என் மலர்
சினிமா செய்திகள்

தமிழில் ரீமேக் செய்யப்படும் பிளாக்பஸ்டர் திரைப்படமான Kill- ஹீரோ யார் தெரியுமா?
- திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டராக உருவானது.
- இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு நிகில் நாகேஷ் இயக்கத்தில் லக்ஷ்ய, ராகவ் ஜுயல், ஆஷிஷ் வித்யார்த்தி, தன்யா மற்றும் பலர் நடிப்பில் வெளியானது கில் திரைப்படம்.
திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டராக உருவானது. திரைப்படம் ஓர் இரவில் ஒரு டிரெய்னில் நடக்கும் கதைக்களமாக மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இந்நிலையில் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
ரீமேக் செய்யும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் முதலில் கதாநாயகனாக நடிக்க இருந்தது ஆனால் சில சூழ்நிலைக்காரணமாக படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை ராக்ஷசடு, கில்லாடி போன்ற படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளார். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
துருவ் விக்ரம் தற்பொழுது மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.