என் மலர்

  சினிமா

  நிம்மதி இழந்த தாயின் நிலையில் இருக்கிறேன் - பாலாஜி சக்திவேல்
  X

  நிம்மதி இழந்த தாயின் நிலையில் இருக்கிறேன் - பாலாஜி சக்திவேல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் யார் இவர்கள் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தனது முந்தைய படமாக ரா ரா ராஜசேகர் ரிலீசாகாதது குறித்து இயக்குநர் வருத்தம் தெரிவித்துள்ளார். #BalajiSakthivel #YaarIvargal
  காதல், வழக்கு எண் 18/9 போன்ற தரமான படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல். அவர் இயக்கிய ரா ரா ராஜசேகர் படம் வெளியீட்டுக்கு தயாராகி, தாமதமாகி இருக்கும் நிலையில் தனது அடுத்த படமான யார் இவர்கள்? படத்தை எடுத்து முடித்துவிட்டார். 

  விஜய் மில்டனின் ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இசக்கி கிஷோர், அஜய், சுபிக்‌ஷா, அபிராமி, ராம், பாண்டியன், பத்ரி, குமரப்பா மற்றும் வினோதினி உட்பட பலரும் நடித்துள்ளனர். ஜாவத் ரியாஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.



  அவரிடம் இது பற்றி கேட்டதற்கு ``இதை நான் எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை... வயிற்றில் இருக்கும் குழந்தை குறைப் பிரசவத்துல இறந்துவிட்டால், அழுதுவிட்டு விட்டு விடலாம். ஆனால் குழந்தை இன்குபேட்டரில் இருக்கும்போது இன்னொரு குழந்தை பிறந்து அந்தக் குழந்தைக்குத் தாயால நிம்மதியா பால் கொடுக்க முடியுமா?... அப்படி ஒரு மனநிலையில இருக்கிறேன். 

  ஆனால் அந்தப் படம் எப்போது வெளியானாலும் ஓடும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார். #BalajiSakthivel #YaarIvargal
  Next Story
  ×