search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Delhi govt"

  • நாட்டின் வளர்ச்சிக்கு, ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்.
  • கல்வி மட்டுமின்றி, சங்கம் விஹார் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னைகளும் விரைவில் தீர்க்கப்படும்.

  டெல்லி அரசுப் பள்ளிகளில் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சிறந்த கல்வி வசதிகளைப் பெறுவதை ஆம் ஆத்மி அரசு உறுதி செய்யும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

  சங்கம் விஹாரின் தியோலி பஹாரியில் புதிய பள்ளிக் கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "நாட்டின் வளர்ச்சிக்கு, ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்" என்றார்.

  இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

  நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்பிக்க வேண்டும் என்று பி.ஆர். அம்பேத்கர் எப்போதும் கூறிவந்தார். அவரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் வெளிநாட்டில் இருந்து சிறந்த கல்வியைப் பெற்றவர்.

  டெல்லியில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முதல் மூன்று புதிய அரசுப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மேலும், பல ஏழை மற்றும் பின்தங்கிய குழந்தைகள் இப்போது அங்கு படிக்கிறார்கள்.

  கல்வி மட்டுமின்றி, சங்கம் விஹார் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னைகளும் விரைவில் தீர்க்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • டெல்லி அரசின் நிர்வாக அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.
  • அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரத்தில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.

  புதுடெல்லி:

  டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நீண்டகாலமாக அதிகாரப் போட்டி நிலவுகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிக அதிகாரம் இருப்பதாக தீர்ப்பு அளித்தது. ஆனால், இந்த தீர்ப்பை நிராகரிக்கும் வகையில், டெல்லி அரசின் நிர்வாக அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.

  தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ) உருவாக்குவதற்கான இந்த அவசர சட்டம், டெல்லி அரசின் ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் டெல்லி, அந்தமான் நிகோபார், லட்சத்தீவுகள், டாமன் டையு, தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களின் குடிமைப் பணி (டிஏஎன்ஐசிஎஸ்) பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரத்தில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.

  இந்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் அவசர சட்டத்தை நிறுத்திவைக்க உச்ச நீதிமனற்ம் மறுத்துவிட்டது.

  அதேசமயம், பதில் மனு தாக்கல் செய்யும்படி டெல்லி துணைநிலை ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். வழக்கு விசாரணை அடுத்த திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  அப்போது கெஜ்ரிவால் அரசால் பல்வேறு துறைகளில் நியமிக்கப்பட்ட 400 நிபுணர்களை கவர்னர் பணிநீக்கம் செய்தது தொடர்பான டெல்லி அரசின் மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

  • கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு கொரோனா பாதிப்பு 300-யை தொட்டுள்ளது.
  • கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தொடர்ந்து டெல்லி அரசு இந்த அவசர ஆலோசனை நடத்துகிறது.

  கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லியில் நேற்றைய நிலவரப்படி 300 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

  கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு 300-யை தொட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தொடர்ந்து டெல்லி அரசு இந்த அவசர ஆலோசனை நடத்துகிறது.

  சுகாதார மந்திரி சவுரப் பரத்வாஜ் இந்த அவசர சட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

  • தேர்ச்சி பெற முடியாத மாணவனுக்கு இரண்டு மாதங்களுக்குள் மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்.
  • தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 33% மதிப்பெண்கள் பெற வேண்டும்.

  டெல்லியில் ஆட்சி செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் தேர்ச்சி பெறத் தவறினால், அடுத்த வகுப்புகளுக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.

  புதிய கல்விக் கொள்கை வழிகாட்டுதல்படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் உள்ள தீவிரத்தன்மையை தொடக்க வகுப்புகளிலும் கொண்டு வருவதை தங்களது அரசு நோக்கமாகக் கொண்டுள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

  கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வில் தோல்வி அடைந்தாலும் அவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதில் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஆய்வு குழு ஒன்றை டெல்லி அரசு அமைத்துள்ளது.

  அதன்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்பில் ஒரு மாணவன் தேர்ச்சி பெற முடியா விட்டால், மறுதேர்வு மூலம் இரண்டு மாதங்களுக்குள் அந்த மாணவனுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் புதிய மதிப்பீட்டு வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாணவர் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 33 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  டெல்லியில் யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர். #DelhiGovt #LieutenantGovernor #ArvindKejriwal
  புதுடெல்லி:

  டெல்லி மற்றும் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கும், மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட், துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் அதிகம் என்று தீர்ப்பளித்தது.  இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்றும் அவர் அமைச்சரவையுடன் இணக்கமாக செயல்படவேண்டும் என்று கூறினர். நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

  இந்த தீர்ப்பு மிக முக்கியமானது என்பதால் அதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளும், தனித்தனியாக தீர்ப்பை வாசித்தனர்.  

  நீதிபதி சிக்ரி தனது தீர்ப்பில், காவல்துறையை துணை நிலை ஆளுநரே கவனிப்பார் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர்கள் மற்றும் செயலாளர்கள் நியமனம் மற்றும் இடமாற்றம் அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தார். 

  ‘விசாரணைக் கமிஷன் அமைப்பது மத்திய அரசின் வரம்பிற்கு உட்பட்டது என்பதால் முதல்வரால் அமைக்க முடியாது. இணை செயலாளர் மற்றும் அதற்கு மேல் அதிகாரம் உள்ள அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கே உள்ளது. இணை செயலாளர் அந்தஸ்துக்கு கீழ் உள்ள அதிகாரிகளை மாநில அரசு நியமிக்கலாம். மின்சாரத்துறை டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்’ என்றும் நீதிபதி சிக்ரி தெரிவித்தார்.

  மற்றொரு நீதிபதி அசோக் பூஷன் தனது தீர்ப்பில், சேவைகள் பிரிவில் உள்ள அனைத்து அதிகாரிகளும் மத்திய அரசின் வரம்பிற்குள் தான் வருவார்கள் என்றும், அவர்களை நியமிக்கவோ மாற்றவோ துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம் இருப்பதாகவும் கூறினார்.

  சேவைகள் பிரிவில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், அந்த பிரிவு மட்டும் 3 நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. #DelhiGovt #LieutenantGovernor #ArvindKejriwal

  டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறிய ஆம் ஆத்மி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 25 ரூபாய் கோடி அபராதம் விதித்துள்ளது. #NGT #AirPollution #DelhiGovt
  புதுடெல்லி:

  நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்றின் மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகன புகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் காற்றின் தரமும் குறைந்து வருகிறது.

  இதையடுத்து, காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவு எண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  வீடுகளில் ஊதுவத்தி கொளுத்துவதைக் கூட நிறுத்தும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், காற்று மாசு குறைந்தபாடில்லை.  இதனால் டெல்லிக்குட்பட்ட பல பகுதிகளில் முகக்கவசம் அணிந்தபடி செல்லும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

  இந்நிலையில், சரியான நடவடிக்கைகள் மூலம் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறிய ஆம் ஆத்மி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று 25 ரூபாய் கோடி அபராதம் விதித்துள்ளது.

  டெல்லி அரசு பனியாளர்களின் சம்பளத்தில் இருந்தும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்களிடம் இருந்தும் பணத்தை பிடித்தம் செய்து இந்த தொகையை செலுத்துமாறும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

  இந்த அபராத தொகையை கட்டத் தவறினால் மாதந்தோறும் 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது. #NGT #AirPollution #DelhiGovt

  வாட் வரியை குறைக்க மறுக்கும் டெல்லி அரசின் முடிவை எதிர்த்து நாளை பெட்ரோல் பங்குகள் 24 மணிநேர வேலைநிறுத்தம் செய்வதால் கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #Petrolpumpsshut #Delhi #Petrolpumpsshut
  புதுடெல்லி:

  நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் மக்கள் அடையும் பாதிப்பை சரிகட்டும் வகையில் அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு (வாட்) வரியை ஓரளவுக்கு குறைத்துள்ளன. 

  இதேபோல், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசும் வாட் வரியை குறைக்க வேண்டும் என இங்குள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த கோரிக்கைக்கு டெல்லி அரசு செவி சாய்க்கவில்லை.

  வெளி இடங்களில் இருந்து டெல்லி வழியாக செல்லும் பல கார், லாரி, பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் வாட் வரி குறைவாக உள்ள அண்டை மாநிலங்களான அரியானா, உத்தரப்பிரதேசம் பகுதியில் பெட்ரோல் நிரப்பினால் ஓரளவுக்கு பணத்தை மிச்சப்படும் என கருதி டெல்லிக்கு உட்பட்ட பங்குகளில் பெட்ரோல், டீசல் நிரப்புவதை தவிர்த்து விடுகின்றனர்.

  இதனால், கடந்த 3 மாதங்களாக டெல்லியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் டீசல் விற்பனை 60 சதவீதம் அளவிலும், பெட்ரோல் விற்பனை 25  சதவீதம் அளவிலும் குறைந்துப் போனதாக பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

  எனவே, வாட் வரியை டெல்லி அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் உள்ள சுமார் 400 பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் பங்குகள் 24 மணிநேர கதவடைப்பு போராட்டத்தில் குதித்துள்ளன.

  இதன் விளைவாக நாளை காலை 6 மணிமுதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிவரை பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது என்பதால் தலைநகர் டெல்லியில் நாளை கால் டாக்சி மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #Petrolpumpsshut #Delhi #Petrolpumpsshut 
  குடியிருப்பு பகுதிகளில் இயங்கிவரும் ஸ்டீல் மெருகு பட்டறைகளை கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. #NGTfines #Delhigovt #steelpicklingunits
  புதுடெல்லி:

  நாட்டின் தலைநகரான டெல்லியில் பல குடியிருப்பு பகுதிகளின் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களில் உள்ள கரைகளை நீக்கி முலாம் பூசும் மெருகு பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த பட்டறைகள் வெளியேற்றும் கழிவுகளால் யமுனை நதியின் நீர் மாசடைந்து வருகிறது.

  குடியிருப்பு பகுதிகளில் இதுபோன்ற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறிய வகையில் வசிர்புர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற வரும் இந்த பட்டறைகளின் மீது நடவடிக்கை எடுத்து மூடுமாறு டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவுக்கு உத்தரவிடக்கோரி ஒரு தொண்டு நிறுவனத்தின் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்துவந்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு, இதுதொடர்பாக உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல் காலதாமதம் செய்துவரும் டெல்லி அரசுக்கு இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

  இதனால், சூற்றுச்சூழல் தொடர்ந்து மாசடைந்து வருவதாக குறிப்பிட்ட நீதிபதிகள் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய டெல்லி அரசுக்கு 50 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

  மேலும், இதுபோல் இயங்கிவரும் அனைத்து பட்டறைகளையும் உடனடியாக மூடுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். #NGTfines #Delhigovt  #steelpicklingunits

  கோசாலையில் 36 பசுக்கள் மர்மமாக உயிரிழந்த விவகாரம் தொடர்பாக டெல்லி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
  புதுடெல்லி:

  டெல்லி துவாரகா பகுதியில் குமனேரா கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் ஒரு கோசாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1,400 பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அப்பணியில் 20 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

  இந்நிலையில், இன்று அங்கு 36 பசுக்கள் இறந்து கிடந்தன. இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. போலீசார், கால்நடை மருத்துவ குழுவை அனுப்பி வைத்தனர். ஏதேனும் நோய் காரணமாக, பசுக்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

  இருப்பினும், பிரேத பரிசோதனை முடிந்த பிறகே உண்மையான காரணம் தெரிய வரும் என்றும், அதன் அடிப்படையில், தேவைப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் துணை கமி‌ஷனர் தெரிவித்தார்.

  இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. “தகவல் கிடைத்ததும் கோசாலைக்கு சென்ற 6 கால்நடை மருத்துவர்கள் இறந்த பசுக்களை பரிசோதனை செய்தார்கள். இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சட்டப்பூர்வமான நடவடிக்கை தொடங்கும்,” என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  ×