என் மலர்

  நீங்கள் தேடியது "Aparna Balamurali"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அபர்ணா பாலமுரளியிடம் மாணவர் ஒருவர் தோள் மீது கையைப் போட முயன்றார்.
  • இந்த செயலுக்கு திரையுலகினர், ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

  சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றவர் நடிகை அபர்ணா பாலமுரளி. கேரளாவை சேர்ந்த நடிகை அபர்ணா பாலமுரளி ஏராளமான மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது நடிகர் வினித் ஸ்ரீனிவாசனுடன் தங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

  இந்த படத்திற்கான விளம்பர நிகழ்ச்சி கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் நடந்தது. விழா தொடங்கியதும் மேடையில் வினித் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் அமர்ந்து இருந்தனர். அப்போது மேடையின் முன்பிருந்த மாணவர் ஒருவர் வேகமாக மேடையில் ஏறி அபர்ணா பாலமுரளி அருகில் சென்றார்.


  அபர்ணா பாலமுரளி

  அபர்ணா பாலமுரளி

  கையில் பூவுடன் சென்ற அவர், அபர்ணாவுக்கு பூ கொடுத்து அவரது தோளில் கைபோட்டார். இதனை சிறிதும் எதிர்ப்பார்க்காத அபர்ணா கூச்சத்துடன் விலகி செல்ல முயன்றார். ஆனால், அந்த மாணவரோ அபர்ணாவின் கையை பிடித்து இழுத்து போட்டோ எடுக்க முயன்றார்.

  மேடையில் நடந்த இந்த நிகழ்வு, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. உடனே அவர்கள், நடிகையிடம் தவறாக நடக்க முயன்ற மாணவரை கண்டித்தனர். உடனே அவர் மீண்டும் மேடையில் ஏறி நடிகையிடம் மன்னிப்பு கேட்டார். நடிகையின் தீவிர ரசிகர் என்றும், அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவ்வாறு நடந்து கொண்டதாகவும், இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.


  அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய மாணவர்

  அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய மாணவர்

  அதன்பின்பு அந்த மாணவர், தன்னை மன்னித்துவிடும் படி நடிகையிடம் கூறிவிட்டு அவருக்கு மீண்டும் கைகொடுக்க முயன்றார். ஆனால் நடிகை அபர்ணா அந்த மாணவருக்கு கைகொடுக்க மறுத்துவிட்டார். பின்னர் அந்த மாணவர் மேடையில் இருந்து இறங்கி சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலை தளத்தில் வைரலானது. இதற்கு திரையுலகினர், ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

  இந்நிலையில் அபர்னா பாலமுரளியிடம் தவறாக நடந்து கொண்ட மாணவரை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து சட்டக் கல்லூரி பணியாளர் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ், மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அபர்ணா பாலமுரளி.
  • படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அபர்ணா பாலமுரளியிடம் மாணவர் ஒருவர் தோள் மீது கையைப் போட முயன்றார்.

  சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றவர் நடிகை அபர்ணா பாலமுரளி. கேரளாவை சேர்ந்த நடிகை அபர்ணா பாலமுரளி ஏராளமான மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது நடிகர் வினித் ஸ்ரீனிவாசனுடன் தங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

  இந்த படத்திற்கான விளம்பர நிகழ்ச்சி கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் நடந்தது. விழா தொடங்கியதும் மேடையில் வினித் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் அமர்ந்து இருந்தனர். அப்போது மேடையின் முன்பிருந்த மாணவர் ஒருவர் வேகமாக மேடையில் ஏறி அபர்ணா பாலமுரளி அருகில் சென்றார்.

  கையில் பூவுடன் சென்ற அவர், அபர்ணாவுக்கு பூ கொடுத்து அவரது தோளில் கைபோட்டார். இதனை சிறிதும் எதிர்ப்பார்க்காத அபர்ணா கூச்சத்துடன் விலகி செல்ல முயன்றார். ஆனால், அந்த மாணவரோ அபர்ணாவின் கையை பிடித்து இழுத்து போட்டோ எடுக்க முயன்றார்.  மேடையில் நடந்த இந்த நிகழ்வு, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. உடனே அவர்கள், நடிகையிடம் தவறாக நடக்க முயன்ற மாணவரை கண்டித்தனர். உடனே அவர் மீண்டும் மேடையில் ஏறி நடிகையிடம் மன்னிப்பு கேட்டார். நடிகையின் தீவிர ரசிகர் என்றும், அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவ்வாறு நடந்து கொண்டதாகவும், இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

  அதன்பின்பு அந்த மாணவர், தன்னை மன்னித்துவிடும் படி நடிகையிடம் கூறிவிட்டு அவருக்கு மீண்டும் கைகொடுக்க முயன்றார். ஆனால் நடிகை அபர்ணா அந்த மாணவருக்கு கைகொடுக்க மறுத்துவிட்டார். பின்னர் அந்த மாணவர் மேடையில் இருந்து இறங்கி சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலை தளத்தில் வைரலானது.  இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். கேரள நடிகைகள் சிலரும் இந்த சம்பவத்தை கண்டித்து கருத்து பதிவிட்டனர். மலையாள கவிஞரும், எழுத்தாளருமான சவும்யா ராதா வித்யாதரும் இச்சம்பவத்தை கண்டித்து வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ஒரு பெண்ணின் உடலை அவரது அனுமதியின்றி தொடுவது மிகப்பெரிய தவறு. அவருக்கு தொல்லை கொடுத்தவன் மன்னிப்பு கேட்பதாக கூறி அவரிடம் மீண்டும் கைகுலுக்க முயன்றதையும் ஏற்கமுடியாது, என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நிகழ்வுக்கு திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ், மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அபர்ணா பாலமுரளி.
  • படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அபர்ணா பாலமுரளியிடம் மாணவர் ஒருவர் தோள் மீது கையைப் போட முயன்றார்.

  தமிழ், மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அபர்ணா பாலமுரளி. சூர்யாவுடன் இணைந்து நடித்த சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது மலையாளத்தில் தங்கம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்கான புரோமோஷன் நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார்.

  இந்நிலையில் திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களில் படத்தை அறிமுகம் செய்து வைக்கும் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் படத்தின் அறிமுக விழா நேற்று நடந்தது. இதில் படத்தின் நாயகன் வினித் சீனிவாசனுடன் அபர்ணா பாலமுரளியும் பங்கேற்றார். விழா தொடங்கிய சிறிது நேரத்தில் அக்கல்லூரியைச் சார்ந்த மாணவர் ஒருவர், அபர்ணா பாலமுரளிக்கு பூங்கொத்து வழங்கினார். அதனை மகிழ்ச்சியுடன் வாங்கிய அபர்ணா, மாணவருடன் கைகுலுக்கி கொண்டார்.

   

  அபர்ணா பாலமுரளி

  அபர்ணா பாலமுரளி


  இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அந்த மாணவர் அபர்ணாவின் தோள் மீது கையைப் போட முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட அபர்ணா, அவர் கையிலிருந்து வேகமாக நழுவினார். ஆனாலும் விடாமல் அபர்ணாவை பிடித்து இழுக்கும் விதமாக மாணவர் தகாத முறையில் நடந்துகொண்டார். அருகில் இருந்த தயாரிப்பாளர், ஹீரோ வினித் ஆகியோர் சத்தம் போட்டு மாணவரை கட்டுப்படுத்தினர்.

   

  அபர்ணா பாலமுரளியிடம் தகாத முறையில் நடந்த மாணவர்

  அபர்ணா பாலமுரளியிடம் தகாத முறையில் நடந்த மாணவர்


  இதற்கு பின் மைக் எடுத்து பேசிய அந்த மாணவர், தான் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை என்றும், அபர்ணாவின் தீவிர ரசிகன் என்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு நடந்துகொண்டதாகவும் விளக்கமளித்தார். அத்தோடு நில்லாமல் மீண்டும் அபர்ணாவிடம் கை கொடுக்க வந்தார். ஆனால் அபர்ணாவோ, கையைக் கொடுக்காமல் வேண்டாம் என சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்தார். ஆனாலும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மேடையிலேயே மன்னிப்பு கேட்டார். இந்தச் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு உண்டானது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அறிமுக இயக்குனர் ஆர். கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நித்தம் ஒரு வானம்'.
  • இப்படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்து வரும் படம் 'நித்தம் ஒரு வானம்'. இதில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


  நித்தம் ஒரு வானம்

  வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் மலையாளத்தில் 'ஆகாசம்' என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. 'நித்தம் ஒரு வானம்' திரைப்படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


  அபர்ணா பாலமுரளி - ஆர். கார்த்திக்

  இதையடுத்து 'நித்தம் ஒரு வானம்' நடிகை அபர்ணா பாலமுரளி மற்றும் இயக்குனர் கார்த்தி மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். 'நித்தம் ஒரு வானம்' படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், "கதைக்கு தேவை என்பதால் இதில் மூன்று கதாநாயகிகள் இருக்கிறார்கள். படம் பார்த்து முடித்த பின்பு தேவையற்றது எதையும் நினைக்கமாட்டீர்கள். கதாபாத்திரங்களாக மூன்று பேரும் அவர்களுக்கான செயல்திறனை செய்திருக்கிறார்கள். படம் முடித்து வெளிவரும் போது சர்ப்ரைஸாக வேறு ஒன்று இருக்கும்" என்று இயக்குனர் ஆர். கார்த்திக் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி வரும் சூரரைப் போற்று படக்குழுவில் இருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #SooraraiPottru
  `என்ஜிகே', காப்பான் படங்களை தொடர்ந்து சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை துவங்கிய விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சூர்யா ஜேடியாக நடித்து வரும் அபர்ணா பாலமுரளி தனது முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அபர்ணா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சூரரைப் போற்று முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டேன், இந்த செட்டில் உள்ள அனைவருமே அன்பாக உள்ளார்கள். இரும்பு பெண் சுதா மேடம் போன்று யாருமில்லை. மற்றும் அந்த முக்கியமான நபர், அவரை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

  பிரபல தொழில் அதிபரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது. இதில் கோபிநாத்தின் மனைவி பார்க்கவியின் கதாபாத்திரத்தில் அபர்ணா நடித்து வருகிறார். பார்ப்பதற்கு பார்கவி போலவே இருப்பதால் அவரை இந்த படத்திற்கு தேர்வு செய்துள்ளார்கள்.


  சாதாரண மனிதர்களும் விமானப் போக்குவரத்தை பயன்படுத்தும் நோக்கில் பட்ஜெட் விமானச் சேவையை அறிமுகப்படுத்தியவர் ‘ஏர் டெக்கான்’ நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சதிஷ் சூர்யா படத்தொகுப்பையும், ஜாக்கி கலை பணிகளையும் கவனிக்கின்றனர்.

  2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் சீக்யா என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. #SooraraiPottru #Suriya38
   #SudhaKongara #AparnaBalamurali

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ’சர்வம் தாள மயம்’ படத்தில் நடித்துள்ள அபர்ணா பாலமுரளி தமிழ் உள்ளிட்ட பிற மொழகளில் நடிப்பதற்காக உடம்பைக் குறைத்து வருவதாக கூறினார். #SarvamThaalaMayam #AparnaBalamurali
  ’எட்டு தோட்டாக்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி தற்போது ’சர்வம் தாள மயம்’ படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் அபர்ணா பாலமுரளி அளித்த பேட்டி:

  எந்த மொழி படமாக இருந்தாலும் அதில் என் கதாபாத்திரம் வலுவாக இருக்கவேண்டும். அப்படிதான் ’மகேஷிண்டே பிரதிகாரம்’, `எட்டு தோட்டாக்கள்’ தொடங்கி இப்போது `சர்வம் தாள மயம்‘ படம் வரை என்னோட கதாபாத்திரம் பார்த்துதான் படத்தை தேர்வு செய்து வருகிறேன்.

  ‘சர்வம் தாள மயம்’ படம் ஆசிரியர் - மாணவர் உறவை பேசும் படம். அதனால் என் கதாபாத்திரத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்காது. படம் முழுக்க வர மாட்டேன். சில காட்சிகளில் வந்தாலும் அது படத்துக்கு முக்கியமானதாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும்.  மலையாள படங்களில் நடிக்கும்போது நான் எவ்வளவு குண்டாக, பப்ளியாக இருந்தாலும் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். என் இயக்குனர்களும் அதை பற்றி எதுவும் சொல்வது இல்லை. ஆனால், நான் தமிழ்ப் படங்களிலோ அல்லது வேற மொழிப் படங்களிலோ கமிட்டாகும்போது நான் உடம்பைக் குறைக்க வேண்டிய அவசியம் இருக்கு. அதுக்காகத்தான் தற்போது ஜிம்முக்கெல்லாம் போய் உடம்பை குறைச்சிட்டு இருக்கேன். மலையாளத்தில் நிறைய பாடல்கள் பாடியிருக்கேன். தமிழில் `எட்டு தோட்டாக்கள்’ படத்தில் கூட பாடியிருக்கேன். அப்பா, அம்மா இரண்டு பேருமே இசைக்கலைஞர்கள் தான். எதிர்பாராமல்தான் நடிக்க வந்தேன். எப்பவுமே இசைக்குக்குதான் முன்னுரிமை கொடுப்பேன் என்றார். #SarvamThaalaMayam #AparnaBalamurali #GVPrakashKumar

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படத்தின் முன்னோட்டம். #SarvamThaalamayam #GVPrakashKumar
  மைன்ட் ஸ்கிரீன் பிலிம் இன்ஸ்ட்டியூட் சார்பாக லதா மேனன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சர்வம் தாள மயம்’.

  ஜி.வி.பிரகாஷ் நாயனாக நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாகவும், நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்ஜெயன், குமரவேல், திவ்யதர்ஷினி, சுமேஷ், அதிரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.

  இசை - ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு - ரவி யாதவ், படத்தொகுப்பு - ஆண்டனி, பாடல்கள் - அருண்ராஜா காமராஜ், மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், கலை இயக்குநர் - ஜி.சி.ஆனந்தன், ஆடை வடிவமைப்பு - சரஸ்வதி மேனன், ஒலி வடிவமைப்பாளர் - விஜய் ரத்தினம், இணை தயாரிப்பாளர் - பிராங்க் பிரியாட், தயாரிப்பாளர் - லதா மேனன், இணை இயக்குநர் - விஜய் பாலாஜி, எழுத்து, இயக்கம் - ராஜீவ் மேனன்.  ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி படம் முழுக்க முழுக்க இசையை மையப்படுத்தி உருவாகி இருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  படம் பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜீவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon
  ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

  ஜி.வி.பிரகாஷ் நாயனாக நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாகவும் நடித்துள்ளனர். நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்ஜெயன், குமரவேல், திவ்யதர்ஷினி, சுமேஷ், அதிரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

  படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

  முன்னதாக படத்தை டிசம்பர் 28-ல் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் நீடித்ததால் படம் பிப்ரவரிக்கு தள்ளிப்போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜீவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார். #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon
  ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

  ஜி.வி.பிரகாஷ் நாயனாக நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாகவும் நடித்துள்ளனர். நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்ஜெயன், குமரவேல், திவ்யதர்ஷினி, சுமேஷ், அதிரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

  படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருப்பதாவது,


  `பீட்டரின் உலகை உலுக்கும் கேள்வி ஒன்றைக் கேட்கிறாள் சாரா.
  அந்தக் கேள்விக்கான விடையை பீட்டர் தேடும் பயணம் - சர்வம் தாளமயம்.
  பிப்ரவரி 2019 முதல்'

  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜீவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon
  ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

  ஜி.வி.பிரகாஷ் நாயனாக நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாகவும் நடித்துள்ளனர். நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்ஜெயன், குமரவேல், திவ்யதர்ஷினி, சுமேஷ், அதிரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். 


  படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 28-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பு தரப்பு ட்விட்டரில் அறிவித்துள்ளது. படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இசையை மையமாக வைத்து சர்வம் தாளமயம் படம் தான் உருவாகி இருக்கிறது என்று நடிகர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்தார். #SarvamThaalaMayam #GVPrakashKumar
  கோவையில் சர்வம் தாளமயம் திரைப்பட குழுவினர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது நடிகரும், இசையமைப்பாளரருமான ஜி.வி.பிரகாஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இசையை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் சர்வம் தாளமயம். சமூகத்ததில் அழிந்து வரும் கலை குறித்த படமாக இது அமைந்துள்ளது.

  மறைந்த பாடலாசிரியர் முத்துக்குமாரின் பாடல் இதில் ஒன்று உள்ளது. கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் ஆன சின்ன முயற்சி செய்தேன். எனது இந்த முயற்சி ஆயிரம் பேரை ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை. புயலால் ஏற்பட்ட பேரழிவு அதிகமாக இருக்கின்றது. அதிக இடங்களில் தென்னை, வாழை மரங்கள் விழுந்ததில் அப்பகுதியே உருக்குலைந்துள்ளது வேதனை அளிக்கிறது.  அரசு மட்டும் முயற்சித்தால் போதாது, எல்லோரும் சேர்ந்து பாதிப்பை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். இன்னும் அதிகமான முயற்சியினை அரசுடன் சேர்ந்து அனைவரும் எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினேன்.

  மின்சாரத்துறை ஊழியர்கள் இரவும், பகலும் பாராமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேலை செய்து வருவது பாராட்டக் கூடியது. அரசியலில் வருவதற்கு என்ற எண்ணம் உண்டா? என்ற கேள்விக்கு அரசியலுக்கு வரும் அளவுக்கு வயதும் அனுபவமும் என்னிடம் இல்லை இவ்வாறு அவர் கூறினார்.

  பேட்டியின் போது நடிகை அபர்ணா பாலமுரளி, இயக்குநர் ராஜீவ்மேனன் ஆகியோர் உடன் இருந்தனர். #SarvamThaalaMayam #GVPrakashKumar #AparnaBalamurali

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo