என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அம்மா இறந்து விட்டதாக கூறி ஜி.வி.பிரகாசிடம் பண மோசடி
    X

    அம்மா இறந்து விட்டதாக கூறி ஜி.வி.பிரகாசிடம் பண மோசடி

    • அம்மாவிற்கு இறுதி சடங்கு பண்ணுவதற்கு உதவி பண்ணுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இது போன்ற மோசடி நபர்கள் இருப்பதால் உண்மையில் உதவி கேட்பவர்களுக்கும் சிக்கல் ஏற்படுகிறது.

    தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இசையமைப்பாளர், நடிகர் என சினிமாவில் பிசியாக ஓடிக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் யாரேனும் உதவி என்று கேட்டால் உடனடியாக தன்னால் முடிந்தளவு பண உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    இந்த நிலையில் ஒரு எக்ஸ்தள கணக்கில் இருந்து ஜி.வி.பிரகாசுக்கு உதவி கேட்டு பதிவு வந்துள்ளது. அந்த பதிவில் எங்களுக்கு சிறு வயதில் அப்பா தவறி விட்டார். அம்மா தான் வேலைக்கு போய் படிக்க வைத்து கொண்டிருந்தார். இப்போது அம்மாவும் இறந்து விட்டார். இறுதி சடங்கு நடத்துவதற்கு கூட பண வசதி இல்லை. இதனால் நானும் தங்கையும் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறோம். அம்மாவிற்கு இறுதி சடங்கு பண்ணுவதற்கு உதவி பண்ணுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதைப் பார்த்த ஜி.வி.பிரகாஷ் பரிதாபப்பட்டு உதவி கேட்டவரின் நம்பரை வாங்கி ரூ.20,000 அனுப்பி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் அவர் செய்த பண உதவியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதை பார்த்து பலரும் அந்த கணக்கிற்கு பணம் அனுப்பி இருக்கின்றனர்.

    இந்த நிலையில் தனது அம்மா இறந்து விட்டதாக சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவு 3 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. அந்த வீடியோ யூடியூப்பில் இருப்பதாகவும் ஜி.வி.பிரகாஷ் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் சோசியல் மீடியாவில் ஆதாரத்துடன் பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற மோசடி நபர்கள் இருப்பதால் உண்மையில் உதவி கேட்பவர்களுக்கும் சிக்கல் ஏற்படுகிறது.

    Next Story
    ×