என் மலர்
நீங்கள் தேடியது "ஜிவி பிரகாஷ்குமார்"
- 2024 ஜேஇஇ தேர்வில் பழங்குடியின மாணவி சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
- “கல்வி ஆகச்சிறந்த செல்வம்” அது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தங்கை தம்பிகளுக்கும் கிடைக்கவேண்டும்.
2024 ஜேஇஇ (JEE) தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோகிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்ஐடி-ல் (NIT) சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.
ஜேஇஇ (JEE) தேர்வில் மாணவி ரோகிணி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார். திருச்சி என்ஐடி-ல் (NIT) மாணவி ரோகிணி வேதிப் பொறியியலும், சுகன்யா உற்பத்தி பொறியியலும் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்ற சுகன்யாவிற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், "JEE நுழைவுத்தேர்வில் வென்று திருச்சி NIT யில் பயில போகும் அன்புத்தங்கை சுகன்யா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள். "கல்வி ஆகச்சிறந்த செல்வம்" அது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தங்கை தம்பிகளுக்கும் கிடைக்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன்.
- படத்தின் முதல் பாடலை குறித்து தற்பொழுது அப்டேட் கிடைத்துள்ளது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில்"முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
அமரன் திரைப்படம் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் முடித்துள்ளார்.
படத்தின் முதல் பாடலை குறித்து தற்பொழுது அப்டேட் கிடைத்துள்ளது. படத்தின் முதல் பாடலான `ஹே மின்னலே' பாடல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என ஜி.வி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது ஒரு காதல் பாடலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் தனுஷ்.
- இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார்
நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ பாடல் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்பாடலை பலரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பதிவிட்டனர். இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார்
கோல்டன் ஸ்பேரோ பாடலை பாடியவர் சுபலட்சுமி, ஜி.வி பிரகாஷ் குமார் , தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார்.
பாடல் தற்பொழுது யூடியூபில் 40 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை தனுஷ் இயக்குகிறார்.
- இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர 'இட்லி கடை'என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் 'ராம்காம்' கதைக்களத்தில் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்கள் பற்றி உருவாகிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ பாடல் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இப்பாடலை பலரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பதிவிட்டனர். இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்று இருக்கிறார். கோல்டன் ஸ்பேரோ பாடலை சுபலட்சுமி, ஜி.வி. பிரகாஷ் குமார், தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர்.
கோல்டன் ஸ்பாரோ பாடல் வரிகளை அறிவு எழுதியுள்ளார். பாடல் தற்பொழுது யூடியூபில் 75 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- யோகி பாபு அடுத்ததாக 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
- யோகி பாபு, செந்தில், அகல்யா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபுவின் புகழ் பட்டிதொட்டி எங்கும் பரவியது. '
மடோன் அஸ்வின் அறிமுக படமான மண்டேலா படத்தில் யோகிபாபு தான் ஒரு சிறந்த காமெடியன் மட்டுமில்லாமல் சிறந்த நடிகன் என்று நிருபித்தார். அதற்கடுத்து அவர் தமிழில் பலப்படங்கள் நடித்துள்ளார். ஜெயிலர், ஜவான், அயலான்,சைரன், மாவீரன், டக்கர் என பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும்.
இந்நிலையில் யோகிபாபு அடுத்தக்கட்டமாக 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
யோகி பாபு, செந்தில், அகல்யா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சகுனி படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கி இருக்கிறார். படத்தின் முதல் பாடலான பாலிடிக்ஸ் தெர்லனா பூமரு பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை ஜிவி பிரகாஷ் குமார் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இப்பாடலை ஜிவி பிரகாஷ் குமார் பாடியுள்ளார்.
பாடலின் வரிகளை ஷங்கர் தயால் எழுதியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும்.
ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் கிங்ஸ்டன் படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார்.
இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் - திவ்ய பாரதி நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் இந்தியாவில் உருவாகும் முதல் கடல் ஃபேண்டசியை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படமாகும்.
சமீபத்தில் ஜிவி. பிரகாஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் மெண்டல் மனதில் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.
இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் - திவ்யா பாரதி நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.
தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ராசா ராசா பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருவதாக ஜிவி பிரகாஷ் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது.
திரையுலகில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, எழுத்து என பல பரிணாமங்களை கொண்டவர் தனுஷ். இவர் ராயன் படத்தைத் தொடர்ந்து 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் இம்மாதம் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன.
படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .இந்தப் படத்தின் கதை இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் அருண் விஜய், எஸ்.ஜே சூர்யா, ஜி.வி பிரகாஷ் மற்றும் இயக்குனர்களான ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
விழாவில் பேசிய ஜி.வி பிரகாஷ் " தனுஷ் சார் இயக்கும் திரைப்படத்தில் முதல்முறையாக வேலைப் பார்க்கிறேன். கண்டிப்பா ஒரு மேஜிக் ஏற்படும். நாங்கள் திரைப்படத்தை பார்த்துவிட்டோம். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும். படத்தின் தயாரிப்பாளரான ஸ்ரேயாஸ் சொன்னாரு இப்படத்தின் இசையமைப்புக்கு நான் சம்பளம் என எதுவும் வாங்கவில்லை என்று.
ஜெயிலர் திரைப்படம் ஹிட்டானதும் படக்குழுவை அழைத்து பரிசு வழங்கியதுப் போல் இப்படம் வெளியானதும் என்னை ஸ்பெஷலாக கவனிக்க வேண்டும்." என மிக நகைச்சுவையாக கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'.
- ஜி.வி பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஜி.வி பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. , 'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு சிறப்பு ப்ராஜக்டிற்கான பின்னணி இசையை இன்று தொடங்கினேன். காட் பிளெஸ் யூ மற்றும் டயர் ஸ்டார்ட்ஸ் நவ்" என பதிவிட்டுள்ளார். இவர் குட் பேட் அக்லி திரைப்படத்தை குறித்து தான் கூறுகிறார் என நெட்டிசன்கள் கமெட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தற்பொழுது திரையரங்கிள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
Started composing for the most special project today …. God Bless U ❤️? . Fire starts NOW ?
— G.V.Prakash Kumar (@gvprakash) February 11, 2025
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- இந்தப் படம் வருகிற மார்ச் 7-ம் தேதி ரிலீசாகிறது.
ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.
இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் - திவ்யா பாரதி நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில், கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கிங்ஸ்டன் படத்தின் ராசா ராசா பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.