பாலா நடிக்கும் காந்தி கண்ணாடி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாலா திரைத்துறையில் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். படத்தின் இசையை மெர்வின் சாலமன் மற்றும் விவேக் மேற்கொள்கின்றனர்.
பாலா நடிக்கும் காந்தி கண்ணாடி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Published on

தனது நடிப்பு, நகைச்சுவை தன்மையுடன் அவரது திறமையை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் வெளிக்காட்டி பிரபலமானவர் KPY பாலா. அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தார். தனக்கென ஒரு முக பாவனை, உடலமைப்பு , கவுண்டர் வசங்களை பேசினார்.

நடிப்பு மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் மேலும் இவரால் முடிந்த உதவியை பல மக்களுக்கு செய்து வருகிறார். அதைத்தொடர்ந்து ராகவா லாரன்சின் மாற்றம் அறக்கட்டளையின் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

தற்பொழுது பாலா திரைத்துறையில் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தை வைபவின் ரணம் அறம் தவறேல் திரைப்படத்தை இயக்கிய ஷெரிஃப் இயக்குகிறார். படத்தில் நமிதா கிருஷ்ணமூர்த்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தின் இசையை மெர்வின் சாலமன் மற்றும் விவேக் மேற்கொள்கின்றனர். பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவை செய்கிறார்.

படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்திற்கு காந்தி கண்ணாடி என தலைப்பு வைத்துள்ளனர். தன்னுடைய உருவத்தை வைத்து கேலி செய்தவர்களின் முன்னிலையில் பாலா கதாநாயகனாக நிற்கும் காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com