என் மலர்
நீங்கள் தேடியது "சசிகுமார்"
- பறந்து போ, அலங்கு உள்ளிட்ட 12 தமிழ் படங்களும் தேர்வாகி திரையிடப்பட்டன
- 2வது சிறந்த திரைப்படமாக டூரிஸ்ட் ஃபேமலி தேர்வானது.
23-ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 11 ஆம் தேதி தொடங்கி நேற்று (டிசம்பர் 19) உடன் முடிவடைந்தது. இந்திய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து தமிழக அரசு இந்த விழாவினை நடத்தியது.
இந்த வருட திரைப்பட விழாவில் டூரிஸ்ட் ஃபேமிலி, 3 பிஎச்கே, மாமன், மாயக்கூத்து, மெட்ராஸ் மேட்னி, மருதம், ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், பறந்து போ, அலங்கு, பிடிமண், காதல் உள்ளிட்ட 12 தமிழ் படங்களும் தேர்வாகி திரையிடப்பட்டன.
நேற்று விழாவின் இறுதி நிகழ்வில் சிறந்த திரைப்படம், நடிகர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் டூரிஸ்ட் ஃபேமலி படத்தில் நடித்த நடிகர் சசிகுமாருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
மேலும் சிறந்த திரைப்படத்திற்கான விருது ராம் இயக்கிய 'பறந்து போ' படத்திற்கு வழங்கப்பட்டது. 2வது சிறந்த திரைப்படமாக டூரிஸ்ட் ஃபேமலி தேர்வானது.
சிறந்த நடிகைகான விருதை காதல் என்பது பொதுவுடைமை படத்தில் நடித்த லிஜோமோல் ஜோஷ் தட்டிச் சென்றார். சிறப்பு ஜூரி விருது மெட்ராஸ் மேட்னியில் நடித்த காளி வெங்கட்க்கும், வேம்பு படத்தில் நடித்த நடிகை ஷீலா ராஜ்குமாருக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த ஒளிப்பதிவாளர் விருது அலங்கு படத்தில் பணியாற்றிய எஸ்.பாண்டி குமார் மற்றும் சிறந்த எடிட்டர் விருது மாயக்கூத்து படத்திற்காக நாகூர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
- ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களின் இயக்குநர் ராஜ்மோகன் இயக்கியுள்ளார்.
- பாடல் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ரூரிஸ்ட் ஃபேமிலி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், சசிகுமார் படங்களிலையே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மை லார்ட்'. இப்படத்தை ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இதில் கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் 'எச காத்தா' கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் ராசாதி ராசா இன்று வெளியாகி உள்ளது. இப்பாடல் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. யுவபாரதி வரிகளில் மகாலிங்கள், முத்துசிற்பி பாடியுள்ளனர்.
- MY LORD படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
- MY LORD படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அனைத்து தரப்பு மக்களும், திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டினர்.
இதனை தொடர்ந்து சசிகுமார் தற்போது "ஜோக்கர், குக்கூ, ஜப்பான்" ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் 'மை லார்ட்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சைத்ரா ஆச்சர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 'மை லார்ட்' படத்தின் முதல் பாடலான 'எச காத்தா' பாடல் வெளியாகியுள்ளது.இப்பாடலை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். இப்பாடலை சின்மயி, சத்யபிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர்.
- இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
- படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அனைத்து தரப்பு மக்களும், திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டினர்.
இதனை தொடர்ந்து சசிகுமார் தற்போது "ஜோக்கர், குக்கூ, ஜப்பான்" ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் 'மை லார்ட்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சைத்ரா ஆச்சர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 'மை லார்ட்' படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் 'எச காத்தா' பாடலை சின்மயி, சத்யபிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர்.
- 'யாத்திசை' பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்குகிறார்.
- சசிகுமார் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ரசிகர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. அந்த வகையில், நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திரைத்துறையில் களம் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் ஜே. கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படத்தை அறிவித்துள்ளது.
இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தை விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு, வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற 'யாத்திசை' பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் முக்கியமான சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் தரணி ராசேந்திரன் கூறுகையில்," நடிகர் சசிகுமார் எங்கள் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டது பெருமகிழ்ச்சி. பிரிட்டிஷ் சகாப்தத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த கதையில், அவர் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் சுவாரஸ்யமான விஷயமாக ஆக்ஷன் காட்சிகள் இருக்கும்" என்கிறார்.
படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்த நிலையில், ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
சேயோன், பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். நடிகர் சசிகுமாருக்கும் படக்குழு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. படம் குறித்தான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சசிகுமார் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அட்டகாசமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

- ராஜுமுருகன் அடுத்ததாக நடிகர் சசிக்குமார் நடிப்பில் 'மை லார்ட்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- சசிகுமாருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை சைத்ரா நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவராவார் ராஜு முருகன். இவர் இயக்கிய குக்கூ, ஜோக்கர், மெஹந்தி சர்கஸ் , ஜிப்ஸி ஆகிய திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது.
இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது ஜப்பான் திரைப்படம் . ஆனால் இப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் ராஜுமுருகன் அடுத்ததாக நடிகர் சசிக்குமார் நடிப்பில் 'மை லார்ட்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை சைத்ரா நடித்துள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் படத்தின் புதிய புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
- சசிகுமார் கடந்த 2022-ம் வெளியான 'வதந்தி' வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடித்து வருகிறார்.
- அபர்ணா தாஸ் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
சசிகுமார் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.
அதனை தொடர்ந்து சசிகுமார் கடந்த 2022-ம் வெளியான 'வதந்தி' வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடித்து வருகிறார். வதந்தி தொடரின் முதல் சீசனில், எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி வரும் வதந்தி 2 தொடரில் சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு பணிகளை மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தொடரின் முன்னணி கதாப்பாத்திரத்தில் அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இந்நிலையில் அபர்ணா தாஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது இதனை அபர்ணா தாஸ் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
அபர்ணா தாஸ் இதற்கு முன் பீஸ்ட், டாடா போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
- சசிகுமார் அடுத்ததாக `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சசிகுமார் அடுத்ததாக `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 திரைப்படங்களை இயக்கியுள்ளார். திரைப்படம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி வெளியாகிருக்க வேண்டும் ஆனால் சில சூழ்நிலைக்காரணமாக திரைப்படம் வெளியாகவில்லை. தயாரிப்பாளர் தரப்பில் உள்ள நிதி சிக்கலால் இப்படம் வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது.
திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
- சசிகுமார் அடுத்ததாக `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சசிகுமார் அடுத்ததாக `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 திரைப்படங்களை இயக்கியுள்ளார். திரைப்படம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி வெளியாகிருக்க வேண்டும் ஆனால் சில சூழ்நிலைக்காரணமாக திரைப்படம் வெளியாகவில்லை. தயாரிப்பாளர் தரப்பில் உள்ள நிதி சிக்கலால் இப்படம் வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
- நடிகர் சசிகுமார் நடித்துள்ள ஃபிரீடம் திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.
- ஃப்ரீடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் உள்ளிட்டவை வெளியானது.
நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றத் திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை அபிஷன் ஜீவந்த் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி, யோகலக்ஷமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஷான் ரோல்டன் இசையமைத்திருந்த டூர்ஸ்ட் பேமிலி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், நடிகர் சசிகுமார் நடித்துள்ள ஃபிரீடம் திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.
ஃப்ரீடம் படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், மாலவிகா அவினாஷ், சரவணன், ரமேஷ் கண்ணா, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டூரிஸ்ட் பேமிலி படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் சசிகுமார் நடித்து வெளியாக இருக்கும் போதிலும் ஃபிரீடம் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே இந்தப் படம் குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இல்லாத நிலையே நிலவுவதாக தெரிகிறது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் உள்ளிட்டவை வெளியானது. இருப்பினும், ப்ரீடம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் கவனம் பெறாததால், படம் வரவேற்பு பெறுமா என்பது திரைப்படம் வெளியான பிறகு தான் தெரியவரும்.
- சசிகுமார் `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நீண்ட நாட்களுக்கு பிறகு சசிகுமார் நடித்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது.
அடுத்ததாக சசிகுமார் `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.
தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜூலை 10 வெளியாக இருக்கிறது.படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
- அடுத்ததாக சசிகுமார் `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நீண்ட நாட்களுக்கு பிறகு சசிகுமார் நடித்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது.
அடுத்ததாக சசிகுமார் `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.
தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜூலை 10 வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.