search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maternity leave"

    • மகப்பேறு விடுப்புக்கு விண்ணப்பித்து, முறையாக அனுமதி பெற்ற பிறகே விடுப்பு அளிக்கப்படுகிறது.
    • சில இடங்களில், விடுப்பு எடுக்கும் ஆசிரியரே தற்காலிக ஆசிரியருக்கு மாத ஊதியம் வழங்குவதும் தொடர்கிறது.

    திருப்பூர்:

    அரசு ஊழியர்களின் மகப்பேறு கால விடுமுறை, ஓராண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிற துறைகளில் பணிபுரிவோர் விடுப்பு எடுத்து சென்றாலும் சக ஊழியர்களால் பணிகளை பகிர்ந்து செய்ய முடியும். ஆனால் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்தால், மாணவர்களுக்கு ஒரு கல்வியாண்டே பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பெற்றோர் - ஆசிரியர் கழக நிதி உள்ள பள்ளிகளில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கற்பித்தல் பணிகளுக்கு ஆவண செய்யப்படுகிறது. சில இடங்களில், விடுப்பு எடுக்கும் ஆசிரியரே தற்காலிக ஆசிரியருக்கு மாத ஊதியம் வழங்குவதும் தொடர்கிறது.

    ஆனால் இதுபோன்ற வசதி இல்லாத பட்சத்தில், ஆசிரியர் விடுப்பு எடுத்தால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி விடுகிறது. உபரி ஆசிரியர்கள் இல்லாதபட்சத்தில் பிற ஆசிரியர்களே கூடுதலாக வகுப்பு கையாள வேண்டியிருப்பதால், பணிச்சுமை அதிகரித்து வருகிறது. இதற்கு பதிலி ஆசிரியர் நியமித்து, அரசே ஊதியம் வழங்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் மகப்பேறு விடுப்பு எடுக்கும் போது, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடங்கள் முடிப்பதில் பெரிதும் சிரமப்பட வேண்டியிருக்கிறது.மகப்பேறு விடுப்புக்கு விண்ணப்பித்து, முறையாக அனுமதி பெற்ற பிறகே விடுப்பு அளிக்கப்படுகிறது.

    எனவே விடுமுறை காலங்களுக்கு, அரசே ஊதியம் வழங்கி, பதிலி ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஓராண்டு விடுப்பு அளிப்பதால் இந்த ஏற்பாடு செய்தால்தான், கற்பித்தல் பணிகள் தேக்கமின்றி நடக்கும் என்றனர்.

    ×