என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் ராகவா லாரன்ஸ்"

    • முதிய தம்பதி குறித்து அறிந்து அவர்களுக்கு உதவ ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.
    • அவர்களுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுக்க தயாராக இருக்கிறேன்.

    நடிகர், இயக்குனர், நடன கலைஞர் என பன்முக திறமை கொண்டு ராகவா லாரன்ஸ் அவரது உதவி செய்யும் குணத்திற்காக அறியப்படுகிறார்.

    இந்நிலையில் சென்னையில் ரெயில்களில் இனிப்பு விற்கும் முதிய தம்பதி குறித்து அறிந்து அவர்களுக்கு உதவ ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சென்னையில் 80 வயது முதியவரும் அவர் மனைவியும் இனிப்பு தயாரித்து ரெயில்களில் விற்பனை செய்வதை இணையதளம் மூலம் அறிந்தேன். அவர்களுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுக்க தயாராக இருக்கிறேன்.

    முதியவர் காண்பித்திருக்கும் செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் பற்றி விவரம் தெரிந்தவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்" என்று ராகவா லாரன்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். 

    • அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மஹா அவதார் நரசிம்ஹா கடந்த வாரம் வெளியானது.
    • திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

    அஷ்வின் குமார் இயக்கத்தில் மாபெரும் அனிமேஷன் திரைப்படமாக மஹா அவதார் நரசிம்ஹா கடந்த வாரம் வெளியானது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.

    திரைப்படம் வசூலில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. திரைப்படம் இதுவரை 120 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. பலரும் இப்படத்தை கடவுள் தரிசனமாக நினைத்து கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். ஒரு அனிமேஷன் திரைப்படத்திற்கு இந்தளவு வசூலித்த படம் இதுவே.

    இந்நிலையில் படத்தை நடிகர் மற்றும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அவரது குடும்பத்துடன் சென்று பார்த்து படத்தை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் "மகாவதார் நரசிம்ம படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

    எனது குடும்பத்தினருடன் எனக்கு ஒரு சக்திவாய்ந்த சினிமா அனுபவம் கிடைத்தது. நான் படப்பிடிப்பில் இருந்ததால் தாமதமாகவே பார்த்தேன். ஒரு பக்தனாக, படத்துடன் ஆழமாக இணைய முடிந்தது, மேலும் பல காட்சிகளில் அது எனக்கு கண்ணீர் வரவழைத்தது. இந்த பார்வையை உயிர்ப்பித்ததற்காக இயக்குனர் அஷ்வின்,தயாரிப்பாளர் hombalefilms மற்றும் முழு குழுவினருக்கும் எனது மிகப்பெரிய நன்றி. குழு தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன். #குருவேசரணம் என பதிவிட்டுள்ளார்.

    ராகவா லாரன்ஸ் நடிப்பில் புல்லட் திரைப்படம் உருவாகியுள்ளது மேலும் பென்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

    • ரசிகர்கள் எனக்காக பயணம் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன்.
    • இயக்குனருமான ராகவா லாரன்ஸ் உடன் ரசிகர்கள் ஆண்டுதோறும் புகைப்படம்.

    திரையுலகில் முன்னணி நடிகர்கள் தங்களின் பிறந்த நாள் முன்னிட்டு ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது வழக்கம்.

    நடிகர் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட நடிகர்களை தொடர்ந்து நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் உடன் ரசிகர்கள் ஆண்டுதோறும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

    கடந்த முறை நடைபெற்ற புகைப்பட நிகழ்வில் கலந்துக் கொள்ள வந்த அவரது ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 

    இது ராகவா லாரன்ஸ்-க்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால், அவர் ரசிகர்களுக்காக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

    இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வணக்கம் நண்பர்களே ரசிகர்களே.. கடந்த முறை சென்னையில் ரசிகர்கள் சந்திப்பு போட்டோஷூட்டின் போது எனது ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரை விட்டார். மிகவும் மனவேதனையாக இருந்தது.

    அன்று, என் ரசிகர்கள் எனக்காக பயணம் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன். ஆனால், நான் அவர்களுக்காக பயணம் செய்து அவர்களின் ஊரில் போட்டோஷூட் நடத்துவேன்.

    நாளை முதல் தொடங்குகிறேன். முதல் இடம் விழுப்புரம் லோகலட்சுமி மஹாலில் நடைபெற உள்ளது. நாளை சந்திப்போம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×