என் மலர்
நீங்கள் தேடியது "bus falls"
- மலைப்பாங்கான நிலப்பரப்பில் உள்ள வளைவுகள் மற்றும் குறுகிய சாலைகள் இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன.
- குறிப்பாக மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் இந்த இதுபோன்ற வாகன விபத்துகள் அதிகம் நடைபெறுகின்றன.
உத்தரகாண்ட், அல்மோரா மாவட்டத்தில் உள்ள பிக்கியாசன் பகுதியில் ஒரு பள்ளத்தாக்கில் இன்று காலை பேருந்து கவிழ்ந்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர். குமாவோன் மண்டல் விகாஸ் நிகாம் (KMVN) நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்து, ராம்நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்த கோர விபத்து நேர்ந்துள்ளது.
மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) மற்றும் உள்ளூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
முதற்கட்ட தகவல்களின்படி 7 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக பேசிய மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) தேவேந்திர பிஞ்சா,
"KMVN மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தபோது பதினெட்டு பேர் இருந்துள்ளனர். உடல்கள் மீட்கப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என்றார். ஒவ்வொரு ஆண்டும், உத்தரகாண்டில் 1,000 க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவாகின்றன. மலைப்பாங்கான நிலப்பரப்பில் உள்ள வளைவுகள் மற்றும் குறுகிய சாலைகள் இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன.
குறிப்பாக மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் இதுபோன்ற வாகன விபத்துகள் அதிகம் நடைபெறுகின்றன.
- விபத்தில், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
- உள்ளூர் மக்களின் உதவியுடன் காயமடைந்த பயணிகளை மீட்டனர்.
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் நேற்று இரவு அதிவேகமாகச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழந்து விழுந்தது,
இதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 15 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹரிப்பூர் மாவட்டத்தில் உள்ள கான்பூரில் இருந்து மலைப்பாங்கான கிராமத்திற்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது தர்னாவா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.
அதிக வேகம் காரணமாக ஒரு திருப்பத்தின்போது பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இறந்தவர்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர்.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மீட்பு வாகனங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் காயமடைந்த பயணிகளை மீட்டு ஹரிபூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.






