என் மலர்
நீங்கள் தேடியது "கேதர்நாத் கோவில்"
- குளிர்காலம் என்பதால் கேதர்நாத் கோவில் மூடப்பட்டுள்ளது.
- மகா சிவராத்திரியான தினமான இன்று கோவில் திறக்கப்படும் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத் கோவில் குளிர்காலத்தை முன்னிட்டு சுமார் 6 மாத காலம் மூடப்படும். தற்போது வட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவி வருவதால் கோவில் மூடப்பட்டுள்ளது. குளிர் காலம் முடிவடைந்த பின்னர் ஏப்ரல் 22-ந்தேதி மீண்டும் கோவில் திறக்கப்படும் ஸ்ரீ பத்ரிநாத்- கேதர்நாத் கோவில் கமிட்டியின் மக்கள் தொடர்பு அதிகாரி ஹரிஷ் கவுர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் கோவில் திறப்பதற்கான மங்களகரமான தேதி மற்றும் நேரம் மகா சிவராத்திரி தினமான இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கேதர்நாத்தில் உள்ள ஓம்கரேஷ்வர் 12 ஜோதிர்லிங்கத்தில் ஒன்றாகும். 9.5 குவிண்டால் மலர்களுடன் கோவில் அலங்கரிக்கப்பட்டு, தலைமை பூசாரி, கேதர்நாத் எம்.எல்.ஏ, கோவில் கமிட்டி தலைவர், மதத் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடை திறக்கப்படும்.
பத்ரிநாத் கோவில் ஏப்ரல் 23-ந்தேதியும், கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்கள் ஏப்ரல் 19-ந்தேதி திறக்கப்படுகிறது.
- முக்பா பகுதிக்கும் இந்த தடை நீட்டிக்கப்படும்
- இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதற்கான இந்தத் தடை கடுமையாக அமல்படுத்தப்படும் என பாஜக தலைவர் கருத்து
உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கங்கோத்ரி தாமிற்குள் (இந்துக்கள் புனித யாத்திரை தலம்) இனி இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதி இல்லை என்று ஸ்ரீ கங்கோத்ரி கோயில் குழு தெரிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடு பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களைத் தொடர்ந்து, கங்கா தேவியின் குளிர்கால இருப்பிடமான முக்பா (கோயில் அருகில் உள்ள கிராமம்) பகுதிக்கும் நீட்டிக்கப்படும் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.
கோயில் குழுவின் தலைவர் சுரேஷ் செம்வால், கங்கோத்ரி மற்றும் முக்பா பகுதிகளில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதற்கான இந்தத் தடை கடுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே பா.ஜ.க தலைவரும், ஸ்ரீ பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுவின் (BKTC) தலைவருமான ஹேமந்த் திவேதி, பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் BKTC-யின் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து கோயில்களிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதைத் தடை செய்வதற்கான முன்மொழிவு, குழுவின் அடுத்த வாரியக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "வரலாற்று ரீதியாக, கேதார்நாத் மற்றும் மானா பகுதிகள் முழுவதும் உள்ள கோயில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. பாஜக அல்லாத ஆட்சிக் காலங்களில், இந்த மரபுகள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டன. இப்போது இந்த மரபுகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- கேதர்நாத் கோவிலில் வைத்து இளம்பெண் ஒருவர் தனது காதலனிடம் ‘புரபோஸ்’ செய்த காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- இளம்பெண் தனது காதலன் முன்பு முழங்கால் இட்டு அவரிடம் தனது காதலை முன்மொழிவது போன்று காட்சிகள் உள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க நினைவிடங்கள் அல்லது சுற்றுலா தளங்கள், பூங்காக்களில் இளம்ஜோடியினர் தங்கள் இணையர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி காதலை வெளிப்படுத்தி புரபோஸ் செய்வது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம். ஆனால் தற்போது டுவிட்டரில் வைரலாகி வரும் வீடியோவில், கேதர்நாத் கோவிலில் வைத்து இளம்பெண் ஒருவர் தனது காதலனிடம் 'புரபோஸ்' செய்த காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எல்லா பெரிய கோவில்களிலும் 'ஸ்மார்ட் போன்கள்' ஏன் தடை செய்ய வேண்டும்? என்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று என்ற தலைப்பில் பகிரப்பட்ட வீடியோவில், இளம்ஜோடி ஒன்று மஞ்சள் நிற ஆடை அணிந்து கோவில் முன்பு வைத்து சாமி தரிசனம் செய்வது போன்றும், பின்னர் அந்த இளம்பெண் தனது காதலன் முன்பு முழங்கால் இட்டு அவரிடம் தனது காதலை முன்மொழிவது போன்றும் காட்சிகள் உள்ளது.
இந்த காட்சி வைரலாகி வரும் நிலையில், டுவிட்டர் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் சிலர், இதில் தவறாக எதுவும் இல்லை என பதிவிட்டுள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் கோவிலில் வைத்து இதுபோன்று செய்வதால் கோவிலின் புனிதம் பாதிக்கப்படுவதாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.






