search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IAS officer"

    • சில இடங்களுக்கு குரூப்-1 அதிகாரிகளாக இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்படுவது வழக்கம்.
    • தமிழக தீயணைப்பு துறையில் பணிபுரிந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஒருவர் தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    சென்னை:

    தமிழ்நாடு தீயணைப்பு துறையில் இணை இயக்குனராக பணிபுரிந்து வருபவர் பிரியா ரவிச்சந்திரன்.

    கடந்த 2003-ம் ஆண்டு குரூப்-1 அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர் தீயணைப்பு துறையில் திறம்பட பணியாற்றி வருகிறார்.

    மாநில அரசின் பரிந்துரையின்படி ஆண்டு தோறும் காலியாக இருக்கும் குறிப்பிட்ட சில இடங்களுக்கு குரூப்-1 அதிகாரிகளாக இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்படுவது வழக்கம். இதன்படி 2022-ம் ஆண்டு காலியாக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடத்துக்கு தீயணைப்பு இணை இயக்குனரான பிரியா ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

    தமிழக தீயணைப்பு துறையில் பணிபுரிந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஒருவர் தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    • புதிதாக பதவி ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்ச்சிக்காக சென்னைக்கு சென்றிருந்தார்.
    • தங்கி இருந்த இடத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

    நாமக்கல்:

    சேலம் ஏற்காடு மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு டேன்மேக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்தவர் கதிரவன். சேலம் டேன்மேக் நிறுவனத்தின் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்தது. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சேலம் டேன்மேக் நிறுவனத்தில் மேலாண் இயக்குனர் பதவிலிருந்து வேறொரு துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.

    இன்று காலை தனது புதிதாக பதவி ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்ச்சிக்காக சென்னைக்கு சென்றிருந்தார். சென்னையில் தங்கி இருந்த இடத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். கதிரவனின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காந்திபுரம் ஆகும்.

    இது குறித்து தகவல் அறிந்து அவரது உறவினர்கள் சென்னை சென்றனர்.

    முதுகலை வேளாண்மை பட்டதாரியான இவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2002-ம் ஆண்டு பயிற்சி துணை கலெக்டராக தர்மபுரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றினார்.

    2007-ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற இவர் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றினார். சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளராகவும் பணியாற்றி உள்ளார். பின்னர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றினார். 2007-ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற இவர் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றினார்.

    சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளராகவும் பணியாற்றி உள்ளார். 2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்ற இவர் வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக பணியாற்றினார். பின்னர் மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கலெக்டராக பதவி ஏற்றார். பின்னர் ஈரோடு மாவட்டத்தின் 33-வது கலெக்டராக கடந்த 2018--ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    மராட்டிய மாநிலத்தில் மனைவியை துப்பாக்கியால் சுட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்குமார் பக்வத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மும்பை:

    மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மங்கல்வேதா டவுன் மார்வாடே பகுதியில் வசித்துவந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்குமார் பக்வத்(வயது 57). இவரது மனைவி சேனாலி. இவரது வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்ததன்பேரில் போலீசார் சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது விஜய்குமார் பக்வத் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். அவரது மனைவி சேனாலி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார்.

    போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது விஜய்குமார் பக்வத் ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்தது. சேனாலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முதற்கட்ட விசாரணையில் விஜய்குமார் பக்வத் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. வீட்டில் அவர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 
    டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லங்களின் முதன்மை உறைவிட ஆணையராக பணியாற்றி வந்த ஜஸ்பீர்சிங் பஜாஜ் பணி ஓய்வு பெற்றார். #TNHouse
    புதுடெல்லி:

    தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளராக இருந்த ஜஸ்பீர்சிங் பஜாஜ், டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லங்களின் முதன்மை உறைவிட ஆணையராக பணியாற்றி வந்தார். இவர் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்.

    இதையொட்டி அவருக்கு தமிழ்நாடு இல்லத்தில் பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மற்றொரு முதன்மை உறைவிட ஆணையர் என்.முருகானந்தம், துணை ஆணையர் சின்னத்துரை மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜஸ்பீர் சிங்கின் பணியை பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். #TNHouse

    ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் ரெயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ. 24½ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    போரூர்:

    கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் சதாசிவம் தொழில் அதிபர். இவர் அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    என்னுடைய நண்பர் மூலம் எனக்கு மாயவரம் பசுபதி அகரத்தைச் சேர்ந்த மணி வெங்கடகிருஷ்ணன் என்பவர் அறிமுகமானார் மணி வெங்கடகிருஷ்ணன் தனக்கு டெல்லியில் மத்திய அரசின் பல துறை அதிகாரிகள் உடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக என்னிடம் அடிக்கடி கூறி வந்தார்.

    என்னுடைய மகள், மகன் ஆகிய இருவருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் ரெயில்வே துறையில் ஸ்டே‌ஷன் மாஸ்டர் வேலை வாங்கி தருவதாக என்னிடம் உறுதி அளித்தார்.

    இதற்காக மணி வெங்கட கிருஷ்ணன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து என்னிடம் இருந்து இரண்டு தவணையாக மொத்தம் ரூ.24 லட்சத்து 50ஆயிரம் பெற்று கொண்டார். ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல் தலைமறைவாகி விட்டார்.

    வேலை வாங்கித் தருவதாக ரூ. 24½ லட்சம் மோசடி செய்த மணிவெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ஊழலை எதிர்த்த போதெல்லாம் தான் அவமானப்படுத்தப்பட்டதாக கோவையில் நடந்த நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் பேசினார். #IASOfficer #Sagayam
    கோவை:

    கோவை ஜி.எஸ்.டி. இயக்குனரகம் சார்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக்.29 முதல் நவ.3 வரை அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஊழலை ஒழிப்போம்; நாட்டை உயர்த்துவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஜி.எஸ்.டி அலுவலக அரங்கில் நடந்தது.

    இதில் சென்னை அறிவியல் நகர துணைத்தலைவரான ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    அரசு நிர்வாக பொறுப்பில் இருந்து கொண்டு நேர்மையாக இருப்பது என்பது எளிதான காரியமல்ல. நேர்மையானவர்கள் நிராகரிப்பு, புறக்கணிப்பு, இடமாற்றம் உள்ளிட்ட பல எதிர்மறை விளைவுகளுக்கு தயாராகவே இருக்க வேண்டும். அரசுத்துறையில் நேர்மையானவர்கள் இல்லை என்று கூறிவிட முடியாது. பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

    நம் நாட்டில் ஊழல் என்பது ஆழமாக பரவி விட்டது. அதை அழிக்க வேண்டியது இளைஞர்களின் கடமை, ஊழலை எதிர்த்த போதெல்லாம் நான் அவமானப்படுத்தப்பட்டேன். தூக்கியடிக்கப்பட்டேன். இருந்தும் என் கடமையிலிருந்து நான் விலகவில்லை. ஆய்வு ஒன்றின்படி 92 சதவீத இந்திய மக்கள் வாழ்வின் ஏதோ ஒரு சமயத்தில் ஏதோ காரணங்களுக்காக லஞ்சம் கொடுத்துள்ளார்கள். உலக நாடுகளில் ஊழல் அதிகம் அரங்கேறும் நாடுகளுக்கான ஆய்வு பட்டியலில் இந்தியா 81-வது இடத்தில் உள்ளது.

    இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது கட்டாயம். பள்ளி பாடபுத்தகத்தில் ஊழல் ஒழிப்பு குறித்து பாடங்களை சேர்க்க வேண்டியது அவசியம். நேர்மை என்ற கலாச்சாரத்தை ஆரம்பத்திலேயே விதைத்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஊழல் ஒழிப்பை மையமாக கொண்டு கட்டுரை, ஸ்லோகன் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜி.எஸ்.டி.கமி‌ஷனர் ஸ்ரீனிவாசராவ், கமி‌ஷனர் (தணிக்கை) குமரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.  #IASOfficer #Sagayam
    பெண் கலெக்டர் ஒருவர் 24 ஆண்டுகளுக்கு முன் தனது 41-வது வயதில் சபரிமலைக்கு சென்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் சென்று வழிபட நீண்ட காலமாக தடை இருந்து வந்தது. இதனால் அந்த வயதில் உள்ள பெண்கள் அங்கு செல்வது இல்லை.

    இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதி வழங்கி கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து, அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்கு செல்ல அனுமதிப்பது பற்றி கேரள அரசும், தேவஸ்தான போர்டும் ஆலோசித்து வருகின்றன.

    இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு முன் கே.பி.வல்சலா குமாரி என்ற பெண் கலெக்டர் சபரிமலை கோவிலுக்கு சென்றுள்ள தகவல் தற்போது தெரியவந்து உள்ளது.

    கடந்த 1994-1995-ம் ஆண்டில் இவர் பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டராக பணியாற்றினார். அப்போது கேரள ஐகோர்ட்டு உத்தரவின்படி, பக்தர்களின் வருகையையொட்டி செய்யப்பட்டு இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக வல்சலா குமாரி சபரிமலைக்கு 4 முறை சென்று உள்ளார்.

    புனித பயணம் செல்லும் பக்தராக அல்லாமல் முழுக்க முழுக்க அலுவலக பணியாக மட்டுமே அவர் அங்கு சென்று இருந்தார். அவர் சபரிமலைக்கு சென்றபோது அய்யப்பன் கோவிலில் உள்ள பதினெட்டாம் படியில் ஏறக்கூடாது என்று அவருக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.



    வல்சலா குமாரி தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், 41 வயதிலேயே தன்னால் சபரிமலை கோவிலுக்கு செல்ல முடிந்ததாகவும், தற்போது அனைத்து தரப்பு பெண்களும் சபரிமலை கோவிலுக்கு சென்று வழிபட சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்து இருப்பது உண்மையிலேயே நல்ல தீர்ப்பு என்றும் வல்சலா குமாரி கூறி உள்ளார்.

    அப்போது பதினெட்டாம் படியில் ஏரி சபரிமலை கோவிலுக்கு செல்ல தனக்கு அனுமதி இல்லாததால் அந்த படிக்கு கீழே கையை கட்டிக் கொண்டு நின்றபடி அய்யப்பனை வழிபட்டதாகவும் இப்போது வல்சலா குமாரி கூறி இருக்கிறார்.

    41 வயதில் சபரிமலை கோவிலுக்கு சென்ற அனுபவங்களை நினைவு கூர்ந்துள்ள வல்சலா குமாரி, தனக்கு 50 வயது ஆனபிறகு அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட்டதாகவும் தற்போது அவர் தெரிவித்து உள்ளார்.

    சபரிமலையில் சிறந்த முறையில் திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்து, பெண்களுக்கென்று தனி வரிசையை ஏற்படுத்தினால் அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யமுடியும் என்று கூறி இருக்கும் வல்சலா குமாரி, சில நாட்கள் அல்லது வாரங்களில் பெண்கள் மட்டும் சென்று வழிபட அனுமதிக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்து இருக்கிறார். #Sabarimala

    ×