என் மலர்

  நீங்கள் தேடியது "Kiara Advani"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நடிகை கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருகிறார்கள்.
  • இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

  கவர்ச்சி நடிகையான கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருகிறார்கள். இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இருவருக்கிடையே காதல் முறிவு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து விட்டதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக கியாரா அத்வானியின் பிறந்தநாளை, அவரது காதலர் சித்தார்த் மல்ஹோத்ரா ஆடம்பரமாக கொண்டாடி இருக்கிறார்.

   

  துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தனது காதலியின் பிறந்தநாளை, அவர் வியக்கும் அளவு பிரமாண்டமாக கொண்டாடி பிரமிப்பூட்டி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வாழ்த்துகளை பெற்று வருகிறது. காதலர்களான இருவரும் திருமண வாழ்க்கையில் விரைவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவீட்டாரும் திருமண பேச்சை தொடங்கி விட்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

   

  தற்போது கியாரா அத்வானி, ராம் சரண் ஜோடியாக ஷங்கர் இயக்கி வரும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மாவீரன்' படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் - கியாரா அத்வானி நடிப்பில் உருவாகும் காஞ்சனா படத்தின் இந்தி பதிப்பான லட்சுமிபாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
  லாரன்ஸ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘காஞ்சனா’. லாரன்சுக்கு ஜோடியாக ராய் லட்சுமியும், திருநங்கை வேடத்தில் சரத்குமாரும் நடித்திருந்தார்கள். காமெடி, ஹாரர் கலந்த திரில்லர் படமாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைதொடர்ந்து, ‘காஞ்சனா 2’, ‘காஞ்சனா 3’ பாகங்கள் வெளியாகிவிட்டது.

  தற்போது காஞ்சனா முதல் பாகம் இந்தியில் ‘லட்சுமி பாம்’ Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். சரத்குமார் வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். கதாநாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார்.


  படப்பிடிப்பு மும்பையில் நடந்து வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் அக்‌ஷய் குமார் பெண் வேடமேற்று மேக்கப் செய்யும்படி இருந்தது.

  படம் வருகிற ஜூன் 5 2020-ல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அண்ணன்களுக்கு அரணாய் நிற்கும் ராம்சரணின் ஆக்‌ஷன் சரவெடி - வினய விதேய ராமா விமர்சனம்
  கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பித்து ஓடும் 4 சிறுவர்கள் தண்டவாளத்திற்கு அருகில் ஒரு சிறு குழந்தை இருப்பதை பார்க்கிறார்கள். பின்னர் அந்த குழந்தையை எடுத்து வளர்க்கிறார்கள். அந்த குழந்தைக்காக 4 பேரும் சேர்ந்து உழைக்கிறார்கள். அந்த குழந்தை தான் ராம் சரண். அவரது அண்ணன்களாக பிரசாந்த் உள்ளிட்ட 4 பேர் வருகிறார்கள்.

  கொஞ்சம் பெரிய ஆளான பிறகு வேலைக்கு செல்லும் தனது அண்ணன்களை படிக்க அனுப்பிவிட்டு தான் வேலை பார்க்க ஆரம்பிக்கிறார் ராம் சரண். 4 அண்ணன்களும் படித்து பெரிய ஆளாகின்றனர். ராம் சரண் அடிதடி என்று ஊர் சுற்றி வருகிறார். இதில் கலெக்டராகும் பிரசாந்த்துக்கு சில பிரச்சனைகள் வருகின்றன.

  தனது அண்ணனுக்கு வரும் பிரச்சனைகளை ராம்சரண் எப்படி தடுக்கிறார்? அண்ணன்களுக்கு எப்படி அரணாகிறார்? என்பதே ஆக்‌ஷன் கலந்த மீதிக்கதை.  படத்தில் ராம்சரண் முழு ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். அண்ணன்கள் மீது பாசம், காதல், அடிதடி என அவரது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். கியாரா அத்வானி அலட்டல் இல்லாமல் அழகாக வந்து செல்கிறார். பிரசாந்த் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தாலும், அவருக்கு இன்னும் வலுவான கதாபாத்திரம் கொடுத்திருக்கலாம்.

  மற்றபடி விவேக் ஓபராய், சினேகா, அர்யான் ராஜேஷ், மதுமிதா, ரவி வர்மா, ஹரிஷ் உத்தமன், சலபதி ராவ், ஈஷா குப்தா, மகேஷ் மஞ்ச்ரேக்கர் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.  ஒரு முழு நீள ஆக்‌ஷன் படமாக இதை உருவாக்கி இருக்கிறார் பொயபடி ஸ்ரீனு. தெலுங்கு சினிமாவுக்கே உரித்தான ஆக்ஷன் காட்சிகளை படத்தில் பார்க்க முடிகிறது. ஆக்‌ஷன் காட்சிகள் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது. மற்றபடி குடும்பம், பாசம், காதல், காமெடி என ஆங்காங்கு ரசிக்கும்படியான காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. 

  தேவி ஸ்ரீ பிரசாத் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். தமிழில் பாடல்களும் கேட்கும் ரகம் தான். ரிஷி பஞ்சாபி, ஆர்தர் ஏ.வில்சனின் ஒளிப்பதிவு அருமை.

  மொத்தத்தில் `வினய விதேய ராமா' சரவெடி. #VinayaVidheyaRama #VinayaVidheyaRamaReview #RamCharan #KiaraAdvani

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொயாபதி சீனு இயக்கத்தில் ராம்சரன் நடிப்பில் உருவாகி வரும் ‘வினய விதய ராமா’ படத்தில் பிராந்த் நடித்துள்ளதை பார்த்த அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்துள்ளனர். #VinayaVidheyaRaama #Prasanth
  ராம் சரண், கியாரா அத்வானி நடித்த ‘வினய விதய ராமா’ தெலுங்குப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை பொயாபதி சீனு இயக்கி உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசரைப் பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.

  படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் டீசரில் இரண்டு இடத்தில் வருகின்றன. அதில் ஒரு காட்சியில் ராம் சரணுக்கு பின்னால் நடந்து வரும் நான்கு பேரில் ஒருவராக பிரசாந்த் வருகிறார். இதைப் பார்த்த பிரசாந்த் ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை வருத்தத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.  நடிகர் பிரசாந்த் ’வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை பல வெற்றிப் படங்களில் நடித்த பிரசாந்த் தமிழில் இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #VinayaVidheyaRaama #Prashanth

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இணைய தொடரில் நடித்து மிகவும் பிரபலமான கியாரா அத்வானி, இனிமேல் சினிமாவில் மட்டும்தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். #KiaraAdvani
  விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தில் இந்தி நடிகை கியாரா அத்வானியை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கியாரா நடித்த இணைய தொடர் ஒன்று சர்ச்சையானது. பாலியல் தேவைகள், அதில் உள்ள முரண்பாடுகள் குறித்து உருவான அந்தப் படத்தில் கரண் ஜோஹர் இயக்கிய அத்தியாயத்தில் கியாரா அத்வானி நடித்திருந்தார். 

  அந்த படத்தில் அவரது நடிப்பு, பாராட்டுகளைப் பெற்றதுடன் சர்ச்சைகளையும் சந்தித்தது. “இது போன்று நடந்துவிடக்கூடாது என்பதற்காக தான் இணைய தொடர்களில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன். ஒருவேளை லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தை கரன் ஜோகர் இயக்கவில்லை என்றால் நான் நடித்திருப்பது சந்தேகமே.   தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வந்தாலும் நான் திரைப்படங்களில் மட்டுமே நடிப்பேன். இனி இணைய தொடர் பக்கம் செல்ல விருப்பம் இல்லை’’ என்று கூறி இருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  `சர்கார்' படத்திற்கு பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையவிருக்கும் விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Vijay63 #Atlee
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில விஜய் நடிப்பில் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பாடல் மற்றும் சில முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. இந்த நிலையில், விஜய் அடுத்ததாக மீண்டும் அட்லியுடன் இணையவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

  தெறி, மெர்சல் என விஜய்யை வைத்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்துள்ள அட்லி, சமீபத்தில் விஜய்யை சந்தித்து ஒரு கதையை சொல்லியிருக்கிறாராம். அந்த கதைக்கு விஜய் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டணி மீண்டும் இணையும் பட்சத்தில், விஜய்யின் 63-வது படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க எம்.எஸ்.தோணி, பரத் அனே நேனு படத்தின் நாயகி கியாரா அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் மெர்சல், சர்கார் படத்திற்கு பிறகு இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

  சர்கார் படப்பிடிப்பு முடிந்த பிறகே, விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனவே விஜய் 63 குறித்த அறிவிப்பு செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Vijay63 #Atlee

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரதலா சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு - கியாரா அத்வானி நடிப்பில் வெளியாகி இருக்கும் பரத் எனும் நான் படத்தின் விமர்சனம். #BharathEnnumNaan #MaheshBabu
  அரசியலில் முக்கிய புள்ளியாக இருக்கும் சரத்குமாரின் மகன் மகேஷ் பாபு. மக்கள் பிரச்சனைகளுக்கு செவிசாய்க்கும், சரத்குமாரால், தனது மனைவி, மகனுடன் நேரம் செலவிட முடியவில்லை. சிறுவயதில் இருந்தே மகேஷ் பாபு, அப்பா பாசத்திற்காக ஏங்குகிறார். இப்படி இருக்க மகேஷ் பாபுவின் அம்மாவும் இறந்துவிடுகிறார். 

  இதையடுத்து தனது மகனுக்காக அரசியல் வேலைகளை சரத்குமார் தள்ளிவைக்க, சரத்குமாரின் நெருங்கிய நண்பனும், அவரது கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பிரகாஷ்ராஜ் மகேஷ் பாபுவுக்காக, சரத்குமாரை புதிய திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார். சரத்குமாரும் இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். தனது அம்மாவை இழந்து அம்மா பாசத்திற்காக ஏங்கும் மகேஷ் பாபுவின் சித்தி, அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.   இதையடுத்து பக்கத்து வீட்டில் இருக்கும் தனது நண்பனுடனேயே நேரத்தை செலவிடுகிறார். மேலும் தனது நண்பனின் வீட்டில் லண்டன் செல்ல முடிவெடுக்க, அவர்களுடன் மகேஷ் பாபுவும் லண்டன் செல்கிறார். படிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்ட மகேஷ் பாபு ஐந்துக்கும் மேற்பட்ட பட்டங்களை பெறுகிறார். இந்த நிலையில், தனது தந்தை இறந்த செய்தியறிந்து, பல வருடங்களுக்கு பிறகு மகேஷ் பாபு மீண்டும் சென்னை திரும்புகிறார். அவர் வருவதற்கு முன்பே சரத்குமாருக்கு இறுதிச்சடங்குகள் முடித்து வைக்கப்படுகிறது. 

  முதலமைச்சராக இருந்த சரத்குமார் இறந்ததால், அவரது கட்சிக்குள் உட்பூசல் ஏற்பட, யார் முதல்வராவது என்பதில் குழப்பமும், பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இந்த நிலையில், மகேஷ் பாபு மீண்டும் லண்டன் செல்ல தயாராகிறார். அவரை சென்னையிலேயே தங்க சொல்லி பிரகாஷ் ராஜ் வற்புறுத்துகிறார். மேலும் கட்சி உறுப்பிகர்களை சமாளிக்க, மகேஷ் பாபுவை வற்புறுத்தி முதல்வராக்குகிறார் பிரகாஷ் ராஜ்.   முதல்வராக பொறுப்பேற்ற முதலே தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக களையெடுக்க ஆரம்பிக்கிறார். இதற்கிடையே நாயகி கியாரா அத்வானியை சந்திக்கும் மகேஷ் பாபுவுக்கு அவள் மீது காதல் வருகிறது. 

  மகேஷ் பாபு தான் சொல்வதை கேட்டு அனைத்தையும் செய்வார் என்று பிரகாஷ் ராஜ் நினைத்த நிலையில், எது சரியோ அதை மட்டுமே செய்யும் மகேஷ் பாபு மீது பிரகாஷ் ராஜுக்கு கோபம் வருகிறது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளும் மகேஷ்பாவுக்கு எதிராக சதி செய்கின்றன.   கடைசியில், எதிர்க்கட்சிகளின் சதியை மகேஷ் பாபு சமாளித்தாரா? கோபத்தில் இருந்த பிரகாஷ் ராஜ் என்ன செய்தார்? தமிழக மக்களின் பிரச்சனைகளை மகேஷ் பாபு தீர்த்து வைத்தாரா? முதல்வராக நீடித்தாரா? கியாரா அத்வானியை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

  ஒரு இளம் முதல்வராக, மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் கதாபாத்திரத்தில், சிறப்பாக நடித்திருக்கிறார் மகேஷ் பாபு. முதல்வராக இருக்கும் மகேஷ் பாபு, தனது காதலை வெளிப்படுத்துவதும், நாயகியுடன் பழக நினைக்கும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். ஏற்கனவே தோனி படத்தில் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த கியாரா அத்வானி, இந்த படத்தின் மூலம் மேலும் கவர்ந்திருக்கிறார். காதல் காட்சிகளில் ஈர்க்க வைக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சியுடன் கவர்கிறார்.   சரத்குமார் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் அவருக்கு வசனங்கள் குறைவு என்றாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ் அந்த கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கிறார். 

  பி.ரவிசங்கர், அஜய், அனிஷ் குருவில்லா, பூசாணி கிருஷ்ண முரளி, ராவ் ரமேஷ் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன.   மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் ஒருவர் முதல்வரானால் என்ன செய்வார், மக்களின் பிரச்சனைகளை எப்படி தீர்த்து வைப்பார், இந்த மாதிரி ஒரு முதல்வர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் நினைக்கும் ஒரு முதல்வராக மகேஷ் பாபுவின் கதாபாத்திரத்தை சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் கொரதலா சிவா. அதேநேரத்தில் தமிழக அரசியலையும் ஆங்காங்கே கலாய்த்து, பாசம், காதல், சண்டை என அனைத்தும் கலந்து கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார். முதல்வன் படத்தின் புதிய வெர்ஷனை பார்த்த ஒரு அனுபவத்தை கொடுக்கும் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. 

  தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ரவி கே.சந்திரன், எஸ்.திரு ஒளிப்பதிவில் காட்சிகள் அற்புதமாக வந்திருக்கிறது. 

  மொத்தத்தில் `பரத் எனும் நான்' முதல்வன். #BharathEnnumNaan #MaheshBabu
  ×