும் இனிப்பு தயாரித்து ரெயில்களில் விற்பனை செய்வதை இணையதளம் மூலம் அறிந்தேன். அவர்களுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுக்க தயாராக இருக்கிறேன்.

    முதியவர் காண்பித்திருக்கும் செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் பற்றி விவரம் தெரிந்தவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்" என்று ராகவா லாரன்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். 

    • இப்படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார்.
    • படத்தின் இசையை சாம் சி எஸ் மேற்கொண்டுள்ளார்.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனிடையே திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் அவர் அடுத்ததாக புல்லட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் அருள்நிதி நடிப்பில் வெளியான டைரி திரைப்படத்தை இயக்கியவராவார். படத்தின் இசையை சாம் சி எஸ் மேற்கொண்டுள்ளார்.

    இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வைஷாலி ராஜ் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரை நடிகர் விஷால் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். டீசர் காட்சியில் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் அசம்பாவித சம்பவங்களுக்கு ஏற்கனவே வேறொரு நபருடைய வாழ்வில் தொடர்பு இருக்கிறது என காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ராகவா லாரன்ஸ் மற்றும் எல்வின் கதாப்பாத்திரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கும் என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

    • இப்படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார்.
    • படத்தின் இசையை சாம் சி எஸ் மேற்கொண்டுள்ளார்.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனிடையே திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் அவர் அடுத்ததாக புல்லட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் அருள்நிதி நடிப்பில் வெளியான டைரி திரைப்படத்தை இயக்கியவராவார். படத்தின் இசையை சாம் சி எஸ் மேற்கொண்டுள்ளார்.

    இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வைஷாலி ராஜ் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு நாளை மாலை வெளியிட இருப்பதை படக்குழு போஸ்டர் வெளியீட்டு அறிவித்துள்ளது . டீசரை நடிகர் விஷால் வெளியிட இருக்கிறார்.

    • திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டராக உருவானது.
    • இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

    கடந்த 2023 ஆம் ஆண்டு நிகில் நாகேஷ் இயக்கத்தில் லக்ஷ்ய, ராகவ் ஜுயல், ஆஷிஷ் வித்யார்த்தி, தன்யா மற்றும் பலர் நடிப்பில் வெளியானது கில் திரைப்படம்.

    திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டராக உருவானது. திரைப்படம் ஓர் இரவில் ஒரு டிரெய்னில் நடக்கும் கதைக்களமாக மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இந்நிலையில் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

    ரீமேக் செய்யும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் முதலில் கதாநாயகனாக நடிக்க இருந்தது ஆனால் சில சூழ்நிலைக்காரணமாக படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த படத்தை ராக்ஷசடு, கில்லாடி போன்ற படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளார். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    துருவ் விக்ரம் தற்பொழுது மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.
    • ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

    லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

    இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே ரெமோ, சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பென்ஸ் திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.

    படத்தின் இசையை இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தில் நடிகர் மாதவன் , நிவின் பாலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் கடந்த மாதம் தொடங்கியது.படத்தின் வில்லன் கதாப்பாத்திரமான ட்வின் ஃபிஷ் வால்டர் என்ற கதாப்பாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார்.

    இந்நிலையில் படத்தில் மடோனா செபாஸ்டியன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோ திரைப்படத்தில் மடோனா விஜயின் தங்கை கதாப்பாத்திரமாக நடித்து இருந்தார். லியோ படத்தில் மடோனா இறுதியில் இறந்து விடுவார். எனவே பென்ஸ் திரைப்படம் லியோ படத்திற்கு முன் நடக்கும் கதைக்களமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    மேலும் நடிகை சம்யுக்தா மேனன் மற்றும் பிரியங்கா மோகன் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    • கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
    • இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

    லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

    இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே ரெமோ, சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பென்ஸ் திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.

    படத்தின் இசையை இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். படத்தில் நடிகர் மாதவன் , நிவின் பாலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படப்பிடிப்பு பணிகள் கடந்த மாதம் தொடங்கியது.

    இந்நிலையில் படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்தை நாளை வெளியிடப்போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இது நிவின் பாலியாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • லோகேஷ் கனகராஜின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.
    • பென்ஸ் திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.

    லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

    இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே ரெமோ, சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பென்ஸ் திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.

    படத்தின் இசையை இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். படத்தில் நடிகர் மாதவன் , நிவின் பாலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று புஜையுடன் தொடங்கியது. இந்நிலையில், பென்ஸ் படத்தின் போகையில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.
    • பென்ஸ் திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.

    லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

    இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே ரெமோ, சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பென்ஸ் திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.

    படத்தின் இசையை இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். படத்தில் நடிகர் மாதவன் , நிவின் பாலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படப்பிடிப்பு பணிகள் இன்று புஜையுடன் தொடங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிப்பு மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் பாலா
    • பாலா திரைத்துறையில் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார்.

    தனது நடிப்பு, நகைச்சுவை தன்மையுடன் அவரது திறமையை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் வெளிக்காட்டி பிரபலமானவர் KPY பாலா. அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மனதில் நிறந்தர இடம் பிடித்தார். தனக்கென ஒரு முக பாவனை, உடலமைப்பு , கவுண்டர் வசங்களை பேசினார்.

    நடிப்பு மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் மேலும் இவரால் முடிந்த உதவியை பல மக்களுக்கு செய்து வருகிறார். அதைத்தொடர்ந்து ராகவா லாரன்சின் மாற்றம் அறக்கட்டளையின் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

    தற்பொழுது பாலா திரைத்துறையில் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தை வைபவின் ரணம் அறம் தவறேல் திரைப்படத்தை இயக்கிய ஷெரிஃப் இயக்குகிறார். படத்தில் நமிதா கிருஷ்ணமூர்த்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    படத்தின் இசையை மெர்வின் சாலமன் மற்றும் விவேக் மேற்கொள்கின்றனர். பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவை செய்கிறார். படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தை பற்றிய பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகி வருகிறது.
    • ராகவா லாரன்ஸ் தனது 46 பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பண்முகத்தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது 'ருத்ரன்', 'சந்திரமுகி 2', 'அதிகாரம்', 'துர்கா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் 'சந்திரமுகி 2' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பிற்காக லாரன்ஸ் தயாராகி வருகிறார்.

    ரஜினியிடம் ஆசிப்பெற்ற ராகவா லாரன்ஸ்

    ராகவா லாரன்ஸ் தனது 46 பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது பிறந்தநாளன்று ரஜினிகாந்தை சந்தித்து ஆசிபெற்றுள்ளார். இதுகுறித்து ராகவா லாரன்ஸ் பதிவிட்டிருப்பது, எனது பிறந்தநாளில் தலைவரிடம் ஆசிர்வாதம் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு வருடமும் நான் ஏதாவது சேவை செய்வேன். அந்தவகையில், இந்த ஆண்டு பசியின் மதிப்பை அறிந்த நான் அன்னதானம் செய்ய திட்டமிட்டுள்ளேன். என்னால் முடிந்த இடங்களுக்கு தனிப்பட்ட முறையில் நேரில் சென்று உணவு விநியோகம் செய்வேன். எனக்கு உங்கள் ஆசிகள் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    ×