என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "transfer"
- குப்புராணி கோவை மண்டல தலைமை மின் பொறியாளராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
- புதிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக டேவிட் ஜெபசிங் இன்று பொறுப்பேற்று கொண்டார்.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை மண்டலத்திற்கு உட்பட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக பணியாற்றி வந்த குப்புராணி கோவை மண்டல தலைமை மின் பொறியாளராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் புதிய நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளராக டேவிட் ஜெபசிங் இன்று பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் மாறுதலாகி செல்லும் தலைமை மின் பொறியாளர் குப்புராணி பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட மேற்பார்வை மின் பொறியாளர்கள், மின் பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சிறப்பு செயலாளர் ஜெயகாந்தன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனராக மாற்றப்பட்டார்.
- வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஷ்ரேயா சிங், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குனராக மாற்றப்பட்டார்.
சென்னை:
தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண் இயக்குனர் பிரதாப், சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறையின் துணை செயலாளராக மாற்றப்பட்டார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சிறப்பு செயலாளர் ஜெயகாந்தன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனராக மாற்றப்பட்டார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இயக்குனர் ரத்னா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
வணிக வரிகள் மற்றும் மாநில வரிகள் (கோவை) இணை கமிஷனர் காயத்ரி கிருஷ்ணன், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மாற்றப்பட்டார்.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குனராகவும், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் திட்ட இயக்குனராகவும் மாற்றப்பட்டார். அவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஷ்ரேயா சிங், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குனராக மாற்றப்பட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- நெல்லை மாநகர் பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி மற்றும் மாநகர தீவிர குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் நெல்லை மாவட்டத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை:
தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி வள்ளியூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வரும் ஸ்டீபன் ஜோஸ் நெல்லை மாநகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை டவுன் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்து வரும் சுப்புலட்சுமி நெல்லை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் நெல்லை மாநகரத்திற்கும், நெல்லை மாநகர் பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி மற்றும் மாநகர தீவிர குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் நெல்லை மாவட்டத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி வெள்ளைக் கரடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
- இங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கூடாது.
கருப்பூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி வெள்ளைக் கரடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தற்போது அந்த கடையை அதிகாரிகள் குடியிருப்பு பகுதிக்கு மாற்றம் செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் நெருஞ்சிபட்டி, மாங்குப்பை ஆகிய கிராம பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கூடாது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் பாதிக்கப்படுவர். தற்போது உள்ள இடத்திலேயே டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
அதனை வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.கண்ணன், துணைத் தலைவர் ராஜா, ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி ஆகியோர் பெற்றுக்கொண்டு அரசுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர்.
- பணியிட மாற்றத்திற்கான உத்தரவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பிறப்பித்துள்ளார்.
- தாசில்தார் நிலையில் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் நிர்வாக நலன் கருதி, தாசில்தார் நிலையில் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மடத்துக்குளம் தாசில்தாராக இருந்த செல்வி காங்கயம் ஆதிதிராவிடர் நல (நிலம் எடுப்பு) தனிதாசில்தாராகவும், ஊத்துக்குளி தாசில்தாராக இருந்த தங்கவேல் காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், தமிழ்நாடு மாநில வாணிப கழக உதவி மேலாளராக (சில்லறை விற்பனை) இருந்த சரவணன் ஊத்துக்குளி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோல் காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக இருந்த பானுமதி மடத்துக்குளம் தாசில்தாராகவும், காங்கயம் ஆதிதிராவிடர் நல (நில எடுப்பு) தனிதாசில்தாராக இருந்த நந்தகோபால் திருப்பூர் தமிழ்நாடு வாணிப கழக உதவி மேலாளராக (சில்லறை விற்பனை) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோல் 5 துணை தாசில்தார்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த சிவசுப்பிரமணியன் திருப்பூர் தெற்கு வட்ட வழங்கல் அதிகாரியாகவும், திருப்பூர் துணை தாசில்தாராக இருந்த தமிழேஸ்வரன் கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட தலைமை உதவியாளராகவும், தெற்கு வட்ட வழங்கல் அதிகாரியாக இருந்த புஷ்பராஜன் மாவட்ட கலெக்டர் அலுவலக வரவேற்பு துணை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பல்லடம் தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த முருகேஸ்வரன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-2 துணை தாசில்தாராகவும், சாலை மேம்பாட்டு திட்ட துணை தாசில்தாராக இருந்த சிவக்குமார் பல்லடம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பிறப்பித்துள்ளார்.
- போலீஸ் குடியிருப்புக்கும் சி.பி.சி.ஐ.டி. ஷாம்ளா பெரியகடைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
- உத்தரவை தலைமையக எஸ்.பி. சுபம்கோஷ் பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி:
போலீஸ் துறையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 181 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிக்மா செக்யூரிட்டியில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம் மாகிவிற்கும், வெங்கடாஜலபதி ஓதியஞ்சாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
போலீஸ் குடியிருப்பு குமரவேல், கடலோர காவல்பிரிவுக்கும், அரியாங்குப்பம் பழனிசாமி சிக்மா செக்யூரிட்டிக்கும், காரைக்கால் ஆயுதப்படை தமிழரசன், புதுவை போலீஸ் குடியிருப்புக்கும் சி.பி.சி.ஐ.டி. ஷாம்ளா பெரியகடைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
தலைமை காவலர்கள் 15 பேர் உதவி சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளித்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 பெண் போலீசார் உட்பட 160 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமையக எஸ்.பி. சுபம்கோஷ் பிறப்பித்துள்ளார்.
- வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மடத்துக்குளம் தனி வட்டாட்சியர் மயில்சாமி காங்கேயம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவிநாசி வட்டாட்சியர் சுந்தரம் உடுமலை வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் .உடுமலை வட்டாட்சியராக பணியாற்றி வந்த கண்ணாமணி மடத்துக்குளம் தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- வாரச்சந்தை கூடும் இடத்தை மாற்ற வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
- தேவிபட்டினம் ரோடு, மகர் நோன்பு பொட்டல் போன்ற இடங்களில் வாரச்சந்தை அமைக்கலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையத்தை விரி வாக்கம் செய்து புனர மைக்கும் நிலையில் வாரச் சந்தை கூடும் இடத்தை தற்காலிகமாக பட்டினம் காத்தான் பகுதிக்கு நகராட்சி மாற்றியுள்ளது.
ராமநாதபுரம் நகரில் செயல்பட வேண்டிய வாரச் சந்தை தற்போது நகர் எல்லையை தாண்டி இருப்பதால் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், வணிகர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாக மும், நகராட்சியும் பொது மக்களிடம் கருத்து கேட்டு மாற்று இடத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவிபட்டினம் ரோடு, மகர் நோன்பு பொட்டல் போன்ற இடங்க ளில் வாரச்சந்தை அமைக்க லாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காத்திருப்பு பட்டியலில் இருந்த மகாலட்சுமி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
- மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் பணியாற்றும் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிடம் மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஆனந்த் சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த செந்தில் பிரபு நல்லூர் போலீஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், காத்திருப்பு பட்டியலில் இருந்த விநாயகம் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், அதேபோல் காத்திருப்பு பட்டியலில் இருந்த மகாலட்சுமி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
- பெரம்பலூர் மாவட்டம் ஸ்ரீதேவிமங்களம்-தெரணிபாளையம் மின் பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் இணைப்புகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது
- பெரம்பலூர் செயற்பொறியாளர் அறிவிப்பு
பெரம்பலூர்,
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம், பெரம்பலூர் கோட்டம், சிறுவாச்சூர் உபகோட்டம் பாடாலூர் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீதேவிமங்களம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை திருச்சி பெருநகரம் மின்பகிர்மான வட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் உப கோட்டம், சிறுகனூர் பிரிவிற்கும், இதேபோல் தெரணிபாளையம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை லால்குடி கோட்டம், கல்லக்குடி உபகோட்டம் புள்ளம்பாடி பிரிவிற்கும் மின்வட்ட சீரமைப்பு காரணமாக வருவாய் கிராமம் உள்ள மாவட்டத்தில் இணைக்க வேண்டியுள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி பெருநகரம் மின்பகிர்மான வட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் உபகோட்டம், சிறுகனூர் பிரிவிற்கு ஸ்ரீதேவிமங்களம் மின்பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளையும், தெரணிபாளையம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை புள்ளம்பாடி பிரிவிற்கும் நேற்று முன்தினம் முதல் மாற்றம் செயப்பட்டுள்ளது. எனவே மின்சாரம் சம்பந்தமான அனைத்திற்கும் ஸ்ரீதேவிமங்களம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் பயனாளிகள் சிறுகனூர் பிரிவு அலுவலகத்தையும், தெரணிபாளையம் மின் பகிர்மான மின் பயனாளிகள் புள்ளம்பாடி பிரிவு அலுவலகத்தை அணுக வேண்டும், என்று பெரம்பலூர் செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.