என் மலர்
உலகம்

தென்ஆப்பிரிக்காவில் லாரி மீது பள்ளி பேருந்து மோதி கோர விபத்து: 13 சிறுவர்கள் உயிரிழப்பு
- மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும் போது லாரியுடன் மோதல்.
- சம்பவ இடத்திலேயே 11 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
தென்ஆப்பிரிக்காவின் கவுடேங் மாகாணத்தில் லாரி மீது பள்ளி மினி பேருந்து மோதிய கோர விபத்தில் 13 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தனியார் வாகனம் பல்வேறு தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளை ஏற்றிச் சென்றது. இந்த வேன் மற்றொரு வாகனத்தை முந்திச் சென்றது. அப்போது திடீரென எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் 11 பள்ளி சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.
மேலும், படுகாயம் அடைந்த 7 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தில் பேருந்து டிரைவரிடம் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தென்ஆப்பிரிக்கா அதிபர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Next Story






