search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "spiritual journey"

    • மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 20.11.2023 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
    • விவரங்களுக்கு www.hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளத்தில் தெரிந்துக் கொண்டு பயன்பெறலாம்.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    2022-2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், "ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு இவ்வாண்டில் 200 நபர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும்" என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 200 நபர்கள் அரசு நிதியில் காசிக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அதனைத் தொடர்ந்து, 2023-2024-ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் "ஆன்மிகப் பயணமாக ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு கடந்த ஆண்டு 200 நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டதைப் போல, பக்தர்கள் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, இவ்வாண்டு 300 நபர்கள் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.75 லட்சத்தை அரசு ஏற்கும்" என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இந்த ஆன்மிகப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், மண்டலத்திற்கு 15 நபர்கள் வீதம் 300 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலிருந்து நேரில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 20.11.2023 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.

    மேலும் ஆன்மிக பயணம் குறித்த விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகம் அல்லது www.hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளத்தில் தெரிந்துக் கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செப்டம்பர் முதல் வாரம் தொடங்கும் பயணமானது 16 நாட்களில் நிறைவு பெறுகிறது.
    • இதற்கான கட்டணம் ரூ.22 ஆயிரத்து 900 மட்டுமே வசூலிக்கின்றனர்.

    கோவை,

    கோவை மருதமலை சாலை பி.என்.புதூரில் வசந்த் அன் கோ எதிரில் பிரியா டிராவல்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. டிராவல்ஸ் துறையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த இந்நிறுவனம், ஏராளமான பக்தர்களை ெரயிலில் ஆன்மீக சுற்றுப்பயணம் அழைத்து ெசன்றுள்ளது.

    அதேபோன்று இந்த ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் காசியாத்திரைக்கு பக்தர்களை ெரயிலில் அழைத்து செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். செப்டம்பர் முதல் வாரம் தொடங்கும் பயணமானது 16 நாட்களில் நிறைவு பெறுகிறது.

    காசி, அலகாபாத், அயோத்தியா, கயா, புத்தகயா, டெல்லி, ஆக்ரா, மதுரா, ஜெய்ப்பூர், ஹரித்துவார், ரிஷிகேஷ் ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கான கட்டணம் ரூ.22 ஆயிரத்து 900 மட்டுமே வசூலிக்கின்றனர்.

    காசியாத்திரை செல்ல விரும்புபவர்கள் தற்போது ரூ.5 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ெரயில் கட்டணம், உணவு கட்ட ணம், தங்கும் வசதி (தனித்தனி அறை) அனைத்தையும் இந்நிறுவனத்தாரே தனது சொந்த செலவில் செய்து தருகின்றனர்.

    இது குறித்து பிரியா டிராவல்ஸ் நிறுவனத்தின் மானேஜிங் டைரக்டர் பிரியா மற்றும் நிர்வாக இயக்குநர் சுகுமார் ஆகியோர் கூறுகையில், காலம்காலமாகவே எங்களது குடும்பத்திற்கு தெய்வீக பற்றுதல் உண்டு. எனவே அதன் அடிப்படையில் தெய்வீக சுற்றுலா அடிக்கடி செல்வோம்.

    அதே போன்று அனைத்து பக்தர்களும் அதனை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தெய்வீக சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்தோம். அதுவே வருடா வருடம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    பொதுமக்களும், பக்தர்களும் இத்தகைய அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, மிகவும் முக்கியமான புண்ணிய தலங்களில் தங்களது பாதத்தை பதித்து, பாவம் நீங்கி, புண்ணியம் பெற்று இன்பத்துடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 200 பக்தா்கள் இந்த ஆன்மிகப் பயணத்துக்கு தோ்வு செய்யப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ச்சகா்கள் மற்றும் பூசாரிகளுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    காசி ஆன்மீகப் பயணத்தில் அா்ச்சகா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு அா்ச்சகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இது குறித்து கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவா் வாசு விடுத்துள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை மூலம் ராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். தகுதி வாய்ந்த 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 200 பக்தா்கள் இந்த ஆன்மிகப் பயணத்துக்கு தோ்வு செய்யப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் அா்ச்சகா்கள் மற்றும் பூசாரிகளுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும். இதனால் பூசாரிகள், அா்ச்சகா்களின் பக்தி அனுபவம் அதிகரிப்பதுடன், பக்தா்களுக்கு ஆன்மிக சொற்பொழிவு செய்யவும், ஏனைய பக்தா்கள் காசி யாத்திரை சென்று வர அனுபவ ரீதியாக சொல்லவும் உதவியாக இருக்கும். மேலும் நாள் முழுவதும் கோவிலில் பணியாற்றும் அா்ச்சா்களுக்கு இந்த ஆன்மிகப் பயணம் புத்துணா்ச்சி அளிப்பதாக இருக்கும். 200 பக்தா்கள் செல்லும் ஆன்மிக பயணத்தில், அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

    ×