ராகவா லாரன்ஸின் மாற்றம் அறக்கட்டளைக்கு ரஜினி வாழ்த்து!

இவர் இப்போது ‘மாற்றம்’ என்ற பெயரில் அறக்கட்டளை கடந்த மே 1 ஆம் தேதி தொடங்கியுள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து ராகவா லாரன்சுடன் சேவை பணியாற்றவுள்ளதாக அவரது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்
ராகவா லாரன்ஸின் மாற்றம் அறக்கட்டளைக்கு ரஜினி வாழ்த்து!
Published on

நடிகர் ராகவா லாரன்ஸ், பல வருடங்களாக பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். இவர் இப்போது 'மாற்றம்' என்ற பெயரில் அறக்கட்டளை கடந்த மே 1 ஆம் தேதி தொடங்கியுள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து ராகவா லாரன்சுடன் சேவை பணியாற்றவுள்ளதாக அவரது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார் அது தொடர்ந்து செஃப் வினோத், அறந்தாங்கி நிஷாவும், KPY பாலா இணைந்து செயல்பட உள்ளனர்.

இந்தக் அறக்கட்டளை மூலம், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள், தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், 10 டிராக்டர்கள், 10 ஊர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த அறக்கட்டளை தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.

இந்நிலையில் 'மாற்றம்' அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் ராகவா லாரன்சுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், "வணக்கம் லாரன்ஸ் மாஸ்டர்! நீங்கள் பல வருடமாக நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறீர்கள். இப்பொழுது இன்னும் நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக 'மாற்றம்' என்கிற அறக்கட்டளையை ஆரம்பித்து இருக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் இன்னும் பல ஆயிரம் ஏழை மக்களுக்கு உதவி செய்யணும். அதற்கு அந்த ஆண்டவனுடைய அருள், மக்களுடைய துணை எப்போதும் இருக்கணும். வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதனை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், "தலைவர், என் குரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து 'மாற்றம்' அறக்கட்டளை தொடங்கியுள்ளதற்கு வாழ்த்துகளைப் பெற்றேன். உங்கள் நிலையான ஆதரவால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. குருவே சரணம்" என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தற்பொழுது எஸ்ஜே சூர்யா அவரது எக்ஸ் தளத்தில் ராகவா லார்ன்ஸ்-க்கு வாழ்த்து தெரிவித்டு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

லாரன்ஸ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ், வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் மற்றும் வெற்றி மாறனின் எழுதிய கதையான அதிகாரம் படத்தில் நடிக்கவுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com