search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "RAYAN"

  • நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார்.
  • சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

  நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

  இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. மேலும் கடந்த மே 9 ஆம் தேதி இப்படத்தில் ஏர்.ஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடிய 'அடங்காத அசுரன்' என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது.

  இந்நிலையில், கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர். இதனால் 18 வயதிற்கு மேற்ப்பட்டோர் மட்டுமே பார்க்கும் விதமாக திரைப்படம் அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. திரைப்படம் 2 மணிநேரம் 25 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்கிறது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த படங்கள் திரைக்கு வர இருக்கிறது.
  • தனுசுக்கு மிகப்பெரிய ரசிகைநான்.

  சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் துஷாரா விஜயன். தொடர்ந்து அநீதி, தனுசுடன் ராயன், ரஜினியுடன் வேட்டையன், விக்ரமுடன் வீர தீர சூரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

  இந்நிலையில் துஷாரா விஜயன் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

  ராயன் படத்தில் நடித்ததை சாதனையாக உணர்கிறேன். இந்த உணர்வை விவரிக்க முடியாது.

  தனுசுக்கு மிகப்பெரிய ரசிகைநான். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. இயக்குனர்களில் தனுஷ் வித்தியாசமானவர். அவர் இயக்குனராக பணியாற்றுவதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

  ஆக்ஷன் என அவர் சொல்லிவிட்டு கேமரா முன்பு ஓடி செல்லும் தருணம் வியக்க வைத்தது. வடசென்னையில் பிறந்து வளர்ந்து இறக்கும் பெண்ணாக நடித்துள்ளேன். எந்த படத்தில் நடிக்கும் போதும் என் கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்றால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். 35 வயதிற்குள் நான் நடிப்பை விட்டு விடுவேன் என நினைக்கிறேன்.

  அதன்பிறகு உலகம் முழுவதும் பயணம் செய்ய நினைத்துள்ளேன். 35 வயதிற்கு மேல் நான் பயணம் செய்யாத நாடுகள் இருக்காது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • அதனைத்தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
  • தனது 50-வது படமான ‘ராயன்' படத்தை இயக்கி நடித்தும் வருகிறார்.

  'சூரரை போற்று' படத்துக்கு பிறகு, சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா இணையப்போவதாக தகவல்கள் வெளியானது. இந்த புதிய படத்துக்கு 'புறநானூறு' என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

  முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில், படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்களும் ஏமாற்றம் கொண்டனர்.

  இதனைத்தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் சூர்யா ஒப்பந்தமானார். அதனைத்தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

  இந்தநிலையில் கிடப்பில் போடப்பட்ட 'புறநானூறு' படத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்திருப்பதாகவும், இந்த படத்தில் சூர்யாவுக்கு பதில் தனுஷ் நடிக்க போகிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

  தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனது 50-வது படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்தும் வருகிறார்.

  இந்த படங்களை முடித்துவிட்டு சுதா கொங்கரா இயக்கும் 'புறநானூறு' படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி உள்ளது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்திருக்கும் படத்திற்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது.
  • இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

  கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்திருக்கும் படத்திற்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தாயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

  இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. மேலும் கடந்த மே 9 ஆம் தேதி இப்படத்தில் ஏர்.ஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடிய 'அடங்காத அசுரன்' என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
   


  படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படக்குழுவினர் தற்பொழுது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் காளிதாஸ் ஜெயராம், தனுஷ், சுதீப் கிஷன் மற்றும் துஷரா மாவு மில்லில் மிகவும் கோபத்துடன் முறைத்துக்கொண்டு இருப்பது போல் இருக்கின்றனர். இப்போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தற்பொழுது தொடங்கியுள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
  • படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

  தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

  தனுஷின் 50-வது படமாக உருவாகும் ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.


  இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படம் வரும் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • இவர் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார்.
  • தனது 50-வது படமான 'ராயன்' படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார்.

  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். மேலும், தனது 50-வது படமான 'ராயன்' படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். ராயன் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

  தமிழ் தாண்டி இந்தியிலும் 'ராஞ்சனா', 'ஷமிதாப்', 'அத்ராங்கி ரே' ஆகிய படங்களில் தனுஷ் நடித்துள்ளார். இந்தியில் மீண்டும் ஆனந்த் எல்.ராயுடன், தனுஷ் இணைந்து தேரே இஷ்க் மெயின் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் ராஞ்சனா படத்தைப் போல் ஒரு காதல் காவியமாக உருவாகவுள்ளது.

  ஆனந்த எல் ராய் இயக்கத்தில் தனுஷ் இப்படத்தின் மூலம் மூன்றாவது முறை இணைந்து பணியாற்றவுள்ளார்.

  தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தொடங்கலாம் என்றும், முதல்கட்டமாக வாரணாசியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

   

  இந்நிலையில், காதலை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • தனுஷ் நடிப்பில் உருவாகும் 50 ஆவது படத்தை அவரே இயக்கி, நடித்துள்ளார்.
  • ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடலான ’அடங்காத அசுரன்’ பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

  தனுஷ் நடிப்பில் உருவாகும் 50 ஆவது படத்தை அவரே இயக்கி, நடித்துள்ளார். ராயன் என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

  ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடலான 'அடங்காத அசுரன்' பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் அடுத்த பாடல் மே 24 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இது கானா பாடலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்பாடலிற்கு 'வாட்டர் பாக்கெட்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

  ஏ.ஆர் ரகுமான் இசையில் கானா பாட்டு எப்படி இருக்கும் என ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தற்பொழுது படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சுதீப் கிஷன் , அபர்னா பாலமுரளியை தூக்கிக் கொண்டு இருக்கும் காட்சிகள் அப்போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. இருவருக்கும் உள்ள காதல் பாடலாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது.
  • கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், நடிப்பையும் தாண்டி பின்னணிப் பாடகராகவும், பாடலாசிரியராகவும், ப. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராகவும் தன்னை நிரூபித்தவர் ஆவார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தாயரிக்கும் இப்படத்துக்கு ஏர்.ரகுமான் இசையமைக்கிறார்.

  இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன்,பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம் , சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

  கடந்த மே 9 ஆம் தேதி இப்படத்தில் ஏர்.ஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடிய 'அடங்காத அசுரன்' என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1 ஆம் தேதி பிரமாண்டமான நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த விழாவில் இதுவரை தனுஷை வைத்து படம் இயக்கிய இயக்குனர்களை அழைத்து கவுரவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ராயன் படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • D50 என அறியப்பட்ட இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.
  • சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

  தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. D50 என அறியப்பட்ட இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

  தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. அது தொடர்பான போஸ்டரை படக்குழு அப்போது வெளியிட்டிருந்தது. அதில் தலையில் கேப் அணிந்து தனுஷ் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

  இந்நிலையில் ராயன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழியில் இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

  இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கவுள்ள இத்திரைப்படம் இந்தாண்டே வெளியாகும் என பட நிறுவனம் அறிவிப்பு

  இதற்கு முன்னதாக ராஜ்கிரண், ரேவதி உள்ளிட்டவர்களை வைத்து தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி படம் சிறப்பான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

  ×