என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு' - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம்
- எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் விழாவை கொண்டாடினார்.
- இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகிறார். இதில் பிரதமர் மோடி மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுபோல இந்த ஆண்டும் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பொங்கல் விழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் பொங்கலிடப்பட்டது.
இந்த விழாவில் நீதிபதிகள், பல உயரதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்கள், திரை பிரபலங்கள், பத்திரிகைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்று இருந்தனர். தோழி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டார். நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த பொங்கல் விழாவில் பராசக்தி படக்குழுவினர் பங்கேற்றது குறித்து காமகிரஷ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு... ஆனா ஜன நாயகன் blocked" என்று தெரிவித்துள்ளார்.






