என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிகப் பயணம்"

    திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்குவது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவு.

    தமிழ் ஆன்மிக இலக்கிய உலகின் உச்ச சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் திருவாசகம், இப்போது சமகால இசை வடிவில் புதிய உயிர் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஜி.வி. பிரகாஷ் குமார் குரலும், இசையும் இணைந்து உருவான திருவாசகத்தின் முதல் பாடல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி, ஆன்மிக இசை ரசிகர்களிடையே ஆழ்ந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

    இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் இசை நிகழ்ச்சியாக வழங்கியபோது, அந்த மேடை முழுவதும் ஒரு தெய்வீக அமைதி சூழ்ந்ததாக பேசப்பட்டது. அந்த ஒரே நிகழ்விலேயே, திருவாசக இசை முயற்சியின் ஆழமும் ஆன்மிக வலிமையும் வெளிப்பட்டது.

    ஜி.வி. பிரகாஷின் YouTube சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள இந்த முதல் பாடல், சிவனின் மகிமையை போற்றும் சொற்களாலும், திருவாசகத்தின் ஆத்மார்த்தமான பக்தி உணர்வாலும் நிரம்பியுள்ளது.

    ஆதியும் அந்தமும் இல்லாத சிவன், கருணை வடிவமாகவும், ருத்ர ரூபமாகவும், யோகி வடிவமாகவும் தோன்றும் பல்வேறு நிலைகளை இசை வழியாகக் காட்சிப்படுத்துகிறது. அந்த வரிகளில் ஒலிக்கும் சிவபக்தி, ஜி.வி. பிரகாஷின் குரலால் இன்னும் ஆழமாக மனதிற்குள் இறங்குகிறது. அவரது குரலில் இருக்கும் வலிமை, பக்தி, பணிவு – அனைத்தும் சேர்ந்து, திருவாசகத்தின் தத்துவத்தை இசையின் உன்னத அனுபவமாக மாற்றுகிறது.

    திரைப்பட இசை உலகில் தனித்த அடையாளம் பதித்த ஜி.வி. பிரகாஷ், பாரம்பரியமும் நவீனமும் இணையும் இசை பற்றிய தேடல் கொண்டவர். அந்த தேடலின் ஒரு முக்கியமான கட்டமாகவே இந்த திருவாசக இசை முயற்சி பார்க்கப்படுகிறது.

    திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்குவது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவு. அதன் முதல் படியாக வெளியாகியுள்ள இந்தப் பாடல், அந்த கனவு சரியான பாதையில் தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்துகிறது. சிவனின் பல வடிவங்களையும், மனித மனத்தின் தவிப்பையும், இறைவனிடம் நம்மை சரணடைய வைக்கும் இசை அனுபவமாக மாற்றியுள்ள இந்த முயற்சி, தமிழ் ஆன்மிக இசையில் ஒரு முக்கியமான அடையாளமாக நிலைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    ஜி.வி. பிரகாஷ் குரலில், சிவனின் மகிமையை ஒலிக்கும் இந்த திருவாசகத்தின் முதல் பாடல், கேட்பவரை ஒரு தெய்வீக பயணத்துக்கே அழைத்துச் செல்கிறது.

    • மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 20.11.2023 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
    • விவரங்களுக்கு www.hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளத்தில் தெரிந்துக் கொண்டு பயன்பெறலாம்.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    2022-2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், "ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு இவ்வாண்டில் 200 நபர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும்" என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 200 நபர்கள் அரசு நிதியில் காசிக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அதனைத் தொடர்ந்து, 2023-2024-ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் "ஆன்மிகப் பயணமாக ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு கடந்த ஆண்டு 200 நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டதைப் போல, பக்தர்கள் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, இவ்வாண்டு 300 நபர்கள் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.75 லட்சத்தை அரசு ஏற்கும்" என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இந்த ஆன்மிகப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், மண்டலத்திற்கு 15 நபர்கள் வீதம் 300 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலிருந்து நேரில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 20.11.2023 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.

    மேலும் ஆன்மிக பயணம் குறித்த விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகம் அல்லது www.hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளத்தில் தெரிந்துக் கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×