இயக்குநர் கீது மோகன்தாஸின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்ஸிக் படப்பிடிப்பின் பின்னணிக் காட்சிகள் வெளியீடு!

பிரம்மாண்டமான 63 வினாடிகள் கொண்ட காணொளியை தயாரிப்புக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Toxic Movie BTS Video Release: Director Geethu Mohandas Birthday Special Footage
Toxic Movie BTS Video Release: Director Geethu Mohandas Birthday Special Footage
Published on

1940 முதல் 1970 வரையிலான கோவாவின் போதைப் பொருள் வர்த்தகப் பின்னணியில் அமைந்த கதைக்கருவை கொண்டதாக ₹800 கோடி பட்ஜெட்டில் டாக்ஸிக் திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படத்தில் யஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மேலும் கியாரா அத்வானி, நயன்தாரா மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

குறிப்பாக ஹாலிவுட் சண்டைக் கலை நிபுணர்களைக் கொண்டுள்ளதுடன், உலக அளவில் வெளியிடுவதற்காக கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டுள்ளது. பல தாமதங்களுக்குப் பிறகு டிசம்பர் 2026-ல் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படடுகிறது.

இந்தியா அளவிலான இந்த அதிரடி திரில்லர் திரைப்படத்தை இயக்குனர் மோகன்தாஸ் தீவிரமாக இயக்கியிருப்பதை எடுத்துக்காட்டும் வகையில், தயாரிப்புக் குழுவினர் ஒரு பிரம்மாண்டமான 63 வினாடிகள் கொண்ட காணொளியை வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் கீது மோகன்தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தபடி இக்கட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தபடி இயக்குனரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com