search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aam aadhmi"

    • ரிங்குவின் நடத்தைக்கு ஆட்சேபித்து, இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றம்.
    • மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ம் தேதியுடன் முடிவடைகிறது.

    பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை உறுப்பினர் சுசில் குமார் ரிங்கு நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    மக்களவையில் கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டதற்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி உறுப்பினர் சுஷில் குமார் ரின்குவை மழைக்கால கூட்டத்தொடர் முழுவதற்கும் மக்களவை இடைநீக்கம் செய்துள்ளது.

    மக்களவை டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா நிறைவேற்றியதால், அவையின் நடுபகுதிக்கு வந்த ரிங்கு காகிதங்களை கிழித்து சபாநாயகர் ஓம் பிர்லா மீது வீசினார்.

    மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, பிர்லா அவையில் நடந்த ரிங்குவின் நடத்தைக்கு ஆட்சேபித்து, ஆம் ஆத்மி உறுப்பினரை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை முன்வைக்க பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் கேட்டார்.

    மக்களவை உறுப்பினர் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக பிர்லா, ரிங்குவை முறையாகப் பெயரிட்டார். அதைத் தொடர்ந்து மழைக்கால அமர்வின் மீதமுள்ள கூட்டத்திற்கு அவரை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அமைச்சர் முன்வைத்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஆம் ஆத்மியின் மக்களவை உறுப்பினர் ரிங்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் கர்நாடகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பேரவைத் தேர்தல் நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
    • மாநிலத்துக்கு மார்ச் 4ம் தேதி பயணம் மேற்கொள்ளும் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    நடப்பாண்டில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் கர்நாடகம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.

    பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் கர்நாடகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பேரவைத் தேர்தல் நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி, அந்த மாநிலத்துக்கு மார்ச் 4ம் தேதி பயணம் மேற்கொள்ளும் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் பிரசாரத்தை தொடங்குவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    காங்கிரஸ் ஆட்சியில் உள்ள சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு முறையே மார்ச் 5, 13ம் தேதிகளில் கெஜ்ரிவால் செல்ல விருக்கிறார். பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்துக்கு அவர் 14ம் தேதி பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த 3 மாநிலங்களிலும் நடப்பாண்டின் பிற்பகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2018ல் நடைபெற்ற இந்த மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி போட்டியிட்ட போதிலும், அக்கட்சிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை.

    கடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 28ல் ஆம் ஆத்மி களமிறங்கி இருந்தது. சத்தீஸ்கரில் 90ல் 85 இடங்களிலும், ராஜஸ்தானில் 200-ல் 142 தொகுதிகளிலும் மத்திய பிரதேசத்தில் 230-ல் 208 இடங்களிலும் அக்கட்சி போட்டியிட்டிருந்தது.

    அண்மைக் காலங்களில் கிடைக்கப் பெற்ற தேர்தல் வெற்றிகளால் உற்சாகத்தில் உள்ள ஆம் ஆத்மி, மேற்கண்ட 4 மாநில தேர்தல்களிலும் மீண்டும் களமிறங்க முடிவு செய்துள்ளது.

    டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி, பஞ்சாப்பில் கடந்த ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற கோவா பேரவைத் தேர்தலில், இரு தொகுதிகள் அக்கட்சிக்கு கிடைத்தன.

    குஜராத்தில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற சட்டசபைத்தேர்தலில், 5 தொகுதிகளைக் கைப்பற்றி, 13 சதவீத வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றது. இந்த வெற்றிகள், ஆம் ஆத்மிக்கு தேசியக் கட்சி அங்கீகாரம் கிடைக்க வழி ஏற்படுத்தின.

    • பாஜக தலைவரை மேயர் பதவிக்கு தேர்ந்தெடுப்பதன் மூலம் மாநகராட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.
    • முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு அளித்த பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த டிசம்பா் 4-ம் தேதி நடைபெற்றது. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களைக் கைப்பற்றியது. இதன்மூலம் 15 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டியது. 250 உறுப்பினா்களைக் கொண்ட மாநகராட்சி தோ்தலில் பா.ஜ.க. 104 வார்டுகளிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வென்றது.

    இதையடுத்து கவுன்சிலர்கள் பதவியேற்புக்குப் பின் மேயர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேயர், துணை மேயர் பதவிகளுக்கு ஆம் ஆத்மி மற்றும் பாஜக இரு தரப்பும் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆளுநரால் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் விவகாரம், மாமன்றத்தில் புயலை கிளப்பியது.

    ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மேயர் தேர்தல், துணை மேயர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளதா என்பது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக மேயர் தேர்தல் தொடர்ந்து 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

    மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றபோதும் கூட, பாஜக தலைவரை மேயர் பதவிக்கு தேர்ந்தெடுப்பதன் மூலம் மாநகராட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது.

    பின்னர், மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என்று உத்தரவிட்டது. இதையடுத்து மேயர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 22ம் தேதி மேயர் தேர்தல் நடத்தும்படி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு அளித்த பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

    இந்நிலையில் டெல்லி மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 266 வாக்குகள் பதிவாகின. இதில், 150 வாக்குகள் பெற்று ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஒப்ராய் அபார வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரேகா குப்தா 116 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

    டெல்லி மேயர் தேர்தலில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஒப்ராய்க்கு அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ×