மத வெறுப்புக்கு எதிராக துணிந்து நின்ற 'முகமது தீபக்'-ஐ நேரில் சந்தித்து பாராட்டிய ராகுல் காந்தி

பஜ்ரங் தள் கும்பல் முதியவரை மிரட்டியுள்ளது.அதற்கு அவர், " என் பெயர் முகமது தீபக்" என்று பதிலளித்தார்.
மத வெறுப்புக்கு எதிராக துணிந்து நின்ற 'முகமது தீபக்'-ஐ நேரில்  சந்தித்து பாராட்டிய ராகுல் காந்தி
Published on

உத்தரகாண்ட் மாநிலம் கோட்வாரைச் சேர்ந்த தீபக் குமார், அங்கு உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மதவெறுப்புக்கு எதிராக அவர் காட்டிய துணிச்சலைப் பாராட்டும் விதமாக மக்களவை எதிர்கட்சித் ராகுல் காந்தி அவரை நேரில் சந்தித்துள்ளார்.

கடந்த ஜனவரி 26, கோட்வாரில் 70 வயது இஸ்லாமிய முதியவர் ஒருவரின் கடைக்கு வந்த பஜ்ரங் தள் அமைப்பினர், கடையின் பெயரில் உள்ள 'பாபா' என்ற பெயரை நீக்கச் சொல்லி அவரை மிரட்டியுள்ளனர்.

அந்த முதியவர் ஏற்கனவே பார்கின்சன் என்னும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.

இந்துத்துவா கும்பலின் மிரட்டலால் செய்வதறியாது திகைத்த அவருக்கு ஆதரவாக தீபக் குமார் அந்த கும்பலை எதிர்த்து பேசியுள்ளார்.

வாக்குவாதத்தில் போது அந்த கும்பல் அவரின் பெயர் என்ன என்று கேட்கே, அதற்கு அவர், " என் பெயர் முகமது தீபக்" என்று பதிலளித்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகவே, வெறுப்பு அரசியலை தனியாளாக எதிர்த்து நின்ற தீபக் குமாரின் துணிச்சல் மற்றும் நல்லுள்ளத்தை பல தரப்பில் இருந்தும் அனைவரும் பாராட்டினர்.

இந்நிலையில் தற்போது உத்தரகாண்ட் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, முகமது தீபக் (எ) தீபக் குமாரை சந்தித்த புகைப்படத்தை காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அந்த பதிவில், "தீபக் குமார் ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் தைரியத்திற்கு ஒரு சிறந்த உதாரணம். அநீதி மற்றும் வெறுப்புக்கு எதிராக நிற்க நாட்டின் இளைஞர்களுக்கு அவர் ஒரு உந்துசக்தியாக விளங்குகிறார்" என்று கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com