என் மலர்
நீங்கள் தேடியது "KPY Bala"
- குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தார்.
- தற்பொழுது பாலா திரைத்துறையில் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார்.
தனது நடிப்பு, நகைச்சுவை தன்மையுடன் அவரது திறமையை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் வெளிக்காட்டி பிரபலமானவர் KPY பாலா. அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தார். தனக்கென ஒரு முக பாவனை, உடலமைப்பு , கவுண்டர் வசங்களை பேசினார்.
நடிப்பு மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் மேலும் இவரால் முடிந்த உதவியை பல மக்களுக்கு செய்து வருகிறார். அதைத்தொடர்ந்து ராகவா லாரன்சின் மாற்றம் அறக்கட்டளையின் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
தற்பொழுது பாலா திரைத்துறையில் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தை வைபவின் ரணம் அறம் தவறேல் திரைப்படத்தை இயக்கிய ஷெரிஃப் இயக்குகிறார். படத்தில் நமிதா கிருஷ்ணமூர்த்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தின் இசையை மெர்வின் சாலமன் மற்றும் விவேக் மேற்கொள்கின்றனர். பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவை செய்கிறார்.
படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு காந்தி கண்ணாடி என தலைப்பு வைத்துள்ளனர். தன்னுடைய உருவத்தை வைத்து கேலி செய்தவர்களின் முன்னிலையில் பாலா கதாநாயகனாக நிற்கும் காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
- திரு. ஷெரீஃப், தனது முதல் திரைப்படமான ரணம் அறம் தவறேல் மூலம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையே கொண்டாட்டமளிக்கும் வரவேற்பையும் பெற்றவர்.
- படத்தின் இசையை விவேக் மெர்வின் மேற்கொள்கின்றனர்.
திரு. ஜெய்கிரண் தலைமையிலான ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பில் உருவாக்கும் முதல் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு வெற்றிகரமான தயாரிப்புகளில் பணியாற்றிய அனுபவமுள்ள திரு. ஜெய்கிரண், தனக்கு நெருக்கமான கதையை உணர்வுபூர்வமாக மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் மூலம், ரசிகர்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக பரிச்சயமான KPY பாலா, கதாநாயகனாக தனது சினிமா பயணத்தைத் தொடங்குகிறார். இதுவரை தனது நகைச்சுவை நடிப்பால் பிரபலமான பாலா, இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட, உணர்ச்சி நிறைந்த கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தை இயக்கும் திரு. ஷெரீஃப், தனது முதல் திரைப்படமான ரணம் அறம் தவறேல் மூலம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையே கொண்டாட்டமளிக்கும் வரவேற்பையும் பெற்றவர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த புதிய திரைப்படம், ஒரு Feel-Good Emotional Drama ஆக உருவாகிறது. இப்படத்திற்கு அவர் தான் கதை மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார்.

இயக்குநர் ஷெரீஃப் கூறுகிறார் 'ரணம் அறம் தவறேல்' என்ற த்ரில்லர் படத்திற்கு பிறகு, நான் இயக்கும் "இந்தக் கதை எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. எனது இரண்டாவது திரைப்படமாக இந்த கதையை தர வேண்டும் என்பதே என் நோக்கம். நான் இந்தக் கதையை தயாரிப்பாளர் திரு. ஜெய்கிரணிடம் கூறியதும், யோசனையில்லாமல் உடனே 'ஆம்' என்று சொன்னார். அந்த நம்பிக்கையும், நேரடி ஆதரவும் ஒரு இயக்குநராக எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் உறுதியையும் வழங்கியது. பாலா கதாநாயகனாகவும் , தேசிய விருது பெற்ற இயக்குனர்பாலாஜி சக்திவேல் சார்,தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா மேடம் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு பெருமை நிரம்பியது .இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. நேர்த்தியான சினிமா கொடுக்க வேண்டும் என்ற என் எண்ணத்தின் தொடர்ச்சியாகவே இந்த படம் அமையும்."
நமிதா கதாநாயகியாக நடிக்கிறார். தேசிய விருது பெற்ற பாலாஜி சக்திவேல் மற்றும் தேசிய விருது பெற்ற அர்ச்சனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தின் இசையை விவேக் மெர்வின் மேற்கொள்கின்றனர்.
- நடிப்பு மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் பாலா
- பாலா திரைத்துறையில் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார்.
தனது நடிப்பு, நகைச்சுவை தன்மையுடன் அவரது திறமையை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் வெளிக்காட்டி பிரபலமானவர் KPY பாலா. அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மனதில் நிறந்தர இடம் பிடித்தார். தனக்கென ஒரு முக பாவனை, உடலமைப்பு , கவுண்டர் வசங்களை பேசினார்.
நடிப்பு மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் மேலும் இவரால் முடிந்த உதவியை பல மக்களுக்கு செய்து வருகிறார். அதைத்தொடர்ந்து ராகவா லாரன்சின் மாற்றம் அறக்கட்டளையின் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
தற்பொழுது பாலா திரைத்துறையில் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தை வைபவின் ரணம் அறம் தவறேல் திரைப்படத்தை இயக்கிய ஷெரிஃப் இயக்குகிறார். படத்தில் நமிதா கிருஷ்ணமூர்த்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தின் இசையை மெர்வின் சாலமன் மற்றும் விவேக் மேற்கொள்கின்றனர். பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவை செய்கிறார். படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தை பற்றிய பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- சமீபத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவருக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார் பாலா.
- வீடியோவை பார்த்த பலரும் பாலாவையும், ராகவா லாரன்சையும் பாராட்டி வருகின்றனர்.
தனியார் தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சியான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் KPY பாலா. அதை தொடர்ந்து 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். அதன் மூலம் அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு பெற்று தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
காமெடியனாக தன்னுடைய பயணத்தை தொடங்கி ஒரு தொகுப்பாளர், நடிகர், சமூக அக்கறையாளர் என மிகவும் சிறப்பாக செயல்படும் பாலா தன்னால் முடிந்த மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். தனக்கு வரும் வருமானத்தில் இருந்து பெரும்பகுதியை ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற முதியவர்களை அரவணைப்பது, மாற்றுத்திறனாளிக்கு உதவுவது, போதிய மருத்துவ வசதி இல்லாத இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மருத்துவ உதவி, புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு பண உதவி இப்படி பலருக்கும் பல வகையில் உதவியுள்ளார் பாலா. சமீபத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவருக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், பாலாவின் தன்னலமற்ற சேவையில் இணைந்துள்ளார் நடன மாஸ்டரும், நடிகருமான ராகவா லாரன்ஸ்.
கணவனை இழந்து 3 பெண் குழந்தைகளுடன் வாழ்வாதாரத்தை நடத்த அல்லல்படுபவர் முருகம்மாள். இவர் மின்சார ரெயிலில் சமோசா விற்று குடும்பத்தை நடத்தி வந்தார். அவருக்கு சொந்தமாக ஒரு ஆட்டோ வாங்கி ஓட்ட வேண்டும் என்பது தான் பல நாள் கனவாக இருந்தது. அதை தெரிந்து கொண்டு முருகம்மாளுக்கு புதிய ஆட்டோ ஒன்றை சர்ப்ரைஸாக வாங்கி கொடுத்துள்ளனர் பாலா மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ்.
முருகம்மாளை சர்ப்ரைஸாக முகத்தை மூடிக்கொண்டு ஆட்டோவில் அழைத்து செல்கிறார் பாலா. சற்று நேரத்தில் அந்த ஆட்டோவை சுற்றி பல ஆட்டோக்கள் வட்டமிட ஒன்னும் புரியாத முருகம்மாளுக்கு பிறகு தான் தெரிகிறது, ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வந்தது பாலா என்று. பின்னர் பேசும் பாலா, இந்த ஆட்டோ ரூ.3 லட்சம். இதற்கு பாதி காசு நான் கொடுத்தேன். மீதி காசு கொடுத்தவரை பார்க்கிறீர்களா என கேட்க, காரில் வந்து இறங்குகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். பின்பு முருகம்மாள் லாரன்ஸை கட்டிப்பிடித்துக்கொள்கிறார். இதையடுத்து ஆட்டோ சாவியை வழங்க லாரன்ஸ் காலில் விழுகிறார் முருகம்மாள். மேலும், லாரன்சும், பாலாவும் சேர்ந்து முருகம்மாளுக்கு அவர் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வழங்க முருகம்மாள் கதறி அழுகிறார். இதையடுத்து பாலாவும், லாரன்சும் ஆட்டோவில் அமர முருகம்மாள் ஓட்டி செல்கிறார்.
இது தொடர்பான வீடியோவை ராகவா லாரன்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் பாலாவையும், ராகவா லாரன்சையும் பாராட்டி வருகின்றனர்.
Service is god ???? pic.twitter.com/LIeJA0Aej3
— Raghava Lawrence (@offl_Lawrence) March 29, 2024
- இவர் இப்போது ‘மாற்றம்’ என்ற பெயரில் அறக்கட்டளை கடந்த மே 1 ஆம் தேதி தொடங்கியுள்ளார்.
- இதில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து ராகவா லாரன்சுடன் சேவை பணியாற்றவுள்ளதாக அவரது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்
நடிகர் ராகவா லாரன்ஸ், பல வருடங்களாக பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். இவர் இப்போது 'மாற்றம்' என்ற பெயரில் அறக்கட்டளை கடந்த மே 1 ஆம் தேதி தொடங்கியுள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து ராகவா லாரன்சுடன் சேவை பணியாற்றவுள்ளதாக அவரது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார் அது தொடர்ந்து செஃப் வினோத், அறந்தாங்கி நிஷாவும், KPY பாலா இணைந்து செயல்பட உள்ளனர்.
இந்தக் அறக்கட்டளை மூலம், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள், தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், 10 டிராக்டர்கள், 10 ஊர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த அறக்கட்டளை தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.
இந்நிலையில் 'மாற்றம்' அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் ராகவா லாரன்சுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், "வணக்கம் லாரன்ஸ் மாஸ்டர்! நீங்கள் பல வருடமாக நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறீர்கள். இப்பொழுது இன்னும் நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக 'மாற்றம்' என்கிற அறக்கட்டளையை ஆரம்பித்து இருக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் இன்னும் பல ஆயிரம் ஏழை மக்களுக்கு உதவி செய்யணும். அதற்கு அந்த ஆண்டவனுடைய அருள், மக்களுடைய துணை எப்போதும் இருக்கணும். வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இதனை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், "தலைவர், என் குரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து 'மாற்றம்' அறக்கட்டளை தொடங்கியுள்ளதற்கு வாழ்த்துகளைப் பெற்றேன். உங்கள் நிலையான ஆதரவால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. குருவே சரணம்" என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தற்பொழுது எஸ்ஜே சூர்யா அவரது எக்ஸ் தளத்தில் ராகவா லார்ன்ஸ்-க்கு வாழ்த்து தெரிவித்டு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
லாரன்ஸ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ், வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் மற்றும் வெற்றி மாறனின் எழுதிய கதையான அதிகாரம் படத்தில் நடிக்கவுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பலர் என்னிடம் உதவி கேட்டு மனுக்கள் அளித்து வருகின்றனர்.
- கடைசி வரை என்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்வேன்.
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தேனியில் தன்னார்வலர் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த உணவு வழங்கும் நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர் பாலா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார்.
அப்போது அவருடன் ஏராளமானோர் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் பாலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உதவி செய்தாலே அடுத்து அரசியலுக்கு வருகிறீர்களா? என கேட்கிறார்கள். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு அறவே கிடையாது. பல்வேறு இடங்களுக்கு சென்று என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். அப்போது பலர் என்னிடம் உதவி கேட்டு மனுக்கள் அளித்து வருகின்றனர்.
அதனை படித்து அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து வருகின்றேன். கடைசி வரை என்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயம்.
- இருவரும் மக்கள் தொண்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து கட்சியின் சின்னம், கொடி வடிவமைப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த கட்டமாக கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையொட்டி விஜய் ஆலோசனையின் பேரில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகிகளுடன் நேரடியாகவும், தொலைபேசி மூலமும் ஆலோசனை நடத்தி உறுப்பினர் சேர்க்கைக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வந்தார்.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் விஜய் போட்டியிடுவார் எனவும் அறவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு திரைத்துறையில் இருந்து ஆதரவு திரண்டு வருகிறது.
இந்நிலையில், தவெக-வில் நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் மக்கள் தொண்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சினிமாவை தாண்டி நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலான மக்கள் மனதில் தனி இடம் பிடித்துவிட்டனர்.
இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் மற்றும் KPY பாலா விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.