என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏர்.ஆர்.ரகுமான்"

    • இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
    • 'தக் லைஃப்' ஆல்பத்தில் 10வது பாடலாக சின்மயி வெர்ஷன் முத்தமழை இணைக்கப்பட்டுள்ளது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    தக் லைஃப் திரைப்படம் கடந்த 6ம் தேதி வெளியானது.

    இதனிடையே தக் லைஃப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    படத்தில் அந்த பாடலை தீ பாடிய நிலையில், அவர் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வர இயலாததால் சினமயி அந்த பாடலை மேடையில் பாடினார்.

    சின்மயி பாடிய முத்தமழை பாடலுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து 'தக் லைஃப்' ஆல்பத்தில் 10வது பாடலாக சின்மயி வெர்ஷன் முத்தமழை இணைக்கப்பட்டுள்ளது.

    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்பாடலுக்கு சினிமா பிரபலங்களும் புகழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் முத்த மழை பாடலை கேட்டு தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து இயக்குனர் செல்வராகவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஒரு பாடல் கேட்டு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போய் - உயிரில் மின்சாரம் பாய்ந்து கேட்டது முதல் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதெல்லாம் உலகில் ஒரே மனிதனால் - நம் A.R. ரஹ்மான் அவர்களால் மட்டுமே முடியும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது.
    • கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், நடிப்பையும் தாண்டி பின்னணிப் பாடகராகவும், பாடலாசிரியராகவும், ப. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராகவும் தன்னை நிரூபித்தவர் ஆவார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தாயரிக்கும் இப்படத்துக்கு ஏர்.ரகுமான் இசையமைக்கிறார்.

    இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன்,பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம் , சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    கடந்த மே 9 ஆம் தேதி இப்படத்தில் ஏர்.ஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடிய 'அடங்காத அசுரன்' என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1 ஆம் தேதி பிரமாண்டமான நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த விழாவில் இதுவரை தனுஷை வைத்து படம் இயக்கிய இயக்குனர்களை அழைத்து கவுரவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ராயன் படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரண்டு ஆஸ்கார்களை வென்று இந்திய சினிமாவுக்கு பெருமை தேடி தந்ததோடு உலக அளவில் பிரபலமானார்.
    • இந்திய சினிமா மட்டுமல்லாமல் உலக அளவில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' திரைப்படத்தின் மூலம், வெள்ளி திரையில் தன்னுடைய இசை பணியை துவங்கிய ஏ.ஆர்.ரகுமான் முதல் படத்திலேயே தேசிய விருது நாயகனாக மாறினார். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த அவர் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இசையமைத்து உலக புகழ் பெற்றார்.

    ஸ்லம் டாக் மில்லினியர் என்ற படத்திற்காக இரண்டு ஆஸ்கார்களை வென்று இந்திய சினிமாவுக்கு பெருமை தேடி தந்ததோடு உலக அளவில் பிரபலமானார். இந்திய சினிமா மட்டுமல்லாமல் உலக அளவில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் லண்டனில் உள்ள டிரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கௌரவத் தலைவராக 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த பதவியில் 5 ஆண்டுகாலத்திற்கு தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×