என் மலர்
நீங்கள் தேடியது "selvaragavan"
- இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணியே வெற்றி பெறும் சூழல் உள்ளது.
- ஜஸ்ப்ரித் பும்ராவை கேப்டனாக நியமிக்காதது ஏன் என பிசிசிஐக்கும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் செல்வராகன் கேள்வி.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் எடுத்தது. இந்தியா வெறும் 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 1-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா முன்னிலை வகித்து வருகிறது. மேலும் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணியே வெற்றி பெறும் சூழல் உள்ளது.
இதனால் பலரும் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் ஜஸ்ப்ரித் பும்ராவை கேப்டனாக நியமிக்காதது ஏன் என பிசிசிஐக்கும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "நான் எப்போதும் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகன். ஜஸ்ப்ரித் பும்ராவை ஏன் கேப்டனாக்கவில்லை? என குறிப்பிட்டுள்ளார்.
- இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
- 'தக் லைஃப்' ஆல்பத்தில் 10வது பாடலாக சின்மயி வெர்ஷன் முத்தமழை இணைக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
தக் லைஃப் திரைப்படம் கடந்த 6ம் தேதி வெளியானது.
இதனிடையே தக் லைஃப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
படத்தில் அந்த பாடலை தீ பாடிய நிலையில், அவர் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வர இயலாததால் சினமயி அந்த பாடலை மேடையில் பாடினார்.
சின்மயி பாடிய முத்தமழை பாடலுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து 'தக் லைஃப்' ஆல்பத்தில் 10வது பாடலாக சின்மயி வெர்ஷன் முத்தமழை இணைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்பாடலுக்கு சினிமா பிரபலங்களும் புகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் முத்த மழை பாடலை கேட்டு தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் செல்வராகவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
ஒரு பாடல் கேட்டு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போய் - உயிரில் மின்சாரம் பாய்ந்து கேட்டது முதல் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதெல்லாம் உலகில் ஒரே மனிதனால் - நம் A.R. ரஹ்மான் அவர்களால் மட்டுமே முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் செல்வராகவன்.
- ’எனது பிறந்தநாளுக்கு பொன்னான நேரத்தை ஒதுக்கி வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஸ்டைல் வைத்து எடுக்கும் திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் தான் செல்வராகவன்.
இவர் தனது திரையுலக பயணத்தை 2002 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை எனும் படத்தில் இருந்து ஆரம்பித்தார். இப்படம் தான் தனுஷிற்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் செல்வராகவன்.
தனது இயக்குனர் அவதாரத்தில் இருந்து இப்பொழுது நடிப்பு அவதாரத்திற்கு மாறியுள்ளார் . தற்போது நடிகர் தனுஷ் இயக்கத்தில் ராயன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இயக்குனர் செல்வராகவன். இன்று அவரது எக்ஸ் பக்கத்தில் 'எனது பிறந்தநாளுக்கு பொன்னான நேரத்தை ஒதுக்கி வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இது எனக்கு கிடைத்த பெரிய விஷயம் எப்போதும் போல நான் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன்" என்று அவரின் நெகிழ்ச்சியை பதிவிட்டுள்ளார்.
- மாணவர்கள் மத்தியில் மகாவிஷ்ணு பேசினார். இந்த பேச்சு பெரும் சர்சைக்கு உள்ளாகியுள்ளது
- இயக்குனரான செல்வராகவன் அவரது கருத்தை பதிவு செய்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.
கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். இந்த பேச்சு பெரும் சர்சைக்கு உள்ளாகியுள்ளது. இதுக்குறித்து பிரபல இயக்குனரான செல்வராகவன் அவரது கருத்தை பதிவு செய்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் `ஆன்மீக குரு என்பவர், தன்னை தேடுபவர்களை தானே தேடி வருவார்
மாறாக விளம்பரங்கள் மூலமாக சில விஷயங்களை பேசிவிட்டு மக்களை ஏமாற்றுபவர்களிடம் சென்று உட்கார்ந்து கொள்ளுமளவிற்கு மக்கள் காய்ந்துபோய் கிடக்கிறார்களா? யாரோ ஒருவர் எதையோ பேசுகிரார் அதை அப்படியே மனதில் ஏற்றிக்க்கொள்வீர்களா? உண்மையான குரு தன்னை வெளிப்படுத்தி கொள்ளவே மாட்டார். எல்லா மதமும் போதிப்பது நம் ஒவ்வொருவருக்குள் கடவுள் இருக்கிறார் என்பதையே. என்றும் செல்வராகவன் கூறியுள்ளார்.
புத்தரின் வழிமுறைகளை பின்பற்றியே சுலபமாக யோகா, தியானம் போன்றவற்றை பயிற்சி செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அவர் கூறியபடி எளிமையாக நாசித் துவாரங்களின் வழியாகவே இவற்றை பயிற்சி செய்ய முடியும் என்றும் துவக்கத்தில் சுவாசம் குறித்த கவலைஇல்லாமல் இதை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகன் மற்றும் நட்டி நடித்துள்ள படம் பகாசூரன்.
- இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள்.

பகாசூரன்
இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

மோகன் ஜி
இதனிடையே எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகவுள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் 'பகாசூரன்' படத்தின் இயக்குனர் மோகன் ஜி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.

இயக்குனர் மோகன் ஜி வேண்டுகோள்
அதில், ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு நேரம் சொல்லுங்க போனிகபூர் சார்.. அதற்கேற்ப எனது சிவசிவாயம் முதல் பாடல் வெளியீட்டு நேரத்தை மாற்றுவேன்.. இன்று எனக்கு டபுள் தமாக்கா.. என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி ஏகே61 படத்தின் அறிவிப்பை கேட்டு கொண்டு வருகின்றனர்.
- செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'.
- இப்படத்தின் டீசரை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நானே வருவேன்
வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். 'நானே வருவேன்' திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

நானே வருவேன்
இந்நிலையில் 'நானே வருவேன்' படத்தின் டீசரை தனுஷ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.






