என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RajivGandhi Govt Hospital"

    • மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனராக தேரணி ராஜன் நியமனம்.
    • ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீனாக மருத்துவர் சாந்தாராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனராக தேரணி ராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீனாக மருத்துவர் சாந்தாராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • குழந்தையின் தாய்க்கு ஆறுதல் கூற வேண்டிய அமைச்சர் மனம் புண்படும்படி பேசுவது என்பது மனித நேயமற்ற செயல்.
    • பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 1½ வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் என்ன கருத்தினைத் தெரிவித்தாரோ அதற்கேற்ப, 'மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தவறில்லை' என்று விசாரணைக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அமைச்சரின் இதுபோன்ற செயல் நீதிக்கும், நியாயத்திற்கும் புறம்பான செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. இதிலிருந்து விசாரணை அறிக்கை என்பது ஒரு தலைபட்சமானது என்பது தெளிவாகிறது.

    மேலும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தன்னை சந்தித்துப் பேசும்போது, வார்த்தைக்கு வார்த்தை "குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை" என்று சொல்லி தன்னை புண்படுத்தியதாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் தெரிவிக்கிறார். மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக தன் ஒன்றரை வயது மகனின் கை அகற்றப்பட்டு, மனம் நொந்து போயுள்ள நிலையில், குழந்தையின் தாய்க்கு ஆறுதல் கூற வேண்டிய அமைச்சர் மனம் புண்படும்படி பேசுவது என்பது மனித நேயமற்ற செயல். இதுவும் கடும் கண்டத்திற்குரியது.

    சென்னை தலைமை மருத்துவமனையிலேயே இதுபோன்ற நிலை இருந்தால், மாவட்ட மருத்துவமனைகளின் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இந்தத் தவறுக்கு தி.மு.க. அரசு பொறுப்பேற்க வேண்டுமென்றும், இந்தத் தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாக குழந்தையின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தனி வார்டுகளில் வெப்பத்தை தணிக்க தேவையான அனைத்து உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளது.
    • வார்டுகளுக்கு சிறப்பு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தற்போதே அதிகரித்துள்ளது. இதனால், நீர்ச்சத்து இழப்பு, மயக்கம், தலைசுற்றல், வெப்பவாதம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக அரசு ஆஸ்பத்திரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.

    இந்த நிலையில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வெப்பவாத சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வார்டு முழுவதும் குளிர்சாதன வசதியுடன் கூடிய 10 படுக்கைகள் உள்ளது. இதனை தவிர 2 ஐ.சி.யூ. படுக்கைகளும் இருக்கிறது. இந்த தனி வார்டுகளில் வெப்பத்தை தணிக்க தேவையான அனைத்து உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓ.ஆர்.எஸ். கரைசல், ஆக்சிஜன் வசதி, ஐஸ் பாக்கெட்டுகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டுகளுக்கு சிறப்பு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக ஆஸ்பத்திரியின் மருத்துவ நிலைய அதிகாரி டாக்டர் சாய் வித்யா கூறும்போது, "அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக வெப்பவாதத்துக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது" என்றார். இதே போல ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும் அவசர சிகிச்சை பிரிவுக்கு அருகே வெப்பவாதத்துக்கு என 10 படுக்கைகளுடன் கூடிய தனிவார்டு அமைக்கப்பட்டது.

    கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி உள்பட சென்னையில் உள்ள மற்ற அரசு ஆஸ்பத்திரிகளிலும் வெப்ப வாதத்துக்கு தனி வார்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    ×