என் மலர்
நீங்கள் தேடியது "பணியிட மாற்றம்"
- ஒரே நேரத்தில் 38 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம்.
- சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பெருநகர சென்னை காவல்துறையில் நிர்வாக நலன் கருதி, ஒரே நேரத்தில் 38 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

- இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஆணையர்/சுற்றுலா மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம்
- தமிழ்நாடு வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் விசாகன், தொழில்நுட்பக் கல்வி இயக்குனராக மாற்றம்
தமிழ்நாட்டில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள உத்தரவில், தொழில்நுட்ப கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஆணையர்/சுற்றுலா மேலாண்மை இயக்குனராகவும்,
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனராக இருந்த கிறிஸ்துராஜ், தமிழ்நாடு மாநில வாணிப கழக மேலாண்மை இயக்குனராகவும், தமிழ்நாடு வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் விசாகன், தொழில்நுட்பக் கல்வி இயக்குனராகவும், சிறப்பு திட்ட செயலாக்க துறை கூடுதல் செயலாளர் உமா மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் செயலாளர் ஆகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் செயலாளர் ரத்னா வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை கூடுதல் செயலாளர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

- சந்தீப் மிட்டல் 'சைபர் கிரைம்' கூடுதல் டி.ஜி.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டி.ஜி.பி. ஆனார்.
- பிரேம் ஆனந்த் சின்ஹா தெற்கு மண்டல ஐ.ஜி.யான இவர், கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.
தமிழகம் முழுவதும் பதவி உயர்வு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக 70 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-
டேவிட்சன் தேவாசீர்வாதம்- சட்டம் -ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த இவர், பதவி உயர்வு பெற்று, ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.
சந்தீப் மிட்டல்- 'சைபர் கிரைம்' கூடுதல் டி.ஜி.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டி.ஜி.பி. ஆனார்.
பால நாகதேவி- பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இவர் சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவு டி.ஜி.பி. பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.
அன்பு- சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யான இவர் பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.
பிரேம் ஆனந்த் சின்ஹா- தெற்கு மண்டல ஐ.ஜி.யான இவர், கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். ஆவடி கமிஷனராக பதவியேற்பார்.
செந்தில்குமார்- மேற்கு மண்டல ஐ.ஜி.யான இவர், பதவி உயர்வு பெற்று, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக கூடுதல் டி.ஜி.பி. யாக பதவியேற்பார்.
அனிஷா உஷேன்- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.
சங்கர்- ஆவடி போலீஸ் கமிஷனரான இவர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆனார்.
அமல்ராஜ்- அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. யான இவர், தாம்பரம் போலீஸ் கமிஷனராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட அதிகாரிகள் உள்பட 70 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- சென்னை மாநகர போக்குவரத்துப்பிரிவு வடக்கு மண்டல இணை ஆணையராக சோனல் சந்திரா நியமனம்.
- சென்னை போக்குவரத்து துணை ஆணையராக சுஹாசினி நியமனம்.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனிஷா ஹுசைன், லட்சுமி, சோனல் சந்திரா, ஜவஹர், சுஹாசினி, திவ்யா, சஜிதா உள்ளிட்ட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
* சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. ஆக லட்சுமி, சிலை திருட்டு தடுப்புப்பிரிவு ஐ.ஜி. ஆக அனிஷா ஹுசைன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* சென்னை மாநகர போக்குவரத்துப்பிரிவு வடக்கு மண்டல இணை ஆணையராக சோனல் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை மாநகர சிபிசிஐடி கண்காணிப்பாளராக ஜவஹர், சென்னை போக்குவரத்து துணை ஆணையராக சுஹாசினி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* கோவை காவல் தலைமையக துணை ஆணையராக திவ்யா, பதவி உயர்வு பெற்ற சஜிதா சென்னை சிபிசிஐடி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* சிபிசிஐடி-யில் நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்புப்பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டு அதன் எஸ்.பி.யாக சஜிதா ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

- முனியன் என்பவரது மனைவி பானுமதி 5 மாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- இன்று காலை நகர்நல அலுவலர் முருகன், டி.எஸ்.கே., மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூர் அவிநாசி சாலை பங்களா ஸ்டாப் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் டி.எஸ்.கே. மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்பூர் வடக்கு பகுதியை சேர்ந்த ஏராளமான கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்குப்பட்ட சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த முனியன் என்பவரது மனைவி பானுமதி 5 மாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று வழக்கமான பரிசோதனைக்கு சென்று இருந்த பானுமதிக்கு குளுக்கோஸ் பாக்கெட்கள் வழங்கி உள்ளனர். அதில் காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பானுமதி கேட்டபோது, ஆஸ்பத்திரி ஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பானுமதி தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி உதவி நல அலுவலர் கலைச்செல்வன், ஆஸ்பத்திரிக்கு வந்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் ஆஸ்பத்திரியில் இருந்த குளுக்கோஸ் பாக்கெட்டுகளையும் ஆய்வு செய்தார்.
அப்போது அதில் ஒரு சில காலாவதியான பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கவனக்குறைவாக நடந்து கொண்ட ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு அவர் கடும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் விசாரணை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை நகர்நல அலுவலர் முருகன், டி.எஸ்.கே., மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து விசாரணையின் அடிப்படையில் மருத்துவமனையின் மருந்தாளுனர் வீர பராசக்தி, ஆய்வக நுட்பனர் நாகஜோதி, செவிலியர் கோமதி உள்ளிட்டோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட்டுகள் அப்புறப்படுத்தப்பட்டது. அஜாக்கிரதையாக செயல்படாமல் கவனமாக செயல்பட மருத்துவர்கள் முன்னிலையில் மருத்துவ பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
- மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் பணி ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.
- இதுவரை 209 பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய பகுதிக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு பணி ஒதுக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, இதுவரை 209 பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய பகுதிக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில்,
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவல் ஆளிநர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, மொத்தம் 209 பெண் காவல் ஆளிநர்கள் தங்களது பேறுகால விடுப்பிற்கு பிறகு, குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஏதுவாக, மற்ற மாநகரம்/மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பத்திருந்தனர்.
அதன்படி, 03.06.2025 வரை, பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த 209 பெண் காவல் ஆளிநர்களுக்கும் அவர்கள் விரும்பிய மாநகரம்/மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
- கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஜெயந்தி சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சேலம் சரக டிஐஜி உமா விழுப்புரம் சரக டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டள்ளனர். 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
* சென்னை தலைமையக டிஐஜி மகேஷ்குமார் தமிழக கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஜெயந்தி சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நாகை எஸ்.பி. அருண் கபிலன் சென்னை தலைமையக துணை ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* குடிமை பொருள் வழங்கல் துறை மதுரை மண்டல எஸ்.பி. செல்வகுமார், நாகை எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* விழுப்புர சரக டிஐஜி திஷா மிட்டல் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சேலம் சரக டிஐஜி உமா விழுப்புரம் சரக டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* தாம்பரம் மத்திய குற்ற பிரிவு துணை ஆணையர் பிரபாகர் சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தேனி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா பதவி உயர்வு பெற்று சேலம் நகர் தெற்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* குளச்சல் ஏஎஸ்பி சாமுவேல் பிரவீன் கவுதம் திருப்பூர் நகர் வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னா குமார் பதவி உயர்வு பெற்று நெல்லை மேற்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அனில் குமார் சிங்கும் ஜம்மு-காஷ்மீருக்கு மாற்றப்பட்டார்.
- காஷ்மீரில் டிவிஷனல் கமிஷனராகப் பணியாற்றிய 2005 பேட்ச் அதிகாரியான விஜய் குமார் பிதுரி டெல்லிக்கு மாற்றப்பட்டார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் AGMUT பணிப் பிரிவில் செய்யப்பட்ட பெரிய மறுசீரமைப்பில், இரண்டு கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் ஒரு முதன்மைச் செயலாளர் உட்பட டெல்லி அரசாங்கத்தின் பல உயர் அதிகாரிகள் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டனர்.
டெல்லி அரசின் நிதி மற்றும் வருவாய் துறைகளின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த அருணாச்சலப் பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும் யூனியன் பிரதேச (AGMUT) கேடரைச் சேர்ந்த 1994 ஆம் ஆண்டு தொகுதி IAS அதிகாரியான ஆஷிஷ் சந்திர வர்மா, ஜம்மு-காஷ்மீருக்கு மாற்றப்பட்டார்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அனில் குமார் சிங்கும் ஜம்மு-காஷ்மீருக்கு மாற்றப்பட்டார். அதே நேரத்தில் கண்காணிப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் சுதிர் குமார் மிசோரமுக்கு மாற்றப்பட்டார். காஷ்மீரில் டிவிஷனல் கமிஷனராகப் பணியாற்றிய 2005 பேட்ச் அதிகாரியான விஜய் குமார் பிதுரி டெல்லிக்கு மாற்றப்பட்டார்.
அதிகாரிகளின் இந்த பணியிட மாற்றத்தின் படி, டெல்லி அரசு 42 மூத்த AGMUT மற்றும் DANICS கேடர் அதிகாரிகளின் துறைகளுக்கு இடையேயான இடமாற்றங்கள் மற்றும் பணி நியமனத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
- நீதிபதிகள் பணி இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.
- சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் கரூர் மாவட்ட நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி உள்பட 77 நீதிபதிகள் பணி இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.
அதன்படி, பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தின தேவி, கரூர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் கரூர் மாவட்ட நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த எழில்வேலன், சேலம் மாவட்ட கூடுதல் நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனராக தேரணி ராஜன் நியமனம்.
- ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீனாக மருத்துவர் சாந்தாராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனராக தேரணி ராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீனாக மருத்துவர் சாந்தாராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- வீடியோ குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள் லாவண்யா, மாடசாமி ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.
- தலைமை காவலர் கோவிந்தனை, ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம்:
சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலைய தலைமை காவலர் கோவிந்தன், கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து அமைச்சர் ஆதரவோடு செயல்படுவதாக தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த வீடியோ குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள் லாவண்யா, மாடசாமி ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதன் அடிப்படையில் தலைமை காவலர் கோவிந்தனை, ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
- நிர்வாக நலன் கருதி நடவடிக்கை
- கலெக்டர் உத்தரவு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் 9 தாசில்தார்கள் நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:-
பேரணாம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விநாயகமூர்த்தி வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தாசில்தாராகவும் (பறக்கும்படை), அங்கு பணிபுரிந்த கோட்டீஸ்வரன் வேலூர் உதவிகமிஷனர் (கலால்) அலுவலக கண்காணிப்பாளராகவும், அங்கு பணிபுரிந்த செல்வி வேலூர் கோவில் நிலங்கள் தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த சுரேஷ்குமார் வேலூர் தாலுகா ஆதிதிராவிடர் நல தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று வேலூர் வருவாய் கோட்ட அலுவலர் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த சுமதி கே.வி.குப்பம் சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த ரமேஷ் முத்திரைக்கட்டண தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த சத்தியமூர்த்தி வேலூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த நரசிம்மன் வேலூர் வருவாய் கோட்ட அலுவலர் நேர்முக உதவியாளராகவும், வேலூர் தாலுகா தேர்தல்பிரிவு துணை தாசில்தார் சிவசண்முகம் பேரணாம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பதவி உயர்வு பெற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பிறப்பித்துள்ளார். புதிய பணியிடத்தில் அனைத்து தாசில்தார்களும் உடனடியாக சேர வேண்டும் இல்லையென்றால் அரசு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும்.
பணியிட மாறுதல் குறித்து மேல்முறையீடோ அல்லது விடுப்பு விண்ணப்பமோ ஏற்று கொள்ளப்படாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.






