என் மலர்

  நீங்கள் தேடியது "Kejriwal"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
  • மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து 230 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது.

  போபால்:

  டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

  மத்திய பிரதேசத்தில் 20 ஆண்டுகளாக அவர்கள் (பா.ஜ.க.வினர்) ஆட்சி செய்தனர். அவர்களுக்கு மாற்றாக ஆம் ஆத்மி வந்துள்ளது. அடுத்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. பிரச்சனைகளை எதிர்கொள்ளும். ஆம் ஆத்மியைப் பார்த்து மோடிஜி (பிரதமர்) அச்சமடைந்து உள்ளார்.

  மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து 230 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும்.

  டெல்லியில் கல்வி பிரிவில் ஆம் ஆத்மி கட்சி புரட்சி செய்துள்ளது. எந்தவொரு கட்சியும், உங்களது குழந்தைகளுக்கு கல்வி வாக்குறுதி அளித்து வாக்கு கேட்கவில்லை. அவர்களுக்கு அதில் விருப்பமும் இல்லை.

  டெல்லி, பஞ்சாப் போன்று மத்திய பிரதேசத்திலும் இலவச மின்சாரம் வழங்கப்படும். மொஹல்லா கிளினிக்குகளை தொடங்கி இலவச சிகிச்சை அளிக்கப்படும். எங்களுக்கு வாக்களித்து ஆட்சி அதிகாரத்திற்கு வர ஒரு வாய்ப்பு வழங்குங்கள். நாங்கள் கூறியவற்றை செய்யவில்லை எனில், அடுத்து வாக்கு கேட்டு உங்களிடம் நான் வரமாட்டேன்.

  ஒருவர் அரசியல் பேரம் பேசி எம்.எல்.ஏ.வை வாங்குகிறார்கள் என கூறுவார்கள். மற்றொருவர் எம்.எல்.ஏ.வை வாங்க தயாராவார்கள். மொத்த தேர்தல் நடைமுறையையே அவர்கள் மாற்றி வைத்துள்ளனர். அரசியலமைப்பையே சந்தைகடையாக ஆக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் கர்நாடகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பேரவைத் தேர்தல் நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
  • மாநிலத்துக்கு மார்ச் 4ம் தேதி பயணம் மேற்கொள்ளும் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் பிரசாரத்தை தொடங்குகிறார்.

  நடப்பாண்டில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் கர்நாடகம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.

  பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் கர்நாடகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பேரவைத் தேர்தல் நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

  இதையொட்டி, அந்த மாநிலத்துக்கு மார்ச் 4ம் தேதி பயணம் மேற்கொள்ளும் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் பிரசாரத்தை தொடங்குவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

  காங்கிரஸ் ஆட்சியில் உள்ள சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு முறையே மார்ச் 5, 13ம் தேதிகளில் கெஜ்ரிவால் செல்ல விருக்கிறார். பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்துக்கு அவர் 14ம் தேதி பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

  இந்த 3 மாநிலங்களிலும் நடப்பாண்டின் பிற்பகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2018ல் நடைபெற்ற இந்த மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி போட்டியிட்ட போதிலும், அக்கட்சிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை.

  கடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 28ல் ஆம் ஆத்மி களமிறங்கி இருந்தது. சத்தீஸ்கரில் 90ல் 85 இடங்களிலும், ராஜஸ்தானில் 200-ல் 142 தொகுதிகளிலும் மத்திய பிரதேசத்தில் 230-ல் 208 இடங்களிலும் அக்கட்சி போட்டியிட்டிருந்தது.

  அண்மைக் காலங்களில் கிடைக்கப் பெற்ற தேர்தல் வெற்றிகளால் உற்சாகத்தில் உள்ள ஆம் ஆத்மி, மேற்கண்ட 4 மாநில தேர்தல்களிலும் மீண்டும் களமிறங்க முடிவு செய்துள்ளது.

  டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி, பஞ்சாப்பில் கடந்த ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற கோவா பேரவைத் தேர்தலில், இரு தொகுதிகள் அக்கட்சிக்கு கிடைத்தன.

  குஜராத்தில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற சட்டசபைத்தேர்தலில், 5 தொகுதிகளைக் கைப்பற்றி, 13 சதவீத வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றது. இந்த வெற்றிகள், ஆம் ஆத்மிக்கு தேசியக் கட்சி அங்கீகாரம் கிடைக்க வழி ஏற்படுத்தின.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்தோனேசியாவில் செய்ய முடியும்போது நம்மால் முடியாதா? என்று கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
  • கரன்சி நோட்டுகளில் நேதாஜி படம் இடம்பெற செய்ய வேண்டும் என இந்து மகாசபை வலியுறுத்தி இருந்தது.

  புதுடெல்லி:

  டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் இந்து கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் ஆகியோரது உருவங்களை இடம்பெற செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

  தொடர்ந்து அவர் கூறும்போது, 'நாம் முயற்சிகளை மேற்கொண்டாலும், கடவுள்களின் ஆசி இல்லையென்றால் சில சமயங்களில் நம்முடைய அந்த முயற்சிக்கு பலன் இருக்காது. அதனால், புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தி உருவமும், மற்றொரு புறம் பெண் கடவுள் லட்சுமி மற்றும் கடவுள் விநாயகர் படங்கள் இடம்பெற வேண்டும். இரு தெய்வங்களின் உருவங்கள் ரூபாய் நோட்டுகளில் இருப்பது, நாட்டை வளம்பெற செய்ய உதவும். இதனால், நாட்டின் பொருளாதார சூழ்நிலை மேம்படும். ஒட்டுமொத்த நாடும் ஆசிகளை பெறும். இதுபற்றி நாளை அல்லது நாளை மறுநாள் நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன்' என்றார்.

  இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் கரன்சியில் விநாயகர் படம் இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் செய்ய முடியும்போது நம்மால் முடியாதா? என்றும் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.

  கடந்த சில நாட்களுக்கு முன், இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக நேதாஜி படம் இடம் பெற வேண்டும் என அகில பாரத இந்து மகாசபை வலியுறுத்தி இருந்தது.

  இதுபற்றி அகில பாரத இந்து மகாசபையின் மாநில செயல் தலைவர் சந்திரசூர் கோஸ்வாமி, கொல்கத்தா நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, இந்திய விடுதலை போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பங்கு எந்த வகையிலும் மகாத்மா காந்திக்கு குறைந்ததில்லை. அதனால், இந்தியாவின் தலைசிறந்த சுதந்திர பேராட்ட வீரர் நேதாஜிக்கு கவுரவம் அளிக்கும் சிறந்த வழி, அவரது புகைப்படம் கரன்சி நோட்டுகளில் இடம்பெற செய்ய வேண்டும். காந்திஜியின் புகைப்படத்திற்கு பதிலாக நேதாஜியின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என கூறினார்.

  இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகர் படங்கள் இடம் பெற வேண்டும் என கெஜ்ரிவால் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதுபோல் பாஜகவால் நானும் கொல்லப்படுவேன் என அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
  புதுடெல்லி:

  பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

  டெல்லியில் நடைபெற்ற பேரணியின்போது தன்னை ஒருவர் கன்னத்தில் அறைந்ததை குறிப்பிட்டு பேசிய அவர், எனது உயிரை குறிவைத்து பாஜகவினர் தூண்டி விடப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களே சுட்டுக் கொன்றதுபோல் என்றாவது ஒருநாள் நான் சுட்டுக் கொல்லபடுவேன்.  என்மீது கொண்ட கருத்து வேற்றுமையால் என் கட்சியை சேர்ந்த பாதுகாப்பு வீரரே என்னை சுட்டுக் கொன்று விட்டதாக போலீசார் அந்த சம்பவத்தை திசை திருப்பி விடுவார்கள்.

  இல்லையென்றால், பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கை ஒரு காங்கிரஸ்காரரோ, மோடியை ஒரு பாஜக தொண்டரோ தாக்கினால் போலீசார் கைகட்டி வேடிக்கை பார்ப்பார்களா? என கெஜ்ரிவால் தனது பேட்டியின்போது கேள்வி எழுப்பினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #AAP #kejriwal
  புதுடெல்லி:

  வரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு நான்கு சீட்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

  இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், “ ஆம் ஆத்மிகட்சியுடன் காங்கிரஸ் கட்சி டெல்லியில் கூட்டணி வைப்பதற்கு பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். இதற்காக ஆம் ஆத்மி கட்சிக்கு 4 சீட்டுகளை ஒதுக்குவதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது. ஆனால் கெஜ்ரிவால் இதற்கு உடன்படவில்லை. எங்களது கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஆனால் அவகாசம் குறைவாக இருக்கிறது” என கூறியுள்ளார்.

  டெல்லியை பொறுத்த வரையில் கருத்துக்கணிப்புகள் அடிப்படையில், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்துப் போட்டியிட்டால் அது பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ##RahulGandhi #AAP  #kejriwal 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதஉணர்வுகளை புண்படுத்தியுள்ளார் என போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. #ArvindKejriwal
  புதுடெல்லி:

  டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.  இவரது கட்சியின் சின்னம் துடைப்பம்.  டுவிட்டரில் செய்திகளை வெளியிட்டு வரும் அவர் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

  அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்று மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அதில், மத சின்னத்தினை நபரொருவர் துடைப்பம் கொண்டு துரத்துவது போன்று ஓவியம் இடம்பெற்று இருந்தது.


  இதனால் கெஜ்ரிவாலுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

  கடந்த சில நாட்களுக்கு முன், ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை வேட்பாளர் ராகவ் சத்தா டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், வீடு வீடாக சென்று பா.ஜ.க. பிரசாரம் செய்கிறது என பதிவிட்டு, வீடு ஒன்றின் வாசலில் பசு மற்றும் கன்று நிற்பது போன்ற புகைப்படத்தினையும் இணைத்து பதிவிட்டார்.  இதனை முதல் மந்திரி கெஜ்ரிவால் லைக் செய்துள்ளார்.

  இதுபற்றி டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.க.வை சேர்ந்த விஜேந்தர் குப்தா கூறும்பொழுது, இந்திய தேர்தல் ஆணையத்திடம் சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளோம்.  பசு நல்லிணக்கத்தின் அடையாளம்.  இதனை ஆம் ஆத்மி அரசியலாக்குகின்றது.  சமூகத்தில் பதற்றத்தினை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.  இதுபற்றி ஆணையத்திடம் எடுத்து கூறுவோம் என கூறினார்.

  இந்த டுவிட்டர் பதிவு தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவது ஆகும்.  இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் டெல்லி பா.ஜ.க. புகார் அளிக்கும் என்றும் கூறினார்.

  இந்த நிலையில், மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் கெஜ்ரிவால் டுவிட்டர் பதிவினை வெளியிட்டு சர்ச்சை கிளப்பி உள்ளார். #ArvindKejriwal
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குஜராத்தில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறும் நிலைக்கு பா.ஜ.க. அரசை குற்றம்சாட்டி மேற்கு வங்காளம் முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். #Gujaratattacks
  கொல்கத்தா:

  குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ரவிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர்.

  அம்மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் எதிரொலியாக குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

  குறிப்பாக, குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் இந்தி பேசும் வெளிமாநில கூலி தொழிலாளிகள் மீது அதிகமான தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  உத்தர் பாரதிய விகாஸ் பரிஷத் தலைவர் மகேஷ்சிங் குஷ்வா சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஒருவர் செய்த தவறுக்கு குஜராத்தி அல்லாத அனைவரையும் குற்றவாளிகளாக கருதி தாக்குதல் நடத்துவதற்கு அவர் எதிர்ப்பும் தெரிவித்துருந்தார்.

  எனினும், இங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என்ற பயத்தில் கடந்த ஒருவார காலத்தில் சுமார் 20 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்த பலர் தொடர்ந்து வெளியேறி வருவதாகவும் பிரபல ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டு வருகின்றன.

  இவ்விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தவறியதற்காக குஜராத் மாநில பா.ஜ.க. அரசுக்கு
  மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  ‘‘இந்த தாக்குதலின் பின்னணியில் சிலரது தூண்டுதல் இருந்துள்ளது. அதனால்தான் மக்கள் அச்சத்தில் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதுபோன்ற தாக்குதல்கள் மிகவும் அபாயகரமான முன்மாதிரியாகி வருகிறது. மிகவும் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய இந்த பிரச்சனை பேரழிவுக்கான பாதையாக மாறிவிட கூடாது. இதை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தவறியது ஏன்? என்பது எனக்கு புரியவில்லை.

  அந்த மக்கள் பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வந்துள்ளனர். குஜராத்தை தங்களது சொந்த மாநிலமாக கருதிவந்த அவர்கள் எல்லாம்  இப்போது பீதி அடைந்துள்ளனர். இது எனக்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது’’ என மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.  இதேபோல், குஜராத்தில் வெளிமாநிலத்தவர்கள் தாக்குதலுக்கு இலக்காகிவரும் நிலைக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் இன்று வெளியிட்டுள்ள பதிவில் ‘‘குஜராத்தில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளால் டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் மக்கள் மிகுந்த வேதனையும், ஆத்திரமும் அடைந்துள்ளனர். இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார். #Gujaratattacks #Gujaratmigrantworkers #Mamata #Attackonmigrantworkers #Gujaratmigrantlabourers
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி இருவரையும் டெல்லி மாநில முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். #ArvindKejriwal #NarendraModi #RahulGandhi
  புதுடெல்லி:

  பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு மசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதுபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டார்.  இந்நிலையில், இதற்காக இருவரையும், டெல்லி மாநில முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி இருப்பதாவது:-

  ராகுல் காந்தி கோவில்களுக்கு சென்று கொண்டிருக்கிறார். மோடி, தற்போது மசூதிகளில் இருக்கிறார். மக்களுக்கு பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, சாலை, மின்சாரம், குடிநீர் ஆகியவை அளிப்பதன் மூலம் மட்டுமே தேசத்தை கட்டி எழுப்ப முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #ArvindKejriwal #NarendraModi #RahulGandhi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடிநீர் இணைப்பு, சாதிச்சான்றிதழ் உள்பட வீடுதேடி வரும் அத்தியாவசிய சேவைகள் திட்டம் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #AAPgovt #Delhidoorstep
  புதுடெல்லி:

  ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் நடைபெறும் ஊழல்களை தடுக்கும் வகையில் டெல்லியில் வீடுதேடி சென்று பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அறிவித்தார். அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

  இந்நிலையில், டெல்லி மக்களுக்கு குடிநீர் இணைப்பு, சாதிச்சான்றிதழ், திருமணப் பதிவு, ஓட்டுனர் உரிமைக்கான விண்னப்பம் உள்பட வீடுதேடி வரும் அத்தியாவசிய சேவைகள் திட்டம் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கப்படும் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆட்சி முறையில் ஒரு புரட்சியாகவும், ஊழலுக்கு வீழ்ச்சியாகவும் உலகிலேயே முதன்முறையாக வீடுதேடி வரும் சேவைகள் என்னும் மக்களுக்கு மிகவும் வசதியான திட்டம் செப்டம்பர் பத்தாம் தேதி தொடங்குகிறது’ என குறிப்பிட்டுள்ளார். #AAPgovt #Delhidoorstep 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இதய அறுவை சிகிச்சைக்காக விரைவில் பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை இன்று அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து நலம் விசாரித்தார். #Kejriwalvisitsheila #SheilaDikshit
  புதுடெல்லி:

  காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி முதல் மந்திரியாக 3 முறை பதவி வகித்தவர் ஷீலா தீட்சித். கடந்த 2012-ம் ஆண்டு இதயத்தின் ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்கு ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை செய்து கொண்ட இவர், தற்போது இதயவில் சார்ந்த கோளாறால் அவதிப்பட்டு வருகிறார்.

  இதற்காக, விரைவில் பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை அவரது வீட்டில் இன்று சந்தித்த டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அவரிடம்  நலம் விசாரித்தார்.

  அரசியலில் முன்னர் பரம எதிரிகளாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வந்த இருவரும் இன்று சந்தித்த செய்தி இருகட்சியினரின் மத்தியிலும் மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது. #Kejriwalvisitsheila  #SheilaDikshit
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print