என் மலர்
நீங்கள் தேடியது "மகப்பேறு விடுப்பு"
- உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது.
- மகப்பேறு விடுப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி உத்தரவு.
மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த ரஞ்சிதா என்பவருக்கு 3வது பிரசவத்திற்கான ஓராண்டு மகப்பேறு விடுப்பும், சலுகைகளும் உளுந்தூர்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் நீதிபதி நிராகரித்துள்ளார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அமர்வு, பணிக்கு சேரும் முன்பே இரண்டு குழந்தைகளை பெற்ற நிலையில், மூன்றாவது முறையாக கருவுற்று பணிக்கு சேர்ந்த பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, ரஞ்சிதாவுக்கு சட்டப்படி மகப்பேறு விடுப்பு வழங்க, உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது.
மேலும் அந்த உத்தரவில், குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்க கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது. மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் பணி ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.
- இதுவரை 209 பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய பகுதிக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு பணி ஒதுக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, இதுவரை 209 பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய பகுதிக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில்,
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவல் ஆளிநர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, மொத்தம் 209 பெண் காவல் ஆளிநர்கள் தங்களது பேறுகால விடுப்பிற்கு பிறகு, குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஏதுவாக, மற்ற மாநகரம்/மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பத்திருந்தனர்.
அதன்படி, 03.06.2025 வரை, பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த 209 பெண் காவல் ஆளிநர்களுக்கும் அவர்கள் விரும்பிய மாநகரம்/மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
- கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பில் ஒரு வாரம் விடுமுறையில் இருந்துள்ளார்.
- ஸ்கிரீன் ஷாட் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பீகாரில் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் மஹுவா பகுதியில் இயங்கும் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஜிதேந்திர குமார் சிங், குழைந்தை பெறும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பில் ஒரு வாரம் விடுமுறையில் இருந்துள்ளார்.
ஆன்லைனில் விடுப்புக்கு விண்ணப்பிக்கும் அரசு ஆசிரியர்களுக்காக அமைக்கப்பட்ட போர்ட்டலைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட விடுப்பு குறித்த ஸ்கிரீன் ஷாட் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆனால், இது ஒரு தொழில்நுட்பப் பிழை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப பிழையானது சரி செய்யப்படும் என மஹுவா தொகுதி கல்வி அதிகாரி அர்ச்சனா குமாரி தெரிவித்துள்ளார்.
ஆண்கள் கூட தங்கள் பிறந்த குழந்தைகளைக் கவனிக்க 'பித்ரித்வா அவகாஷ்' (தந்தையர் விடுப்பு) பெறுகிறார்கள் என்றும் அதனோடு மகப்பேறு விடுப்பு குழம்பியுள்ளது என்று அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும் ஆண் ஒருவருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்ட ஸ்க்ரீன் சாட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பெண் பணியாளர்களுக்கு, தமிழ்நாடு அரசு மகப்பேறு விடுப்பு 9 மாதத் தில் இருந்து 12 மாதமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.
- தகுதியான பணியாளர்களுக்கு, இவ்விடுப்பினை அனுமதிக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 12 மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்குவதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண் பணியாளர்களுக்கு, தமிழ்நாடு அரசு மகப்பேறு விடுப்பு 9 மாதத் தில் இருந்து 12 மாதமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.
தகுதியான பணியாளர்களுக்கு, இவ்விடுப்பினை அனுமதிக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெண் பணியாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவதில்லை என்றும், ஆறு மாதத்திற்கு பிறகு மகப்பேறு விடுப்பு எடுக்கும் பணியாளர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்வதாகவும் புகார் வந்த நிலையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.






