நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான ஜி.வி. பிரகாஷ் திரைப்படம்

லக்கி திரைப்படத்தை கந்தசாமி மற்றும் புஷ்பா கந்தசாமி தயாரித்துள்ளனர்.
நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான ஜி.வி. பிரகாஷ் திரைப்படம்
Published on: 

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் `லக்கி தி சூப்பர் ஸ்டார்'. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், லக்கி திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி.-யில் வெளியானது.

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான "லக்கி" திரைப்படத்தை கந்தசாமி மற்றும் புஷ்பா கந்தசாமி தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் அனஸ்வரா ராஜன், மேக்னா சுமேஷ், தேவதர்ஷினி, இளங்கோ குமரவேல், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மாயமான நாய் குட்டி "லக்கி" அரசியல்வாதிகளிடம் சிக்கிக்கொள்ள அதனை கதாநாயகன் மீட்பதே கதைக்கருவாக அமைக்கப்பட்டுள்ளது. உதய் மகேஷ் இயக்கத்தில் "லக்கி" திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகி இருப்பது ரசிகர்களை மகழிச்சியில் ஆழ்த்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com