என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜார்க்கண்ட்: சாலையில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி - 25 பேர் காயம்
    X

    ஜார்க்கண்ட்: சாலையில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி - 25 பேர் காயம்

    • பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.
    • இந்தச் சம்பவதிற்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் திருமணதிற்கு சென்று கொண்டிருந்தவர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் இருந்து திருமணக் கோஷ்டியினரை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து, இன்று, ஜார்கண்டின் லாத்தேஹார் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    மகுவாடார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓர்சா பங்களாதாரா பள்ளத்தாக்கு பகுதியில் வந்தபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.

    இந்தக் கோர விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 25 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து நடந்தபோது பேருந்தில் சுமார் 70 பயணிகள் இருந்ததாகத் தெரிகிறது.

    இந்தச் சம்பவதிற்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×