search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv menon"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ’சர்வம் தாள மயம்’ படத்தில் நடித்துள்ள அபர்ணா பாலமுரளி தமிழ் உள்ளிட்ட பிற மொழகளில் நடிப்பதற்காக உடம்பைக் குறைத்து வருவதாக கூறினார். #SarvamThaalaMayam #AparnaBalamurali
    ’எட்டு தோட்டாக்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி தற்போது ’சர்வம் தாள மயம்’ படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் அபர்ணா பாலமுரளி அளித்த பேட்டி:

    எந்த மொழி படமாக இருந்தாலும் அதில் என் கதாபாத்திரம் வலுவாக இருக்கவேண்டும். அப்படிதான் ’மகேஷிண்டே பிரதிகாரம்’, `எட்டு தோட்டாக்கள்’ தொடங்கி இப்போது `சர்வம் தாள மயம்‘ படம் வரை என்னோட கதாபாத்திரம் பார்த்துதான் படத்தை தேர்வு செய்து வருகிறேன்.

    ‘சர்வம் தாள மயம்’ படம் ஆசிரியர் - மாணவர் உறவை பேசும் படம். அதனால் என் கதாபாத்திரத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்காது. படம் முழுக்க வர மாட்டேன். சில காட்சிகளில் வந்தாலும் அது படத்துக்கு முக்கியமானதாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும்.



    மலையாள படங்களில் நடிக்கும்போது நான் எவ்வளவு குண்டாக, பப்ளியாக இருந்தாலும் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். என் இயக்குனர்களும் அதை பற்றி எதுவும் சொல்வது இல்லை. ஆனால், நான் தமிழ்ப் படங்களிலோ அல்லது வேற மொழிப் படங்களிலோ கமிட்டாகும்போது நான் உடம்பைக் குறைக்க வேண்டிய அவசியம் இருக்கு. அதுக்காகத்தான் தற்போது ஜிம்முக்கெல்லாம் போய் உடம்பை குறைச்சிட்டு இருக்கேன். மலையாளத்தில் நிறைய பாடல்கள் பாடியிருக்கேன். தமிழில் `எட்டு தோட்டாக்கள்’ படத்தில் கூட பாடியிருக்கேன். அப்பா, அம்மா இரண்டு பேருமே இசைக்கலைஞர்கள் தான். எதிர்பாராமல்தான் நடிக்க வந்தேன். எப்பவுமே இசைக்குக்குதான் முன்னுரிமை கொடுப்பேன் என்றார். #SarvamThaalaMayam #AparnaBalamurali #GVPrakashKumar

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படத்தின் முன்னோட்டம். #SarvamThaalamayam #GVPrakashKumar
    மைன்ட் ஸ்கிரீன் பிலிம் இன்ஸ்ட்டியூட் சார்பாக லதா மேனன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சர்வம் தாள மயம்’.

    ஜி.வி.பிரகாஷ் நாயனாக நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாகவும், நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்ஜெயன், குமரவேல், திவ்யதர்ஷினி, சுமேஷ், அதிரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.

    இசை - ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு - ரவி யாதவ், படத்தொகுப்பு - ஆண்டனி, பாடல்கள் - அருண்ராஜா காமராஜ், மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், கலை இயக்குநர் - ஜி.சி.ஆனந்தன், ஆடை வடிவமைப்பு - சரஸ்வதி மேனன், ஒலி வடிவமைப்பாளர் - விஜய் ரத்தினம், இணை தயாரிப்பாளர் - பிராங்க் பிரியாட், தயாரிப்பாளர் - லதா மேனன், இணை இயக்குநர் - விஜய் பாலாஜி, எழுத்து, இயக்கம் - ராஜீவ் மேனன்.



    ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி படம் முழுக்க முழுக்க இசையை மையப்படுத்தி உருவாகி இருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    படம் பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராஜீவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon
    ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

    ஜி.வி.பிரகாஷ் நாயனாக நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாகவும் நடித்துள்ளனர். நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்ஜெயன், குமரவேல், திவ்யதர்ஷினி, சுமேஷ், அதிரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

    படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

    முன்னதாக படத்தை டிசம்பர் 28-ல் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் நீடித்ததால் படம் பிப்ரவரிக்கு தள்ளிப்போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராஜீவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார். #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon
    ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

    ஜி.வி.பிரகாஷ் நாயனாக நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாகவும் நடித்துள்ளனர். நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்ஜெயன், குமரவேல், திவ்யதர்ஷினி, சுமேஷ், அதிரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

    படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருப்பதாவது,


    `பீட்டரின் உலகை உலுக்கும் கேள்வி ஒன்றைக் கேட்கிறாள் சாரா.
    அந்தக் கேள்விக்கான விடையை பீட்டர் தேடும் பயணம் - சர்வம் தாளமயம்.
    பிப்ரவரி 2019 முதல்'

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராஜீவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon
    ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

    ஜி.வி.பிரகாஷ் நாயனாக நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாகவும் நடித்துள்ளனர். நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்ஜெயன், குமரவேல், திவ்யதர்ஷினி, சுமேஷ், அதிரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். 


    படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 28-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பு தரப்பு ட்விட்டரில் அறிவித்துள்ளது. படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இசையை மையமாக வைத்து சர்வம் தாளமயம் படம் தான் உருவாகி இருக்கிறது என்று நடிகர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்தார். #SarvamThaalaMayam #GVPrakashKumar
    கோவையில் சர்வம் தாளமயம் திரைப்பட குழுவினர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது நடிகரும், இசையமைப்பாளரருமான ஜி.வி.பிரகாஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இசையை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் சர்வம் தாளமயம். சமூகத்ததில் அழிந்து வரும் கலை குறித்த படமாக இது அமைந்துள்ளது.

    மறைந்த பாடலாசிரியர் முத்துக்குமாரின் பாடல் இதில் ஒன்று உள்ளது. கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் ஆன சின்ன முயற்சி செய்தேன். எனது இந்த முயற்சி ஆயிரம் பேரை ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை. புயலால் ஏற்பட்ட பேரழிவு அதிகமாக இருக்கின்றது. அதிக இடங்களில் தென்னை, வாழை மரங்கள் விழுந்ததில் அப்பகுதியே உருக்குலைந்துள்ளது வேதனை அளிக்கிறது.



    அரசு மட்டும் முயற்சித்தால் போதாது, எல்லோரும் சேர்ந்து பாதிப்பை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். இன்னும் அதிகமான முயற்சியினை அரசுடன் சேர்ந்து அனைவரும் எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினேன்.

    மின்சாரத்துறை ஊழியர்கள் இரவும், பகலும் பாராமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேலை செய்து வருவது பாராட்டக் கூடியது. அரசியலில் வருவதற்கு என்ற எண்ணம் உண்டா? என்ற கேள்விக்கு அரசியலுக்கு வரும் அளவுக்கு வயதும் அனுபவமும் என்னிடம் இல்லை இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நடிகை அபர்ணா பாலமுரளி, இயக்குநர் ராஜீவ்மேனன் ஆகியோர் உடன் இருந்தனர். #SarvamThaalaMayam #GVPrakashKumar #AparnaBalamurali

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சர்வம் தாள மயம் படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் ஒருவருடம் முறையாக மிருதங்கம் கற்றதாக படத்தின் இயக்குநர் ராஜீவ் மேனன் கூறினார். #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon
    ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

    இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பு பற்றி ராஜீவ் மேனன் கூறியதாவது:

    இந்தப் படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் பயங்கரமாக உழைத்து இருக்கிறார். படப்பிடிப்பு செல்வதற்கு முன்பே உமையாள்புரம் சிவராமனிடம் ஒரு வருடம் மிருதங்கம் வகுப்புக்கு ஜி.வி.யை அனுப்பி வெச்சேன். ஜி.வி.க்கு மிருதங்கம் சொல்லிக் கொடுக்குறதுல உமையாள்புரம் சிவராமன் ரொம்ப ஆர்வமா இருந்தார்.



    ஒரு நாள் லேட்டானாலும் எனக்கு போன் பண்ணி, `என்ன சார் இன்னும் ஜி.வி வரலை’னு கேட்டுடுவார். அப்பறம் நான் போன் பண்ணி, `ஜி.வி லேட் பண்ணாம சீக்கிரம் போங்க’னு சொல்லுவேன். எவ்வளவு பிசியாக இருந்தாலும் தவறாமல் ஒரு வரு‌ஷம் முழுக்க கிளாஸுக்கு போனார் ஜி.வி’’ என்றார். #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாளமயம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #SarvamThalaMayam
    'மின்சார கனவு', `கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்' வெற்றி படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் `சர்வம் தாள மயம்'.

    ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், தற்போது இதன் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 28ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.



    ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையை கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு இளைஞன், பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான். இன்றைய காலகட்டத்தில் சாதி, மத பிரச்சனைகளை தாண்டி அவனது இசை ஆசை நிறைவேறியதா என்பதே படத்தின் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். #SarvamThalaMayam #GVPrakashKumar
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படம் டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. #SarvamThalaMayam #GVPrakashKumar
    `மின்சார கனவு', `கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்' வெற்றி படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் `சர்வம் தாள மயம்'.

    ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படம் 31-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரத்யேகமாக திரையிடப்படவுள்ளது.
    ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையை கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு இளைஞன், பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான். இன்றைய காலகட்டத்தில் சாதி, மத பிரச்சனைகளை தாண்டி அவனது இசை ஆசை நிறைவேறியதா என்பதே படத்தின் கதை.

    காஷ்மீர், ஷில்லாங், ஜெய்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. #SarvamThalaMayam #GVPrakashKumar

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராஜுவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் `சர்வம் தாள மயம்' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் நிலையில், `மெர்சல் அரசன்' படத்திற்கு பிறகு ரகுமான் இசையில் பாடியிருப்பதாக ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார். #SarvamThaalaMayam
    தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான செம படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக குப்பத்து ராஜா, 4ஜி, ஐங்கரன், அடங்காதே, 100% காதல், சர்வம் தாள மயம், ஆதிக்குடன் ஒரு படம், ரெட்ட கொம்பு, கருப்பர் நகரம், இயக்குநர் விஜய்யுடன் ஒரு படம் என பல படங்கள் உருவாகி வருகின்றன. 

    இதில் ராஜுவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் `சர்வம் தள மாயம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில், `மெர்சல் அரசன்' படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு குத்துப் பாடலை தான் பாடியிருப்பதாக ஜி.வி.பிரகாஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது, 

    ` சர்வம் தாள மயம் படத்தில் `மொசார்ட் ஆஃப் இந்தியா' ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அறிமுக பாடலை பாடியதில் அதீத மகிழ்ச்சி அடைகிறேன். `ஊர்வசி ஊர்வசி' பாடலுக்கு பிறகு ஒரு `தர லோக்கல்' பாடலாக இது இருக்கும். `மெர்சல் அரசன்' பாடலுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையில் `பீட்டர் ஃபீட்ட ஏத்து' என தொடங்கும் இந்த பாடலை பாடியிருக்கிறேன். இது இளைஞர்களின் அன்ந்தமாக இருக்கும் ' என்று கூறியிருக்கிறார். 



    இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `8 தோட்டாக்கள்' படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    மைண்ட்ஸ்கிரீன் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரவி யாதவ் ஒளிப்பதிவு பணிகளையும், அந்தோணி படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். #SarvamThaalaMayam #GVPrakashKumar

    ×