search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudeep Kishan"

    • தனுஷ் நடிப்பில் உருவாகும் 50 ஆவது படத்தை அவரே இயக்கி, நடித்துள்ளார்.
    • ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடலான ’அடங்காத அசுரன்’ பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    தனுஷ் நடிப்பில் உருவாகும் 50 ஆவது படத்தை அவரே இயக்கி, நடித்துள்ளார். ராயன் என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடலான 'அடங்காத அசுரன்' பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் அடுத்த பாடல் மே 24 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இது கானா பாடலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்பாடலிற்கு 'வாட்டர் பாக்கெட்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

    ஏ.ஆர் ரகுமான் இசையில் கானா பாட்டு எப்படி இருக்கும் என ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தற்பொழுது படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சுதீப் கிஷன் , அபர்னா பாலமுரளியை தூக்கிக் கொண்டு இருக்கும் காட்சிகள் அப்போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. இருவருக்கும் உள்ள காதல் பாடலாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×