search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "controversy"

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • ஆங்கிலத்தில் Fagotness என்று பொருள்படும் இந்த வார்த்தை இயற்கையை மீறிய மயக்கம் என்ற பொருளில் ஓரின சேர்க்கையாளர்களை குறிக்கிறது.
  • இதற்கு முன்னரும் இந்த வசைமொழியை போப் பயன்படுத்தி அது சர்ச்சையாகி அதற்கு கடந்த மாதம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

  ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ், ஓரினச்சேர்கையாளர்கள் குறித்த கடுமையான  வசைமொழியை பயன்படுத்தியது சர்ச்சையாகியுள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள புனித நகரமான வாட்டிகன் திருச்சபையில் கடந்த மே 20 ஆம் தேதி பிஷப்களுடன் நடந்த சந்திப்பின்போது ஓரினச்சேர்க்கையாளர்களை குறிக்கும் இத்தாலிய வசை மொழியான புரோசியாஜினே [Frociaggine] என்ற வார்த்தையை போப் பிரான்சிஸ் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

  ஆங்கிலத்தில் Fagotness என்று பொருள்படும் இந்த வார்த்தை இயற்கையை மீறிய மயக்கம் என்ற பொருளில் ஓரின சேர்க்கையாளர்களை குறிக்கிறது. பிஷப்களிடம் போப் உரையாடும்போது, வாட்டிகனில் Frociaggine காற்று வீசி வருகிறது, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இளைஞர்களை செமினரிக்குள் அனுமதிக்காமல் இருப்பதே நல்லது என்று குறிப்பிட்டுள்ளார்.

   

  ஓரினச்சேர்க்கையாளர்களை செமினரியங்களாக அனுமதிக்கலாமா என்ற விவாதத்தின்போது போப் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இத்தாலிய ஊடகங்களில் இந்த விவகாரம் பேசுபொருள்ளாகியுள்ளது . இதற்கு முன்னரும் இந்த வசைமொழியை போப் பயன்படுத்தி அது சர்ச்சையாகி அதற்கு கடந்த மாதம் மன்னிப்பும் கேட்டுள்ளார். இந்நிலையில்தான் மீண்டும் அவர் இந்த வசைமொழியை பயன்படுத்தியுள்ளார்.

  87 வயதாகும் பிரான்சிஸ் கடந்த 11 ஆண்டு காலமாக திருத்தந்தையாக உள்ள நிலையில் LGBT சமூகத்துக்கு எதிரான பார்வையை கொண்டுள்ளார் என்று விமர்சிக்கப்படுகிறார். இதற்கிடையில் பிறப்பால் அர்ஜென்டைன் நாட்டவரான போப் பிரான்சிஸ், இத்தாலிய வசைமொழியின் உள்ளர்த்தம் தெரியாது பேசியுள்ளார் என்றும் கூறப்படுவது ஒப்புநோக்கத்தக்கது.  

  • கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாபோய்ங் மாலில் இருந்து வெளியே வரும்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
  • ஜன நடமாட்டம் நிறைந்த பொது சாலையில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சமபவம் சர்ச்சையாகியுள்ளது .

   மெக்சிகோவில் புதிய அதிபர் பதியேற்ற ஒரு நாளுக்குள் பெண் மேயர் நடுரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லத்தீன் அமெரிக்காவிலேயே முதல் முறையாக பெண் ஒருவர் அதிபராக மெக்சிகோவில் தேர்வாகியுள்ளார்.

   

  இந்நிலையில் இடதுசாரி அரசியல்வாதியும் முன்னாள் மேயருமான கிலவ்டியா செயின்பவும் மெக்சிகோ அதிபாராக தேர்வான 24 மணி நேரத்துக்குள் கோட்டிஜா நகர பெண் மேயரான யோலாண்டோ சான்செஸ்  ஜன நடமாட்டம் நிறைந்த பொது சாலையில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சமபவம் சர்ச்சையாகியுள்ளது .

   

  கடந்த 2021 மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற சான்செஸ் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாபோய்ங் மாலில் இருந்து வெளியே வரும்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். 3 நாட்கள் கழித்து அவர் மீட்கப்பட்டதாக மெக்சிகோ அரசாங்கம் தெரிவித்தது. இந்நிலையில் நேற்று (ஜூன் 4) அவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதற்கிடையில் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருவதாக அரசு தரிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
  • போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது

  ரோடு ரேஜ் (Road rage) என்பது வாகனத்தை வேகமாக அல்லது கண்மூடித்தனமாக இயக்குது ஆகும். இந்தியாவில் இதனால் ஏற்படும் விபத்துகள் சமீப காலங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பணக்காரர்களும், அரசியல், சினிமா பிரபலங்களும் அடிக்கடி இதுபோன்ற விபத்துகளை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கமாக மாறியுள்ளது. சமீபத்தில் புனேவில் மது அருந்திவிட்டு கார் ஓட்டிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உடபட இரண்டு இளம் ஐ.டி ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.

  இந்த வழக்கு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்து வரும் நிலையில் மும்பையில் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். மும்பையின் ககர் பகுதியில் கார்ட்டர் சாலையில் உள்ள ரவீனா டாண்டனின் வீட்டின் அருகே காரை பார்க் செய்யும் இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர், நியாயம் கேட்க வந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.

   

  அதன்பின் அந்த காரின் உள்ளே இருந்து போதையில் தள்ளாடிய நிலையில் இறங்கி வந்த ரவீனா டாண்டன் அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. ரவீனாவை அங்கிருந்த பலர் சூழ்ந்துகொள்ளவே, "ப்ளீஸ் என்னை அடிக்காதீங்க; தயவுசெய்து என்னை அடிக்காதீங்க" என்று ரவீனா அவர்களிடம் கத்தியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் பிடிப்பதை பார்த்த ரவீனா செல்போனை தட்டிவிட முயற்சித்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

  இந்த சம்பவம் தொடர்பாக காயமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் டிரைவரும் ரவீனாவும் தங்களை தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளனர். தன்னைச் சுற்றியுள்ள கும்பலுடன் ரவீனா வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.  

  பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக விளங்கும் ரவீனா டாண்டன், தமிழில் கமலுக்கு ஜோடியாக 'ஆளவந்தான்' படத்தில் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் கே.ஜி.எப் 2 படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

   

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • தெலுங்கானா சின்னம் மாற்றி அமைப்பதில் அரசுக்கு சிக்கல்.
  • தெலுங்கானா அன்னை உருவம் மாற்றி அமைக்கப்படும்.

  திருப்பதி:

  தெலுங்கானா மாநில 10-ம் ஆண்டு விழா வருகிற 2-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

  புதிதாக ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநிலத்திற்கு தனியாக மாநில பாடல் உருவாக்கப்படும்.

  மாநில சின்னம், தெலுங்கானா அன்னை உருவம் மாற்றி அமைக்கப்படும் என அறிவித்தார்.

  பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே இசையமைப்பாளர் கீரவாணி இசையில் ஜெய ஜெய ஹே தெலுங்கானா என்ற பாடல் தயாரானது. இந்த பாடல் மாநில பாடலாக அங்கீகரிக்கப்பட்டது.

  பாடலை தேர்வு செய்யும் கூட்டத்தில் பா.ஜ.க. மற்றும் பிரதான எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.

  புதிதாக தயாராகும் தெலுங்கானா மாநில சின்னத்தில் சார்மினார் மற்றும் காகதியா வளைவு அகற்ற முடிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தெலுங்கானா சின்னம் மாற்றி அமைப்பதில் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  இது தொடர்பான எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை. மேலும் தெலுங்கானா அன்னை சிலையை மாற்றியமைப்பது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

  அனைத்து பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும்படி அரசு சின்னம் மற்றும் தெலுங்கானா அன்னை சிலை இருக்கும் வகையில் அரசு முடிவு எடுக்கும் என முதல் மந்திரி ரேவேந்த் ரெட்டி உறுதி அளித்துள்ளார். 

  • ஒடிசாவில் நடந்த 6 ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது பாஜக வேட்பாளர் EVM இயந்திரத்தை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பிரசாந்த் மேசையில் இருந்த EVM இயந்திரத்தைக் கீழே இழுத்துள்ளார்.

  ஒடிசாவின் குர்த்தா மாவட்டத்தில் நேற்று (மே 25) நடந்த 6 ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது பாஜக வேட்பாளர் EVM இயந்திரத்தை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவில் பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நேற்று நடந்த நிலையில், குர்தா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக எம்எல்ஏவான பிரசாந்த் ஜக்தேவ், நேற்று பிரசாந்த் ஜக்தேவ் தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார்.

   

  வாக்களிக்க நீண்ட வரிசையில் அவர் காத்திருந்த நிலையில் EVM இயந்திரம் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு மேலும் தாமதமானது. இதனால் பொறுமை இழந்த அவர், தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

   

  ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பிரசாந்த் மேசையில் இருந்த EVM இயந்திரத்தைக் கீழே இழுத்துள்ளார். இதனால் EVM இயந்திர விழுந்து உடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் பிரசாந்த் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை இன்று (மே 26) கைது செய்துள்ளனர். அப்பகுதியில் செல்லாக்கு மிக்க பாஜக வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  • இசைஞானி இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
  • நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து, "இசை பெரிதா? மொழி பெரிதா? இசைக்கு நிகரானது மொழி என்று கொள்ளாதவர்கள் அங்ஞானி" என்று பேசி இருந்தார்.

  இசைஞானி இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'கூலி' பட அறிமுக டீசரில் தனது பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து இளையராஜாவைச் சுற்றி சர்ச்சைகள் உருவாகத் தொடங்கின.

  இதனையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து, "இசை பெரிதா?  மொழி பெரிதா? இசைக்கு நிகரானது மொழி என்று கொள்ளாதவர்கள் அங்ஞானி" என்று பேசி இருந்தார். இதன்மூலம் இளையராஜாவை மறைமுகமாக அவர் சாடியுள்ளார் என்ற விவாதம் எழுந்தது.

  இந்த விவாதத்தை மேலும் வளர்க்கும் வகையில், இளையராஜாவின் சகோதரர் கங்கையமரன், அறிக்கை வெளியிட்டு வைரமுத்துவை சாடினார். இந்த சர்ச்சை சமூக வலைத்தளங்களில் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் இதுகுறித்து தற்போது இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  அந்த வீடியோவில், "என்னை பற்றி ஏதாவது ஒரு வகையில் தினமும் இது போன்ற வீடியோக்கள் வந்துகொண்டு இருக்கிறது என்று எனக்கு வேண்டியவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் இதில் கவனம் செலுத்துவதில்லை. மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை.

   

   

  என் வேலைகளை கவனிப்பது தான் என் வேலை. நான் என் வழியில் ரொம்ப க்ளீனா சுத்தமா போய்கிட்டு இருக்கேன். நீங்கள் என்னை வாழ்த்திக்கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில், ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன் என்ற சந்தோஷமான செய்தியை நான் உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • புதிய நாட்டின் வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது.
  • இந்த நடவடிக்கை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  நேபால்:

  இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக், லிம்பியாதுரா,கலாபானி ஆகிய பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்திய பகுதிகளை இணைத்து புதிய நாட்டின் வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைப்படம், நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டில் இடம் பெற்றுள்ளது.

  100 ரூபாய் நோட்டுகளில் லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி உள்ளிட்ட பகுதிகள் உள்ள நேபாளத்தின் புதிய வரைபடத்தை அச்சிட பிரதமர் புஷ்பகமல் பிரசந்தா தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று அரசு செய்தித்தொடர்பாளர் ரேகா சர்மா தெரிவித்தார். நேபாளத்தின் இந்த நடவடிக்கை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
  • இதுபோன்ற வீடியோவினால் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

  1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் வசம் உள்ளது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்ப கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.

  நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த முறை அவருக்குப் போட்டியாக தொகுதியில் செல்வாக்கான மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.
  இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரை நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி

  பழைய ஹைதராபாத்தில் உள்ள சித்தியம்பர் பஜார் சந்திப்பு அருகே நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் பாஜக வேட்பாளர் மாதவி லதா பங்கேற்று, திறந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

  அப்போது மாதவி லதா, அங்குள்ள மசூதியை நோக்கி வில்-அம்பு ஏவுவது போன்ற செய்கை செய்தார். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்தன. மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
  இந்நிலையில் பாஜக வேட்பாளர் மாதவி லதா மாதவி லதா கூறியதாவது :-

  'எனது வீடியோ சமூக ஊடகங்களில் பரவுவது எனது கவனத்திற்கு வந்தது. இது முழுமையடையாத வீடியோ மற்றும் யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுபோன்ற வீடியோவினால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

  நேற்று, ராம நவமியின் போது, நான் வானத்தை நோக்கி ஒரு (கற்பனை) அம்பு எய்ததாக சைகை செய்து கொண்டிருந்தேன். அந்த அம்பை ஒரு கட்டிடத்தை நோக்கி எய்தேன், அப்போது மசூதி அங்கிருந்தது தெரியாது" என கூறி உள்ளார்.

  • இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் பிளவை உருவாக்க சதி நடக்கிறது
  • பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

  1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் வசம் உள்ளது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்ப கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.

  நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த முறை அவருக்குப் போட்டியாக தொகுதியில் செல்வாக்கான மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.
  இந்நிலையில் பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரை இன்று நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி நடநத ராமநவமி கொண்டாட்டத்தின் போது

  ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா, மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவது போன்ற செய்கை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

  இந்நிலையில் ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரைக்கு அனுமதி மறுத்த தெலுங்கானா அரசை மாதவி லதா கடுமையாக கண்டித்து உள்ளார்.

  இது குறித்து மாதவி லதா கூறியதாவது :-  "சமீபத்தில் ரம்ஜான் கொண்டாட்டங்களுக்கு போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ஷோபா யாத்திரைக்கு அனுமதி மறுத்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளின் போது தான் ரம்ஜான் கொண்டாட்டம் இருந்தது.

  தற்போது ராஜா சிங்கிற்கு ஏன் அனுமதி வழங்கவில்லை. அவர் நீண்ட காலமாக ராம நவமி ஷோபா யாத்திரை நடத்தி வருகிறார். தற்போது இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் பிளவை உருவாக்க சதி நடக்கிறது " என  அவர் கூறினார்.