search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "GV Prakash Kumar"

  • இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார்
  • வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி. இப்படம் ரூ.100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது

  இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார்.

  சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

  பிப்ரவரி 3-ம் தேதி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது. அந்த போஸ்டரில், நடிகர் துல்கர் சல்மான் ஒரு வங்கியின் நுழைவாயிலை நோக்கி நடந்து செல்வது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

  இந்நிலையில், நாளை இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

  வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி. இப்படம் ரூ.100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை அவர் இயக்கி வருகிறார்.

  அதே சமயம், சீதா ராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் "லக்கி பாஸ்கர்" என்பது குறிப்பிடத்தக்கது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • அட்வென்ச்சர், ஆக்ஷன் கதைக்களம் கொண்ட படமாக கள்வன் உருவாகி இருக்கிறது.
  • இந்த படத்தில் பாரதி ராஜா முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.

  ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகும் 'கள்வன்' படம் சிறப்பாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் ஜி. டில்லி பாபு தயாரிக்கும் இந்த பரபரப்பான அட்வென்ச்சர் - ஆக்ஷன் திரைப்படம் ஏப்ரல் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்த படம் தொடர்பாக ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.வி. ஷங்கர் கூறும்போது, "சில ஜானர் படங்கள் மொழி, பிராந்திய எல்லைகளைத் தாண்டி பார்வையாளர்களைக் கவரும். ஒரு ஒளிப்பதிவாளராக காடுகளை அடிப்படையாகக் கொண்ட படங்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாக உணர்ந்தேன்."

  "ஆக்ஷன், அட்வென்ச்சர், எமோஷன் எனப் பல த்ரில்லர் தருணங்களை ஒன்றாகக் கொண்ட இந்தப் படம் பார்வையாளர்களுக்குத் தரமான எண்டர்டெயின்மெண்ட் ஆக இருக்கும். அழகான காதல், நகைச்சுவை என ஒரு ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படத்திற்கான அனைத்து அம்சங்களையும் இந்தப் படம் கொண்டுள்ளது."

  'கள்வன்' படத்திற்காக, ஜி.வி.பிரகாஷ் குமாரின் அர்ப்பணிப்பு அளப்பரியது. ஒரே நேரத்தில் இசை மற்றும் நடிப்பு இரண்டிலும் கவனம் செலுத்துவது எளிதானது கிடையாது. ஆனால், இந்தப் படத்துக்கான இயல்பான நடிப்பு மற்றும் அழகான பாடல்கள் கொடுத்து எங்கள் எதிர்பார்ப்பை சிறப்பாக பூர்த்தி செய்துள்ளார்."

  "இவானா திறமையான நடிகை. இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். பாரதிராஜா சாருடன் பணிபுரிய வேண்டும் என்பது பலருடைய கனவு. அந்தக் கனவு எனக்கு நிறைவேறி இருப்பதில் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்" என்றார்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • இப்படத்தின் இயக்குநர் பி.வி. ஷங்கர் பல முன்னணி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ராட்சன், முண்டாசுப்பட்டி, புரூஸ் லீ, மரகத நாணயம் இவர் ஒளிப்பதிவு செய்தப் படங்களாகும்.
  • பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாக உள்ள படம் கள்வன்.

  ஜி.வி. பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். பல ஹிட்டான பாடல்கலை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து இருக்கிறார். இசையமைப்பில் இருந்தவர் பின் படங்கள் நடிக்க தொடங்கினார். 2015 ஆம் ஆண்டில் டார்லிங் படத்தில் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் திரிஷா இல்லனா நயன்தாரா, சர்வம் தாள மயம், நாச்சியார், சிவப்பு மஞ்சள் பச்சை, கடவுள் இருக்கான் குமாரு, பேச்சிலர் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். ஒரு இசையமைப்பாளராக மட்டும் அல்ல ஒரு நல்ல நடிகனாகவும் அவர் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மார்ச் 22-ஆம் தேதி ஜி.வி.பிரகாஷ் குமாரின் அடுத்த படமான ரெபெல் வெளியாகவுள்ளது.

  இந்நிலையில்,பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாக உள்ள படம் கள்வன். ரமேஷ் அய்யப்பன் மற்றும் ஷங்கர் இத்திரைப்படத்தை எழுதியுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் , இவானா மற்றும் பாரதி ராஜா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். டில்லி பாபு இப்படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையில் பி.வி ஷங்கர் ஒளிப்பதிவு மேற்கொள்ள ரேமண்ட் டெரிக் மற்றும் காஸ்டா படத்தொகுப்பில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தை ஏப்ரல் 4-ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

  இப்படத்தின் இயக்குநர் பி.வி. ஷங்கர் பல முன்னணி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ராட்சன், முண்டாசுப்பட்டி, புரூஸ் லீ, மரகத நாணயம் இவர் ஒளிப்பதிவு செய்தப் படங்களாகும். ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் 2017-ஆம் ஆண்டு வெளிவந்தப் படம் மரகத நாணயம். ஏ.ஆர்.கே சரவணனுடன் இணைந்து பி.வி ஷங்கர் இப்படத்தை இயக்கினார்.

  • டியர் திரைப்படம் ஒரு குடும்பக் கதை.
  • திருமண துயரங்கள் பற்றிய சோகமான பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து பாடியுள்ளார்.

  இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் டியர் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

  இப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்போது படத்தின் ஒரு பாடலை இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளனர். 'கேடி லேடி தள்ளிப்போடி நீதான் என் தலைவலி...' என்ற பாடல் வரியுடன் கூடிய பாடலாக இது அமைந்து உள்ளது. இந்த சோகபாடல் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

  டியர் திரைப்படம் ஒரு குடும்பக் கதை. இது ஒரு திருமணமான ஜோடியின் கதை மற்றும் திருமணத்தில் இருந்து தொடங்குகிறது மற்றும் நீண்ட கால திருமணத்திற்கு என்ன தேவை என்பதை இந்தபடத்தில் அறிவுரையாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தலைவாசல் விஜய், ரோகினி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

  இந்நிலையில், டியரின் படத்தின் முதல் பாடலான தலைவலி பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருமண துயரங்கள் பற்றிய சோகமான பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து பாடியுள்ளார். விண்ணுலக கவி பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

  • ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் 25-வது படத்தை கமல் பிரகாஷ் இயக்குகிறார்.
  • இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

  ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரின் 25-வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். அதன்படி இந்த படத்திற்கு கிங்ஸ்டன் என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் கிங்ஸ்டன் படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார்.

  இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் - திவ்ய பாரதி நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

  • ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் 25-வது படத்தை கமல் பிரகாஷ் இயக்குகிறார்.
  • இந்த படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

  ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரின் 25-வது படத்தின் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடுவார் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

  ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படலாம்.

  • ஜிவி பிரகாஷ்-ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்துள்ள படம் ‘டியர்’.
  • இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

  இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம் 'டியர்'. இப்படத்தை 'செத்தும் ஆயிரம் பொன்' படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மேலும் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

  ஃபேமிலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் டியர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. கொட்டும் மழையில் படக்குழு தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்துவது போன்று இடம்பெற்றிருக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  • தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படத்தை வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார்.
  • தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார்.

  தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ், சம்யுக்தா மேனன் நடிப்பில் வெளியான படம் 'வாத்தி'. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


  துல்கர் சல்மான்

  துல்கர் சல்மான்

  இப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் துல்கர் சல்மான் இணைந்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர்.


  ஜிவி பிரகாஷ் குமார்

  ஜிவி பிரகாஷ் குமார்

  இந்நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இணைந்துள்ளதாக படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அறிவித்துள்ளது. துல்கர் சல்மானுடன் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  • தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
  • இப்படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது. தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன.


  ஆயிரத்தில் ஒருவன்

  ஆயிரத்தில் ஒருவன்

  இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இதில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை 2024-ம் ஆண்டு வெளியிடப் போவதாகவும் அறிவித்திருந்தனர். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜிவி பிரகாஷிடம் செய்தியாளர்கள் ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து கேள்வி எழுப்பினர்.


  ஆயிரத்தில் ஒருவன்

  ஆயிரத்தில் ஒருவன்

  இதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ் குமார், 'ஆயிரத்தில் ஒருவன்-2 படம் பற்றி பேசியிருக்கிறார்கள். தனுஷ் சார் பண்ற மாதிரி சொல்லியிருக்காங்க. படம் பெரிய பட்ஜெட், பெரிய புரொஜக்ட், நடந்துச்சுனா எனக்கு சந்தோஷம் தான். நானும் உங்கள மாதிரி தான் ரொம்ப எதிர்பார்ப்போட வெயிட் பண்ணிட்டு இருக்கேன்' என்றார்.

  • இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார்.
  • இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

  இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்துள்ளார். இப்படத்தை 'செத்தும் ஆயிரம் பொன்' படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மேலும் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.


  டியர்

  டியர்

  இந்நிலையில் ஃபேமிலி எண்டெர்டெயின்மெண்ட் படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை திரைப்பிரபலங்கள் பலரும் வெளியிட்டுள்ளனர். டியர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை இணையத்தில் வைரலாகி வருகிறது.