என் மலர்

  நீங்கள் தேடியது "Badrinath"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புராதன யாத்திரைத் தலங்களை தரிசிப்பது சார் தாம் யாத்திரை எனப்படும்.
  டேராடூன்:

  உத்தரகாண்டில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களான கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புராதன யாத்திரைத் தலங்கள் குளிர்காலத்தின்போது கடும் பனிப்பொழிவு நிலவுவதால் சுமார் 6 மாத காலத்திற்கு நடை சாத்தப்படும்.

  அவ்வகையில் இந்த ஆண்டு குளிர்காலம் தொடங்கியதையடுத்து, நவம்பர் 5ம் தேதி கங்கோத்ரியில் நடை சாத்தப்பட்டது. நவம்பர் 6ம் தேதி கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி கோவில் நடை சாத்தப்பட்டது. 

  இந்நிலையில், பத்ரிநாத் கோவில் இன்று மாலை 6.45 மணிக்கு சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு நடை சாத்தப்பட்டது. இன்று மட்டும் 4000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டில் மொத்தம் 1,97,056 பக்தர்கள் பத்ரிநாத் கோவிலுக்கு வந்துள்ளனர்.

  கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு தலங்களை தரிசிப்பது சார் தாம் யாத்திரை எனப்படும். இந்த ஆண்டு சார் தாம் யாத்திரை செப்டம்பர் மாதம் 18ம் தேதி தொடங்கியது. நடை சாத்தப்படும் 4 கோவில்களில் பத்ரிநாத் கடைசியாக இருப்பதால், இது சார்தாம் யாத்திரை காலம் நிறைவடைவதை குறிக்கிறது. 

  இந்த  யாத்திரை சீசனில் மொத்தம் 5,06,240 பக்தர்கள் தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடும் பனிப்பொழிவு காரணமாக பத்ரிநாத் கோவில் 42 பக்தர்கள் உணவு இன்றி முகாமில் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Badrinath #Snowfall #Pilgrims
  புவனேஸ்வரம்:

  உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில் உள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

  இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சாமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. பத்ரிநாத் கோவிலை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதையும் பனி சூழ்ந்துள்ளது.

  சாலைகளில் பனித்துகள்கள் படர்ந்து இருப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன்காரணமாக பத்ரிநாத் கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்ற ஒடிசாவை சேர்ந்த 42 பேர் முகாமில் சிக்கி உள்ளனர்.

  அவர்கள் தரிசனத்தை முடித்துவிட்டு முகாம் திரும்பிய நிலையில், பனிப்பொழிவு காரணமாக முகாமில் இருந்து வெளியேற முடியாதபடிக்கு சிக்கிக்கொண்டனர். கடந்த சனிக்கிழமை இரவு முதல் அவர்கள் அனைவரும் உணவு இன்றி தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

  மேலும் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு முகாம் இருளில் மூழ்கியதால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்களை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்து உள்ளது.  #Badrinath #Snowfall #Pilgrims 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாதருக்கு 4 கிலோ எடையுள்ள தங்க குடையை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார். #Badrinath #GoldUmbrella
  புதுடெல்லி:

  உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்து மக்களின் பிரபல வழிபாட்டு ஸ்தலங்களான கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆலயங்கள் அமைந்துள்ளன. இவற்றில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் உருவான பத்ரிநாத் ஆலயம் கடல் மட்டத்தில் இருந்து 10,170 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

  இந்நிலையில், பத்ரிநாதர் கோவிலுக்கு குவாலியரில் வசிக்கும் ராஜ வம்சத்தினர் புதிய தங்க குடை ஒன்றை காணிக்கையாக அளித்துள்ளனர்.  குவாலியர் மகாராணி அஹில்யா பாய் சோல்கர் காணிக்கையாக அளித்த 4 கிலோ எடையுள்ள தங்க குடை பத்ரிநாத்துக்கு கொண்டு வரப்பட்டது.

  பத்ரிநாதர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட தங்க குடைக்கு, வேத மந்திரங்கள் முழங்க முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு பத்ரிநாத பெருமாளுக்கு சாத்தப்பட்டது.

  இதற்காக நடந்த சிறப்பு பூஜையில் குவாலியரை சேர்ந்த ராஜ குடும்பத்தினரும், குடையை செய்தவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். #Badrinath #GoldUmbrella
  ×