என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேருந்து விபத்து"

    • விபத்தில், 6 பெண்கள், 11 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர்.
    • 8 பெண்கள் உள்ளிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நேபாளத்தின் போக்கராவிலிருந்து காத்மாண்டுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில், 6 பெண்கள், 11 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர்.

    ஆற்றில் பேருந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்த 8 பெண்கள் உள்ளிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும் போது லாரியுடன் மோதல்.
    • சம்பவ இடத்திலேயே 11 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

    தென்ஆப்பிரிக்காவின் கவுடேங் மாகாணத்தில் லாரி மீது பள்ளி மினி பேருந்து மோதிய கோர விபத்தில் 13 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தனியார் வாகனம் பல்வேறு தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளை ஏற்றிச் சென்றது. இந்த வேன் மற்றொரு வாகனத்தை முந்திச் சென்றது. அப்போது திடீரென எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் 11 பள்ளி சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

    மேலும், படுகாயம் அடைந்த 7 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தில் பேருந்து டிரைவரிடம் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தென்ஆப்பிரிக்கா அதிபர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    • பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.
    • இந்தச் சம்பவதிற்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் திருமணதிற்கு சென்று கொண்டிருந்தவர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் இருந்து திருமணக் கோஷ்டியினரை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து, இன்று, ஜார்கண்டின் லாத்தேஹார் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    மகுவாடார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓர்சா பங்களாதாரா பள்ளத்தாக்கு பகுதியில் வந்தபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.

    இந்தக் கோர விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 25 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து நடந்தபோது பேருந்தில் சுமார் 70 பயணிகள் இருந்ததாகத் தெரிகிறது.

    இந்தச் சம்பவதிற்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  மேலும் காயமடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

    • மலைப்பாங்கான நிலப்பரப்பில் உள்ள வளைவுகள் மற்றும் குறுகிய சாலைகள் இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன.
    • குறிப்பாக மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் இந்த இதுபோன்ற வாகன விபத்துகள் அதிகம் நடைபெறுகின்றன.

    உத்தரகாண்ட், அல்மோரா மாவட்டத்தில் உள்ள பிக்கியாசன் பகுதியில் ஒரு பள்ளத்தாக்கில் இன்று காலை பேருந்து கவிழ்ந்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர். குமாவோன் மண்டல் விகாஸ் நிகாம் (KMVN) நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்து, ராம்நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்த கோர விபத்து நேர்ந்துள்ளது. 

    மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) மற்றும் உள்ளூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

    முதற்கட்ட தகவல்களின்படி 7 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக பேசிய மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) தேவேந்திர பிஞ்சா,

    "KMVN மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தபோது பதினெட்டு பேர் இருந்துள்ளனர். உடல்கள் மீட்கப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என்றார். ஒவ்வொரு ஆண்டும், உத்தரகாண்டில் 1,000 க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவாகின்றன. மலைப்பாங்கான நிலப்பரப்பில் உள்ள வளைவுகள் மற்றும் குறுகிய சாலைகள் இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன.

    குறிப்பாக மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் இதுபோன்ற வாகன விபத்துகள் அதிகம் நடைபெறுகின்றன. 

    ×