என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Uttarakhand"
- 41 உயிர்களை மீட்க 17 நாட்களாக பெரும் போராட்டம் நடந்தது
- ஆஸ்திரேலிய பேராசிரியரின் ஒத்துழைப்புக்கு பெருமை அடைவதாகவும் அல்பனீஸ் தெரிவித்தார்
உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்தின் உத்தரகாசி (Uttarakashi) மாவட்டத்தில் எண் 134 தேசிய நெடுஞ்சாலையில் (NH-134) சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது.
கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அதன் நுழைவாயிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் பணியில் இருந்த 41 கட்டுமான ஊழியர்கள் சிக்கி கொண்டனர்.
இவர்களை மீட்கும் பணியை போர்க்கால அடிப்படையில் இந்திய அரசாங்கம் முடுக்கி விட்டது.
சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொழில்நுட்ப ஆலோசனைக்கு சுரங்க கட்டுமான மேலாண்மையில் நிபுணரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியர் ஆர்னால்ட் டிக்ஸ் என்பவரின் உதவியும் பெறப்பட்டது. மீட்பு பணிக்கு உபயோகப்படுத்தப்பட்டு வந்த பெரிய இயந்திரத்தில் துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட கோளாறினால் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது.
இதன் காரணமாக எலி வளை சுரங்க தொழிலாளர்களை (rat hole miners) கொண்டு, இயந்திர உதவி இல்லாமல், துளையிட்டு மீட்கும் முயற்சி நடைபெற்றது.
சிறப்பான முறையில் செயல்பட்ட இவர்களின் தடையில்லா உதவியினால், நேற்று மாலை 07:05 மணியளவில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, சுமார் 17 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் நல்லவிதமாக முடிவுக்கு வந்தது.

மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருடனும் பிரதமர் மோடி தொலைபேசி வழியாக உரையாடி வாழ்த்து தெரிவித்தார்.
பல உயிர்களை காப்பாற்றும் மிக பெரிய பொறுப்பில் ஓய்வின்றி உழைத்து தங்களின் அதிரடி நடவடிக்கைகள் மூலம் மீட்க உதவிய அனைவருக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தனது பாராட்டுக்களை அவரது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
"வியத்தகு சாதனை. மீட்பு பணியில் ஈடுபட்டவர்களின் அற்புதமான சாதனை இது. அனைவருக்கும் பாராட்டுக்கள். களத்தில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டு பேராசிரியர் நல்கிய ஒத்துழைப்பு குறித்து நாங்கள் பெருமிதம் அடைகிறோம்" என தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
A wonderful achievement by Indian authorities. Proud that Australian Professor Arnold Dix played a role on the ground. ???? https://t.co/RI1oSnaUkK
— Anthony Albanese (@AlboMP) November 28, 2023
முன்னதாக இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் பிலிப் க்ரீன் இந்திய முயற்சிகளை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 15-வது நாளாக நடைபெறுகிறது.
- சிக்கியுள்ளவர்களுக்கு உணவு, மருந்துகள் அனுப்பப்படுகின்றன.
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷி மாவட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகளின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக சுரங்கத்திற்குள் சிக்கித்தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 15-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க ஆறு திட்டங்கள் தீட்டப்பட்டு, ஒவ்வொரு திட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு வளர்ச்சி கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் மஹ்மூத் அகமது தெரிவித்துள்ளார். மேலும் சிக்கியுள்ளவர்களுக்கு போதுமான உணவு, மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி சுரங்கத்திற்குள் இருப்பவர்களை மீட்க செங்குத்தாக துளையிடும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதுவரை 15 மீட்டர்கள் வரை துளையிடப்பட்டு உள்ளன. இன்னும் 71 மீட்டர்கள் துளையிட்டால், சிக்கியுள்ளவர்களை மீட்டுவிட முடியும்.

இதுதவிர கிடைமட்டமாக துளையிடும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இத்துடன் 170 மீட்டர்கள் வரை செங்குத்தாக துளையிடப்பட திட்டமிடப்பட்டு இருக்கிறது. எனினும், இதற்கான பணிகள் இதுவரை துவங்கவில்லை. இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் சேப்பர்ஸ் என்ற பொறியாளர் குழுவும் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
- தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் மீண்டும் பின்னடைவு.
- ஆகர் இயந்திர பிளேடுகளை வெட்டி அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷியில் சுரங்கம் தோண்டும் பணியின் போது திடீரென ஏற்பட்ட விபத்தால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதன் காரணமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
தற்போது வரை சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உணவு அதற்கென உருவாக்கப்பட்ட குழாய் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளின் போது பல்வேறு இடர்பாடுகளால் அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது. அந்த வகையில், சுரங்கத்திற்குள் துளையிடுவதற்காக அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆகர் இயந்திரம் மூலம் துளையிடும் பணிகள் நேற்று (நவம்பர் 25) துவங்கின.

எனினும், ஆகர் இயந்திர பிளேடுகள் சிக்கிக் கொண்டதால் சுரங்கத்திற்குள் இருக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. இதன் காரணமாக துளையிடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
"சுரங்கத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் ஆகர் இயந்திர பிளேடுகளை வெட்டி அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகர் இயந்திரத்தின் 16 மீட்டர்கள் வரை வெட்டி அகற்றப்பட வேண்டும். பிளாஸ்மா கட்டர் இயந்திம் மூலம் வெட்டி எடுக்கப்படுவதால், ஆகர் இயந்திர பிளேடுகளை வேகமாக அகற்ற முடியும்," என்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் சுரங்க நிபுணரான க்ரிஸ் கூப்பர் தெரிவித்து இருக்கிறார்.

"இந்த பணிகள் முழுமையாக நிறைவு பெற நீண்ட காலம் ஆகிவிடும். மலை பகுதியில் பணியாற்றும் போது, எதையும் கணிக்கவே முடியாது. நாங்கள் இதுதொடர்பான பணிகள் நிறைவடைவது குறித்து எந்த கணிப்பையும் தெரிவிக்கவில்லை," என்று தேசிய பேரிடர் நிர்வாக கூட்டமைப்பின் உறுப்பினரான சையத் அடா ஹசைன் தெரிவித்து உள்ளார்.
சுரங்கம் உருவாக்குவதில் சர்வதேச நிபுணரான ஆர்னால்டு டிக்ஸ், சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் மீட்க முடியும் என்று தெரிவித்து இருக்கிறார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலம் இருப்பதை அடுத்து, இவரின் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு இன்று காலை 11 மணிக்கு பிறகு துளையிடும் பணி மீண்டும் தொடங்கியது.
- இன்று மாலைக்குள் தொழிலாளர்களை மீட்டுவிடலாம் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கு தப்பிக்கும் பாதையைத் தயார் செய்வதற்காக அமெரிக்க ஆகர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கப்பட்டது.
துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உள்ளே சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. சுமார் 46.8 மீட்டர் வரை துளையிடப்பட்ட நிலையில், மீட்பு பணி நேற்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு இன்று காலை 11 மணிக்கு பிறகு துளையிடும் பணி மீண்டும் தொடங்கியது.
இன்னும் 12-14 மீட்டர்களே உள்ள நிலையில் எல்லாம் சரியாக நடந்தால் இன்று மாலைக்குள் தொழிலாளர்களை மீட்டுவிடலாம் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தொழில்நுட்பம் கோளாறு காரணமாக துளையிடும் பணி மீண்டும் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் இரண்டு முறை துளையிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மீட்பு பணிகள் 13-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- ஊழியர்கள் எப்போது மீட்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷியில் சுரங்கம் தோண்டும் பணியின் போது திடீரென ஏற்பட்ட விபத்தால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதன் காரணமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் 13-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது வரை சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உணவு அதற்கென உருவாக்கப்பட்ட குழாய் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளின் போது பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிக்கியுள்ள ஊழியர்கள் 41 பேரும் எப்போது மீட்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் மனநிலையை சீராக வைத்துக் கொள்ளும் முயற்சியாக அவர்களுக்கு செஸ் போர்டு மற்றும் சீட்டுக் கட்டு உள்ளிட்டவைகளை அனுப்ப மீட்பு படையினர் திட்டமிட்டுள்ளனர். 13 நாட்களாக சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் இக்கட்டான சூழ்நிலையில், அவர்கள் மனதளவில் உறுதியாக வைத்துக் கொள்ள இவை உதவியாக இருக்கும் என்று மீட்பு படையினர் நம்புகின்றனர்.
- சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவு வழங்குவதற்காக 6 அங்குல குழாய் ஒன்று அமைக்கப்பட்டது.
- ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணி 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக 6 அங்குல குழாய் ஒன்று அமைக்கப்பட்டது. மேலும், இந்த குழாய் வழியாக கேமரா ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கேமரா, உள்ளே உள்ள தொழிலாளர்களை படம்பிடித்து அனுப்பியது. ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சில்க்யாரா சுரங்கத்தில் 10 நாட்களுக்கும் மேலாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களுக்கு தப்பிக்கும் பாதையைத் தயார் செய்வதற்காக அமெரிக்க ஆஜர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி ஒரே இரவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்," இதுவரை 800 விட்டம் கொண்ட இரும்பு குழாய்கள் இடிபாடுகள் வழியாக 32 மீட்டர் வரை செருகப்பட்டுள்ளன.
ஆஜர் இயந்திரம் சுரங்கப்பாதையில் துளையிடும் பணியை மேற்கொண்டபோது அதிர்வு ஏற்பட்டதால் துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஆஜர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளதாக மீட்புப் பணிகள் தீவிரமாகும்" என்றார்.
- உணவு பொருட்கள் அனுப்புவதற்காக 6 அங்குல குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
- தொழிலாளர்கள் அனைவரும் நலமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணி 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக 6 அங்குல குழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் வழியாக கேமரா ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கேமரா, உள்ளே உள்ள தொழிலாளர்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது. ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. குழாய் மூலம் அனுப்பப்பட்ட உணவை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்த வீடியோவை பார்த்து தொழிலாளர்களின் குடும்பம் நிம்மதி அடைந்துள்ளது.
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | First visuals of the trapped workers emerge as the rescue team tries to establish contact with them. The endoscopic flexi camera reached the trapped workers. pic.twitter.com/5VBzSicR6A
— ANI (@ANI) November 21, 2023
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel collapse: Rescue workers try to establish contact with the trapped workers through walkie-talkie. (Video Source: District Information Officer) pic.twitter.com/eGpmAmwQep
— ANI (@ANI) November 21, 2023
- சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
- சுரங்கத்தில் வெளியேறுவதற்கான வழி ஏன் அமைக்கப்படவில்லை.
உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து ஏற்பட்டது. சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கி உள்ளனர்.
சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப்பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்துள்ளது. மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத்துறை ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மீட்பு பணிகளில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்குவதற்காக 6 இன்ச் அளவில் 57 மீட்டர் நீளமுள்ள துளை போடப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுரைக்கு ஏற்ப தேவையான உணவுகள் இந்த குழாய் மூலம் அனுப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, "சம்பவம் நடைபெற்று எட்டு நாட்கள் ஆகிவிட்டன. ஊழியர்கள் இன்னும் மீட்கப்படவில்லை. கட்டுமான தளத்தில் சுரங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கான வழி ஏன் அமைக்கப்படவில்லை என்பதை கண்டறிய வேண்டும். ஒருவேளை வெளியேறுவதற்கான வழி திட்டத்தில் இருப்பின் ஏன் அதனை அமைக்கவில்லை."
"களத்தில் உள்ள மீட்பு படையினர் மற்றும் பொறியாளர்களுக்கு நான் எனது முழு ஆதரவை வழங்குகிறேன். இந்த விஷயத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை. பேரிடர் மீட்பு திட்டங்கள் எதுவும் இல்லை, அவர்களிடம் வல்லுனர்கள் யாருமே இல்லை. இந்த விஷயத்தில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்," என்று உத்தரகாண்ட் மாநில எதிர்கட்சி தலைவர் யாஷ்பால் ஆர்யா தெரிவித்து இருக்கிறார்.
- துரியோதனன் சிலையை வைத்து வழிபடும் வழக்கம் இப்போது இல்லை.
- அங்கு சிவலிங்க வழிபாடு இருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலம், உத்தரவாசி மாவட்டத்தில் உள்ளது, ஜகோல் என்ற கிராமம். இங்கு மகாபாரத இதிகாசத்தில் சொல்லப்பட்டுள்ள, கவுரவர்களின் வரிசையில் முதன்மையானவனான துரியோதனனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கவுரவர்களை தங்கள் மூதாதையர்களாகக் கொண்டவர்கள். அவர்கள் தான் இந்த ஆலயத்தை துரியோதனனுக்காக கட்டியதாக சொல்லப்படுகிறது.
ஒரு முறை துரியோதனன் இந்த பகுதியை தாண்டி சென்ற போது, இதன் இயற்கையான அழகில் மயங்கினான். அங்குள்ள உள்ளூர் தெய்வமான மஹசு என்பவரிடம், இமயமலையை ஒட்டி தனக்கென ஒரு பள்ளத்தாக்கு வேண்டும் என்று வேண்டினான். அதற்கு அந்த தெய்வம், 'தான் இடம் அளிப்பதாகவும், இந்த பகுதி மக்களை நீ காக்க வேண்டும்' என்று கூறியது. அந்த வாக்கின் படி துரியோதனனுக்கு வழங்கப்பட்ட பள்ளத்தாக்கில் தான் அவனுக்கான ஆலயமும் அமைந்திருக்கிறது. மகாபாரத யுத்தத்தில் துரியோதனன் இறந்தபோது, அவனுக்காக இப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டனர். அந்த நீர் பெருகி, ஏரியாக உருவானது. அதன் பெயர் 'தமஸ்'. இந்த வார்த்தைக்கு 'துன்பம்' என்று பெயர். இங்கு துரியோதனன் சிலையை வைத்து வழிபடும் வழக்கம் இப்போது இல்லை. ஆனால் அங்கு சிவலிங்க வழிபாடு இருக்கிறது.