விக்னேஷ் சிவன் வரிகளில் வெளியாகும் டாக்சிக் படத்தின் தபாஹி பாடல் அப்டேட்

யஷ் - கியாரா அத்வானி ரொமான்ஸில் இப்பாடல் உருவாகியுள்ளது. தமிழில் இப்பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
விக்னேஷ் சிவன் வரிகளில் வெளியாகும் டாக்சிக் படத்தின் தபாஹி பாடல் அப்டேட்
Published on

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்சிக். 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

டாக்சிக் படத்தின் தபாஹி பாடல் மார்ச் 2 அம தேதி வெளியாகவுள்ளது. யஷ் - கியாரா அத்வானி ரொமான்ஸில் உருவாகியுள்ள இப்பாடலின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. தமிழில் இப்பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com