என் மலர்
நீங்கள் தேடியது "ஜிவி பிரகாஷ்"
- பிரார்த்தனா நாதன் கதாநாயகியாக நடிக்கிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் முருகு இயக்கத்தில் பிரபல யூடியூபர் 'பைனலி' பாரத் நடிக்கும் படம் 'நிஞ்சா'. இப்படத்திற்கான தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இப்படத்தை கே. எஸ். சினிஷ் மற்றும் எஸ். சாய் தேவானந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்இசையமைக்கிறார். இப்படம் தொடர்பாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்க்கும்போது, இந்தப் படம் ஒரு செல்ல நாயை மையமாகக் கொண்ட ஒரு பொழுதுபோக்குப் படமாக உருவாக உள்ளதாக தெரிகிறது. பிரார்த்தனா நாதன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மற்ற விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ‘AB4’ எனப்பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
- கேஜிஎப் பட நடிகை ரவீனா தாண்டனின் மகள் ராஷா ததானி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை பெற்ற இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தெலுங்கு படத்தில் இசையமைக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அஜய் பூபதி இயக்கத்தில் கட்டமனேனி ஜெயகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் 'AB4' எனப்பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
கேஜிஎப் பட நடிகை ரவீனா தாண்டனின் மகள் ராஷா ததானி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சந்தமாமா கதலு பிக்சர்ஸ் சார்பில் ஜெமினி கிரண் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இதற்கு முன், தெலுங்கில் வருண் தேஜ் நடித்த மட்கா, ராபின்ஹுட் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களில் இசையமைத்துள்ளார். இப்படங்கள் இசைக்காக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் பவிஷ். இவர் தனுஷின் உறவினராவார். பவிஷ் அடுத்ததாக அறிமுக இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகேஷ் ராஜேந்திரன் 'போகன்' மற்றும் 'பூமி' ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இப்படத்தை தினேஷ் மற்றும் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் பெயரை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நாளை 5 மணிக்கு அறிவிக்கிறார்.
காதல் கலந்த கமர்ஷியல் கதையாக உருவாகும் இப்படத்தில் நாகா துர்கா என்பவர் நாயகியாக அறிமுகமாகிறார். இதன் ஒளிப்பதிவாளராக பி.ஜி. முத்தையா, எடிட்டராக என்.பி.ஸ்ரீகாந்த், கலை இயக்குநராக மகேந்திரன் உள்ளிட்டோர் பணிபுரியவுள்ளனர். பவிஷ்– நாகா துர்கா ஆகியோருடன் முன்னணி நடிகர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
- 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.
- பெண்கள் அணி ஈரானுக்கு எதிரான இறுதியில் வென்று தங்கப்பதக்கத்தை வென்றது.
ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி 2025 (3வது பதிப்பு) தற்போது பஹ்ரைனில் (மனாமா) நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.
இதில் இந்தியா கபடி போட்டியில் இரு தங்கங்களை வென்றுள்ளது: ஆண்கள் அணி ஈரானை 35-32 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது. அதேபோல் பெண்கள் அணியும் ஈரானுக்கு எதிரான இறுதியில் வென்று தங்கப்பதக்கத்தை வென்றது.
இந்நிலையில், ஆசிய இளையோர் விளையாட்டு கபடியில் தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஜெயில் படப்பிடிப்பின்போது கண்ணகி நகர் சகோதர சகோதரிகளின் அபாரமான விளையாட்டுத் திறனை கண்டு வியந்தேன். இன்று உலகமும் வியக்கிறது.
அன்புத் தங்கை கார்த்திகா நம் தேசத்தின் பெருமை. மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
- இப்படத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார்.
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த 'இட்லி கடை'. இப்படம் கடந்த 1-ந்தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு என்பது குறைவே.
இதனையடுத்து, 'இட்லி கடை' படத்தை தொடர்ந்து போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ளார். இது தனுஷின் 54-வது படமாகும். இதுவரை படத்திற்கு தலைப்பு எதுவும் வைக்கப்படாத நிலையில் D54 என்றே சொல்லப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இப்படத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேண் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், D54 பிளாக்பஸ்டர் படம் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிளாக்பஸ்டர் படம், எழுத்து மற்றும் ஆடியோ தொடர்ந்து வருகிறது. சமீபத்திய காலங்களில் தனது படைப்புகளில் மிகவும் நம்பிக்கைக்குரிய இயக்குனர் மற்றும் silent killer என்று கூறியுள்ளார்.
இதனால் D54 படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- டீசல் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17-ம் தேதி வெளியாகியது.
- குழுவினரின் உழைப்பு பாராட்டுக்குரியது.
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா நடிக்கும் `டீசல்'. பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.
துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
டீசல் திரைப்படம் அக்டோபர் 17-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் டீசல் படம் சமூக அக்கறையோடு சொல்லப்பட்ட நல்லதொரு படம் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவிட்டில் கூறியிருப்பதாவது:-
நேற்று டீசல் திரைப்படம் பார்த்தேன். சமூக அக்கறையோடு சொல்லப்பட்ட நல்லதொரு படம். குழுவினரின் உழைப்பு பாராட்டுக்குரியது என கூறினார்.
- செல்வராகவன் இயக்கத்தில், கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார்.
- இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் என்ற அடையாளத்துடன் அறிமுகம் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் இரண்டு முறை தேசிய விருதை பெற்றுள்ளார்.
'சூரரைப் போற்று' மற்றும் வாத்தி படத்தில் பாடல்கள் அமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் தற்போது ஜி.வி.பிரகாஷ் தேசிய விருதை பெற்றுள்ளார்.
இதற்கிடையே, செல்வராகவன் இயக்கத்தில், கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார். இப்படத்திற்கான பூஜை கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்று படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் தொடர்பான எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தன.

இந்த நிலையில், 'மெண்டல் மனதில்' படத்தின் 4-வது கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
'மெண்டல் மனதில்' படத்தின் 4-வது கட்ட படப்பிடிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற செல்வராகவன் சார் இயக்கத்தில்... இந்த குறிப்பிட்ட படத்திற்காக காத்திருங்கள். ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன ஆகிய படங்களுக்குப் பிறகு இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
- 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் தற்போது இரண்டாவது தேசிய விருதை பெற்றுள்ளார்.
- ‘சூரரைப் போற்று’ படத்திற்கு தேசிய விருது பெற்றுள்ளார்.
டெல்லியில் கடந்த மாதம் 23-ந்தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தேசிய விருது பெற்றார்.
'வாத்தி' படத்தில் பாடல்கள் அமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் ஜி.வி. பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றார். 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் தற்போது இரண்டாவது தேசிய விருதை பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு 'சூரரைப் போற்று' படத்திற்கு தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக தேசிய விருதை பெற்ற ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பரிசு ஒன்றை வழங்கி உள்ளார். இதுதொடர்பாக ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு. இரண்டாவது முறையாக தேசிய விருதுகளைப் பெற்றதற்காக ஏ.ஆர்.ரகுமான் சார் இந்த அழகான வெள்ளை கிராண்ட் பியானோவை எனக்குப் பரிசளித்தார்.
மிக்க நன்றி சார், இது நிறைய அர்த்தம் தருகிறது. லெஜெண்ட் பயன்படுத்திய பியானோ. இதைவிட சிறந்த பரிசு என்னவென்று நான் கேட்க முடியும் என்று கூறியுள்ளார்.
- கடந்த 2013-ம் ஆண்டு சைந்தவியை ஜிவி பிரகாஷ் திருமணம் செய்து கொண்டார்.
- இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித்தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.
இதனிடையே ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.
இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜரான ஜி.வி.பிரகாஷ், சைந்தவி நேரில் ஆஜராகி இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர்.
வழக்கு விசாரணையின்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவித்தார்.
இதையடுத்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகிய இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
- ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
- ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித்தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.
இதனிடையே ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.
இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜரான ஜி.வி.பிரகாஷ், சைந்தவி நேரில் ஆஜராகி இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர்.
இந்தநிலையில் விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
வழக்கு விசாரணையின்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவித்தார்.
இதையடுத்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கில் அடுத்த மாதம் 30-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.
- மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது கிடைத்தது மிகப்பெரிய சந்தோசம்- ஊர்வசி
- விருது வாங்கியது ரொம்ப ரொம்ப சந்தோசம். இது என்னுடைய 2ஆவது தேசிய விருது- ஜி.வி. பிரகாஷ்
71ஆவது தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று விருது வழங்கி கவுரவித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஜி.வி. பிரகாஷ் வாத்தி பட பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றார். விருது பெற்றது குறித்து ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது:-
எனக்கு வாத்தி பட பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது. விருது வாங்கியது ரொம்ப ரொம்ப சந்தோசம். இது என்னுடைய 2ஆவது தேசிய விருது. ரொம்ப ஹேப்பியாக உள்ளது. சூரரை போற்று படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்காக கிடைத்தது. வாத்தி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், தனுஷ், படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் எனது நன்றி.
இவ்வாறு ஜி.வி. பிரகாஷ் தெரிவித்தார்.
உள்ளொழுக்கு மலையாள படத்தில் நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. விருது வாங்கியது தொடர்பாக ஊர்வசி கூறியதாவது:-
விருது வாங்கியது ரொம்ப ரொம்ப சந்தோசம். எனக்கு இது 2ஆவது விருது. இரண்டு விருதுகளையும் பெண் ஜனாதிபதியிடம் இருந்து வாங்கியுள்ளேன். இந்தியாவின் உயரிய பதவியில் இருக்கும் இரண்டு பெண் ஜனாதிபதியிடம் இருந்து வாங்கியதை பெருமையாக நினைக்கிறேன். மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது கிடைத்தது மிகப்பெரிய சந்தோசம்.
இவ்வாறு ஊர்வசி தெரிவித்தார்.
ஊர்வசி பிரதீபா பாட்டீல் மற்றும் திரவுபதி முர்மு ஆகியோர் கைகளால் விருது வழங்கியுள்ளார்.
- ஜி.வி.பிரகாஷூக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நேற்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷுக்கு 'சூரரைப் போற்று' படத்தின் 'மண்ணு உருண்டை மேல' பாடல் ரெகார்டிங் வீடியோவை பகிர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'சூரரைப் போற்று' படத்தில் நடிகர் சூர்யா நடித்து இருந்தார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பல விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.






