என் மலர்

  நீங்கள் தேடியது "Balaji Sakthivel"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தின் வில்லன் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது. #Asuran #Dhanush #VetriMaaran
  `வட சென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி ’அசுரன்’ படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கும் நிலையில், `காதல்', `வழக்கு எண் 18/9' உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

  தற்போது இவரின் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது. அசுரன் படத்தில் பாலாஜி சக்திவேல் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் பாலாஜி சக்திவேலுடன் நடிகர் பசுபதி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் நிற்கிறார்கள்.  தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகும் ’அசுரன்’ படத்தில் பிரபல இயக்குநர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Asuran #Dhanush #ManjuWarrier
  `வட சென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி ’அசுரன்’ படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கும் நிலையில், `காதல்', `வழக்கு எண் 18/9' உள்ளிட்ட படங்களை இயக்கிய  பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கிறார். அவரது காட்சிகள் படமாகி வருவதாகவும், அவரது பெரும்பாலான காட்சிகள் தனுசுடன் இணைந்து வரும்படி உருவாகுவதாகவும் கூறப்படுகிறது. அவர் வில்லனாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

  முன்னதாக வெற்றிமாறன் இயக்கிய `வட சென்னை' படத்தில் அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்ட இயக்குநர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாசின் மகன் கென் கருணாஸ் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

  எழுத்தாளர் பூமணியின் `வெக்கை' புத்தகத்தை தழுவி, இடம் கையகப்படுத்துவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை மையப்படுத்திய கதையாக இந்த படம் உருவாகுவதாக கூறப்படுகிறது. #Asuran #Dhanush #ManjuWarrier #BalajiSakthivel

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் யார் இவர்கள் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தனது முந்தைய படமாக ரா ரா ராஜசேகர் ரிலீசாகாதது குறித்து இயக்குநர் வருத்தம் தெரிவித்துள்ளார். #BalajiSakthivel #YaarIvargal
  காதல், வழக்கு எண் 18/9 போன்ற தரமான படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல். அவர் இயக்கிய ரா ரா ராஜசேகர் படம் வெளியீட்டுக்கு தயாராகி, தாமதமாகி இருக்கும் நிலையில் தனது அடுத்த படமான யார் இவர்கள்? படத்தை எடுத்து முடித்துவிட்டார். 

  விஜய் மில்டனின் ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இசக்கி கிஷோர், அஜய், சுபிக்‌ஷா, அபிராமி, ராம், பாண்டியன், பத்ரி, குமரப்பா மற்றும் வினோதினி உட்பட பலரும் நடித்துள்ளனர். ஜாவத் ரியாஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.  அவரிடம் இது பற்றி கேட்டதற்கு ``இதை நான் எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை... வயிற்றில் இருக்கும் குழந்தை குறைப் பிரசவத்துல இறந்துவிட்டால், அழுதுவிட்டு விட்டு விடலாம். ஆனால் குழந்தை இன்குபேட்டரில் இருக்கும்போது இன்னொரு குழந்தை பிறந்து அந்தக் குழந்தைக்குத் தாயால நிம்மதியா பால் கொடுக்க முடியுமா?... அப்படி ஒரு மனநிலையில இருக்கிறேன். 

  ஆனால் அந்தப் படம் எப்போது வெளியானாலும் ஓடும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார். #BalajiSakthivel #YaarIvargal
  ×